சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.094   திருநாவுக்கரசர்   தேவாரம்

தொழற்பாலதே திருக்குறுந்தொகை - திருக்குறுந்தொகை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=nxL821I7nZA   Add audio link Add Audio

அண்டத்தானை, அமரர் தொழப்படும்
பண்டத்தானை, பவித்திரம் ஆம் திரு-
முண்டத்தானை, முற்றாத இளம்பிறைத்-
துண்டத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

1

முத்து ஒப்பானை, முளைத்து எழு கற்பக-
வித்து ஒப்பானை, விளக்கு இடை நேர் ஒளி
ஒத்து ஒப்பானை, ஒளிர் பவளத்திரள்-
தொத்து ஒப்பானை-கண்டீர்-தொழல்பாலதே.

2

பண் ஒத்தானை, பவளம் திரண்டது ஓர்
வண்ணத்தானை, வகை உணர்வான் தனை,
எண்ணத்தானை, இளம்பிறை போல் வெள்ளைச்-
சுண்ணத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

3

விடலையானை, விரை கமழ் தேன் கொன்றைப்-
படலையானை, பலி திரிவான் செலும்
நடலையானை, நரி பிரியாதது ஓர்
சுடலையானை-கண்டீர்-தொழல்பாலதே.

4

பரிதியானை, பல்வேறு சமயங்கள்
கருதியானை, கண்டார் மனம் மேவிய
பிரிதியானை, பிறர் அறியாதது ஓர்
சுருதியானை-கண்டீர்-தொழல்பாலதே.

5
Go to top

ஆதியானை, அமரர் தொழப்படும்
நீதியானை, நியம நெறிகளை
ஓதியானை, உணர்தற்கு அரியது ஓர்
சோதியானை-கண்டீர்-தொழல்பாலதே.

6

ஞாலத்தானை, நல்லானை, வல்லார் தொழும்
கோலத்தானை, குணப்பெருங்குன்றினை,
மூலத்தானை, முதல்வனை, மூ இலைச்-
சூலத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

7

ஆதிப்பால் அட்டமூர்த்தியை, ஆன் அஞ்சும்
வேதிப்பானை, நம்மேல் வினை வெந்து அறச்
சாதிப்பானை, தவத்து இடை மாற்றங்கள்
சோதிப்பானை-கண்டீர்-தொழல்பாலதே.

8

நீற்றினானை, நிகர் இல் வெண்கோவணக்-
கீற்றினானை, கிளர் ஒளிச் செஞ்சடை
ஆற்றினானை, அமரர்தம் ஆர் உயிர்
தோற்றினானை-கண்டீர்-தொழல்பாலதே.

9

விட்டிட்டானை, மெய்ஞ்ஞானத்து; மெய்ப்பொருள்
கட்டிட்டானை; கனங்குழைபால் அன்பு-
பட்டிட்டானை; பகைத்தவர் முப்புரம்
சுட்டிட்டானை-கண்டீர்-தொழல்பாலதே.

10
Go to top

முற்றினானை; இராவணன் நீள் முடி
ஒற்றினானை, ஒருவிரலால் உற;
பற்றினானை, ஓர் வெண்தலை; பாம்பு அரைச்
சுற்றினானை-கண்டீர்-தொழல்பாலதே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: தொழற்பாலதே திருக்குறுந்தொகை
5.094   திருநாவுக்கரசர்   தேவாரம்   அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை,
Tune - திருக்குறுந்தொகை   (தொழற்பாலதே திருக்குறுந்தொகை )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000