| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=b3eX9Htx6rQ Add audio link
2.026
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநெல்வாயில் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு ஆனந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு அரத்துறைநாதர் திருவடிகள் போற்றி
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய
மடையின் ஆர் மணிநீர் நெல்வாயிலார்,
நடையின் நால்விரல்கோவணம் நயந்த
உடையினார், எமது உச்சியாரே.
1
வாங்கினார் மதில்மேல் கணை, வெள்ளம்
தாங்கினார், தலைஆய தன்மையர்
நீங்கு நீர நெல்வாயிலார்; தொழ
ஓங்கினார், எமது உச்சியாரே.
2
நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார், தொழ
இச்சையால் உறைவார்; எம் ஈசனார்;
கச்சை ஆவது ஓர் பாம்பினார்; கவின்
இச்சையார்; எமது உச்சியாரே.
3
மறையினார், மழுவாளினார், மல்கு
பிறையினார், பிறையோடு இலங்கிய
நிறையினார் அ நெல்வாயிலார்; தொழும்
இறைவனார், எமது உச்சியாரே.
4
விருத்தன் ஆகி வெண்நீறு பூசிய
கருத்தனார், கனல் ஆட்டு உகந்தவர்,
நிருத்தனார் அ நெல்வாயில் மேவிய
ஒருத்தனார், எமது உச்சியாரே.
5
Go to top
காரின் ஆர் கொன்றைக்கண்ணியார், மல்கு
பேரினார், பிறையோடு இலங்கிய
நீரினார் அ நெல்வாயிலார்; தொழும்
ஏரினார், எமது உச்சியாரே.
6
ஆதியார், அந்தம் ஆயினார், வினை
கோதியார், மதில் கூட்டுஅழித்தவர்,
நீதியார் அ நெல்வாயிலார்; மறை
ஓதியார், எமது உச்சியாரே.
7
பற்றினான் அரக்கன் கயிலையை
ஒற்றினார், ஒருகால்விரல் உற,
நெற்றி ஆர நெல்வாயிலார்; தொழும்
பெற்றியார், எமது உச்சியாரே.
8
நாடினார் மணிவண்ணன், நான்முகன்,
கூடினார் குறுகாத கொள்கையா
நீடினார் அ நெல்வாயிலார்; தலை
ஓடினார், எமது உச்சியாரே.
9
குண்டுஅமண், துவர்க்கூறை மூடர், சொல்
பண்டம் ஆக வையாத பண்பினர்
விண் தயங்கு நெல்வாயிலார்; நஞ்சை
உண்ட கண்டர், எம் உச்சியாரே.
10
Go to top
நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை,
பண் பயன்கொளப் பாட வல்லவர்,
விண் பயன்கொளும் வேட்கையாளரே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநெல்வாயில்
2.026
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புடையின் ஆர் புள்ளி கால்
Tune - இந்தளம்
(திருநெல்வாயில் அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)