| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: உத்தரகோசமங்கை
982 கற்பக ஞானக் கடவுள்
982
உத்தரகோசமங்கை கற்பக ஞானக் கடவுள் தத்தன தானத் தனதன தந்தத்
தத்தன தானத் தனதன தந்தத்
தத்தன தானத் தனதன தந்தத் ...... தனதான
கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்
திற்புத சேனைக் கதிபதி யின்பக்
கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் ...... கரைபால்தேன்
கட்டிள நீர்முக் கனிபய றம்பொற்
றொப்பையி னேறிட் டருளிய தந்திக்
கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் ...... பரியாய
பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப்
பொற்சரி நாதப் பரிபுர என்றுப்
பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் ...... தினிதேயான்
பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்
றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற்
றுப்புக லாகத் தமுதையு முண்டிட் ...... டிடுவேனோ
தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்
குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக்
கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் ...... செவையாகித்
திக்கய மாடச் சிலசில பம்பைத்
தத்தன தானத் தடுடுடு வென்கச்
செப்பறை தாளத் தகுதொகு வென்கச் ...... சிலபேரி
உற்பன மாகத் தடிபடு சம்பத்
தற்புத மாகத் தமரர்பு ரம்பெற்
றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் ...... தொடுவேலா
உட்பொருள் ஞானக் குறமக ளும்பற்
சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்
றுத்தர கோசத் தலமுறை கந்தப் ...... பெருமாளே.
கற்பக ஞானக் கடவுள் முன் அண்டத்தில்
புத சேனைக்கு அதிபதி இன்பக்
கள் கழை பாகு அப்பம் அமுது வெண் சர்க்கரை பால் தேன்
கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன்
தொப்பையின் ஏறிட்டு அருளிய தந்திக்
கட்டு இளையாய் பொன் பதம் அது இறைஞ்சிப் பரியாய
பொன் சிகியாய் கொத்து உருண் மணித் தண்டை
பொன் சரி நாதப் பரி புர என்றுப்
பொற்பு உற ஓதிக் கசிவொடு சிந்தித்து இனிதே யான்
பொன் புகழ் பாடிச் சிவ பதமும் பெற்றுப்
பொருள் ஞானப் பெரு வெளியும் பெற்று
புகல் ஆகத்து அமுதையும் உண்டிட்டு இடுவேனோ
தெற்பம் உள ஆகத் திரள் பரி உம்பல்
குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்கு
எட்டையும் மூடிக் குருதிகள் மங்குல் செவை ஆகி
திக்(கு) கயம் ஆடச் சிலசில பம்பைத்
தத்தன தானத் தடுடுடு என்கச்
செப்பு அறை தாளம் தகு தொகு என்க சில பேரி
உற்பனமாக தடி படு சம்பத்து
அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று
உள் செல்வம் மேவிக் கன மலர் சிந்தத் தொடு வேலா
உள் பொருள் ஞானக் குற மகள் உம்பல்
சித்திரை நீடப் பரி மயில் முன் பெற்று
உத்தர கோசத் தலம் உறை கந்தப் பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=0hsaYjOlozg
Add (additional) Audio/Video Link