| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: இலஞ்சி
971 கரம் கமலம் மின் 972 கொந்தள வோலை குலு 973 சுரும்பு அணி 974 மாலையில் வந்து
971
இலஞ்சி கரம் கமலம் மின் தனந்த தனதன தனந்த தனதன
தனந்த தனதன ...... தனதான
கரங்க மலமின தரம்ப வளம்வளை
களம்ப கழிவிழி ...... மொழிபாகு
கரும்ப முதுமலை குரும்பை குருகுப
கரும்பி டியினடை ...... யெயின்மாதோ
டரங்க நககன தனங்கு தலையிசை
யலங்க நியமுற ...... மயில்மீதே
அமர்ந்து பவவினை களைந்து வருகொடி
யவந்த கனகல ...... வருவாயே
தரங்க முதியம கரம்பொ ருததிரை
சலந்தி நதிகும ...... ரெனவான
தலம்ப ரவமறை புலம்ப வருசிறு
சதங்கை யடிதொழு ...... பவராழி
இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப
னிரண்டு புயமலை ...... கிழவோனே
இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு
இலஞ்சி மருவிய ...... பெருமாளே.
கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை
களம் பகழி விழி.....மொழி பாகு
கரும்பு அமுது முலை குரும்பை குருகு
பகரும் பிடியின் நடை.....எயின் மாதோடு
அரங்க நக கன தனம் குதலை இசை
அலங்க நிய(ம)ம் உற.....மயில் மீதே
அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய
அந்தகன் அகல.....வருவாயே
தரங்கம் முதிய மகரம் பொருத திரை
சல(ந்)தி நதி குமரன்.....என வான
தலம் பரவ மறை புலம்ப வரு சிறு
சதங்கை அடி தொழுபவர்.....ஆழி
இரங்கு தொ(ல்)லை திரு அரங்கர் மருக
பனிரண்டு புய மலை.....கிழவோனே
இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு
இலஞ்சி மருவிய.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
972
இலஞ்சி கொந்தள வோலை குலு தந்தன தான தனந்தன தானத்
தந்தன தான தனந்தன தானத்
தந்தன தான தனந்தன தானத் ...... தனதான
கொந்தள வோலை குலுங்கிட வாளிச்
சங்குட னாழி கழன்றிட மேகக்
கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் ...... பனிநீர்சேர்
கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக்
கண்கயல் மேனி சிவந்திட கோவைக்
கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் ...... கடலூடே
சந்திர ஆர மழிந்திட நூலிற்
பங்கிடை யாடை துவண்டிட நேசத்
தந்திட மாலு ததும்பியு மூழ்குற் ...... றிடுபோதுன்
சந்திர மேனி முகங்களு நீலச்
சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச்
சந்திர வாகு சதங்கையு மோசற் ...... றருள்வாயே
சுந்தரர் பாட லுகந்திரு தாளைக்
கொண்டுநல் தூது நடந்தவ ராகத்
தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் ...... சிவகாமி
தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச்
சங்கரி மோக சவுந்தரி கோலச்
சுந்தரி காளி பயந்தரு ளானைக் ...... கிளையோனே
இந்திர வேதர் பயங்கெட சூரைச்
சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக்
கின்புற மேவி யிருந்திடு வேதப் ...... பொருளோனே
எண்புன மேவி யிருந்தவள் மோகப்
பெண்திரு வாளை மணந்திய லார்சொற்
கிஞ்சியளாவு மிலஞ்சிவி சாகப் ...... பெருமாளே.
கொந்தளம் ஓலை குலுங்கிட வாளிச்
சங்குடன் ஆழி கழன்றிட மேகக்
கொண்டைகள் மாலை சரிந்திட வாசப்பனி.....நீர் சேர்
கொங்கைள் மார்பு குழைந்திட வாளிக்
கண் கயல் மேனி சிவந்திட கோவைக்
கொஞ்சிய வாய் இரசம் கொடு மோகக்.....கடலூடே
சந்திர ஆரம் அழிந்திட நூலில்
பங்கு இடை ஆடை துவண்டிட நேசம்
தந்திட மாலு(ம்) ததும்பியும் மூழ்குற்றிடு.....போது உன்
சந்திர மேனி முகங்களு(ம்) நீலச்
சந்த்ரகி மேல் கொடு அமர்ந்திடு பாதச்
சந்திர வாகு சதங்கையுமோ சற்று.....அருள்வாயே
சுந்தரர் பாடல் உகந்து இரு தாளைக்
கொண்டு நல் தூது நடந்தவர் ஆகத்
தொந்தமொடு ஆடி இருந்தவள் ஞானச்.....சிவகாமி
தொண்டர்கள் ஆகம் அமர்ந்தவள் நீலச்
சங்கரி மோக சவுந்தரி கோலச்
சுந்தரி காளி பயந்து அருள் ஆனைக்கு.....இளையோனே
இந்திர வேதர் பயம் கெட சூரைச்
சிந்திட வேல் கொடு எறிந்து நல் தோகைக்கு
இன்புற மேவி இருந்திடு வேதப்.....பொருளோனே
எண் புனம் மேவி இருந்தவள் மோகப்
பெண் திருவாளை மணந்து இயல் ஆர் சொற்கு
இஞ்சி அளாவும் இலஞ்சி விசாகப்.....பெருமாளே. Add (additional) Audio/Video Link
973
இலஞ்சி சுரும்பு அணி தனந்தன தந்த தனந்தன தந்த
தனந்தன தந்த ...... தனதானா
சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
துரந்தெறி கின்ற ...... விழிவேலால்
சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு
சுருண்டும யங்கி ...... மடவார்தோள்
விரும்பிவ ரம்பு கடந்துந டந்து
மெலிந்துத ளர்ந்து ...... மடியாதே
விளங்குக டம்பு விழைந்தணி தண்டை
விதங்கொள்ச தங்கை ...... யடிதாராய்
பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற
பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே
புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள்
புரந்தரன் வஞ்சி ...... மணவாளா
இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய்
குரும்பைம ணந்த ...... மணிமார்பா
இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று
இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே.
சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு
துரந்து எறிகின்ற.....விழி வேலால்
சுழன்று சுழன்று துவண்டு துவண்டு
சுருண்டு மயங்கி.....மடவார் தோள்
விரும்பி வரம்பு கடந்து நடந்து
மெலிந்து தளர்ந்து.....மடியாதே
விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை
விதம் கொள் சதங்கை.....அடி தாராய்
பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற
பொன் அம் கிரி ஒன்றை.....எறிவோனே
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள்
புரந்தரன் வஞ்சி.....மணவாளா
இரும் புன மங்கை பெரும் புளகம் செய்
குரும்பை மணந்த.....மணி மார்பா
இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று
இலஞ்சி அமர்ந்த.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link
974
இலஞ்சி மாலையில் வந்து தான தனந்த தான தனந்த
தனா தனந்த ...... தனதான
மாலையில் வந்து மாலை வழங்கு
மாலை யநங்கன் ...... மலராலும்
வாடை யெழுந்து வாடை செறிந்து
வாடை யெறிந்த ...... அனலாலுங்
கோல மழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி ...... தளராமுன்
கூடிய கொங்கை நீடிய அன்பு
கூரவு மின்று ...... வரவேணும்
கால னடுங்க வேலது கொண்டு
கானில் நடந்த ...... முருகோனே
கான மடந்தை நாண மொழிந்து
காத லிரங்கு ...... குமரேசா
சோலை வளைந்து சாலி விளைந்து
சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே
சூரிய னஞ்ச வாரியில் வந்த
சூரனை வென்ற ...... பெருமாளே.
மாலையில் வந்து மாலை வழங்கு
மாலை அனங்கன்.....மலராலும்
வாடை எழுந்து வாடை செறிந்து
வாடை எறிந்த.....அனலாலும்
கோலம் அழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி.....தளரா முன்
கூடிய கொங்கை நீடிய அன்பு
கூரவும் இன்று.....வரவேணும்
காலன் நடுங்க வேல் அது கொண்டு
கானில் நடந்த.....முருகோனே
கான மடந்தை நாண மொழிந்து
காதல் இரங்கு.....குமரேசா
சோலை வளைந்து சாலி விளைந்து
சூழும் இலஞ்சி.....மகிழ்வோனே
சூரியன் அஞ்ச வாரியில் வந்த
சூரனை வென்ற.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link