சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: இராமேசுரம்
983   வாலவயதாகி     984   வானோர் வழுத்துனது    
983   இராமேசுரம்   வாலவயதாகி  
தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன தானதன தானதன
          தானதன தானதன தானதன தானதன ...... தனதான

வாலவய தாகியழ காகிமத னாகிபணி
     வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
          வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி
வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
     வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
          மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த்
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
     கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
          சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற்
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
     சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்
          சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ
நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
     யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
          நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
     லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
          ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா
ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
     வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு
          மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
     பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ
          யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே.


வால வயதாகி அழகாகி மதனாகி பணி
    வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி விழல்
    வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமோடு பொருள் தேடி
வாச புழுகு ஏடு மலரோடு மனமாகி மகிழ்
    வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி விலை
    மாதர்களை மேவி அவர் ஆசை தனிலே சுழல சில நாள் போய்
தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு
    கால்கள் தடுமாறி செவி மாறி பசு பாச பதி
    சூழ் கதிகள் மாறி சுகம் மாறி தடியோடு திரி உறு நாளில்
சூலை சொறி ஈளை வலி வாதமோடு நீரிழிவு
    சோகைகள மாலை சுரமோடு பிணி தூறிருமல்
    சூழல் உற மூல கசுமாலம் என நாறி உடல் அழிவேனோ
நாலுமுகன் ஆதி அரி ஓம் என அதாரம் உரை
    யாத பிரமாவை விழ மோதி பொருள் ஓதுக என
    நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே
நாறு இதழி வேணி சிவ ரூப கலியாணி முதல்
    ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி
    ஞான குற மாதை தின காவில் மணமேவு புகழ் மயில் வீரா
ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம்
    வாலியோடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும்
    ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக
ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை
    பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவே
    ஓத மறை ராமெசுர மேவும் குமரா அமரர் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=yvYF8qUtUX8
Add (additional) Audio/Video Link

Back to Top

984   இராமேசுரம்   வானோர் வழுத்துனது  
தானா தனத்ததன தானா தனத்ததன
     தானா தனத்ததன ...... தனதான

வானோர் வழுத்துனது பாதா ரபத்மமலர்
     மீதே பணிக்கும்வகை ...... யறியாதே
மானார் வலைக்கணதி லேதூ ளிமெத்தையினி
     லூடே யணைத்துதவு ...... மதனாலே
தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக
     ளேதோ வெனக்கலவி ...... பலகோடி
தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு
     சேறா டல்பெற்றதுய ...... ரொழியேனோ
மேனா டுபெற்றுவளர் சூரா திபற்கெதிரி
     னூடே கிநிற்குமிரு ...... கழலோனே
மேகா ரவுக்ரபரி தானே றிவெற்றிபுனை
     வீரா குறச்சிறுமி ...... மணவாளா
ஞானா பரற்கினிய வேதா கமப்பொருளை
     நாணா துரைக்குமொரு ...... பெரியோனே
நாரா யணற்குமரு காவீ றுபெற்றிலகு
     ராமே சுரத்திலுறை ...... பெருமாளே.


வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர்
    மீதே பணிக்கும் வகை அறியாதே
மானார் வலைக் கண் அதிலே தூளி மெத்தையினில்
    ஊடே அணைத்து உதவும் அதனாலே
தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள்
    ஏதோ எனக் கலவி பல கோடி
தீரா மயக்கினொடு நாகா படத்தில் எழு
    சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ
மேல்நாடு பெற்று வளர் சூர அதிபற்கு எதிரின்
    ஊடு ஏகி நிற்கும் இரு கழலோனே
மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை
    வீரா குறச் சிறுமி மணவாளா
ஞானா பரற்கு இனிய வேத ஆகமப் பொருளை
    நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே
நாராயணற்கு மருகா வீறு பெற்று இலகு
    ராமேசுரத்தில் உறை பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000