| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: சீகாழி
764 அலைகடல் சிலை 765 இரதமான தேன் 766 ஊனத்தசை தோல்கள் 767 ஒய்யா ரச்சிலை 768 கட்காமக்ரோத 769 கொங்கு லாவிய 770 சந்தனம் பரிமள 771 சருவி இகழ்ந்து 772 சிந்து உற்று எழு 773 செக்கர்வானப் பிறை 774 தினமணி சார்ங்க 775 பூமாது உரமேயணி 776 மதனச்சொற் கார 777 விடம் என மிகுத்த
764
சீகாழி அலைகடல் சிலை தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தந்ததான
அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்
அரிவையர் வசையுட னங்கி போல்வர
அசைவன விடைமணி யன்றில் கோகிலம் ...... அஞ்சிநானும்
அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ
அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற
அணிபணி மணிபல வெந்து நீறெழ ...... அங்கம்வேறாய்
முலைகனல் சொரிவர முன்பு போல்நினை
வழிவச மறஅற நின்று சோர்வுற
முழுதுகொள் விரகனல் மொண்டு வீசிட ...... மங்கிடாதே
முருகவிழ் திரள்புய முந்து வேலணி
முளரியொ டழகிய தொங்கல் தாரினை
முனிவற நினதருள் தந்தென் மாலைமு ...... னிந்திடாதோ
சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி
திரிபுரை பயிரவி திங்கள் சூடிய
திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் ...... சிங்கமேறி
திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள்
திமிலையொ டறைபறை நின்று மோதிட
சிவனுட னடம்வரு மங்கை மாதுமை ...... தந்தவேளே
மலைதனி லொருமுநி தந்த மாதுதன்
மலரடி வருடியெ நின்று நாடொறு
மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி ...... தொண்டினோனே
மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர
மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில்
வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் ...... தம்பிரானே.
அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும்
அரிவையர் வசையுடன் அங்கி போல் வர
அசைவன விடை மணி அன்றில் கோகிலம் அஞ்சி நானும்
அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ
அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற
அணி பணி மணி பல வெந்து நீறு எழ அங்கம் வேறாய்
முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம்
அற அற நின்று சோர்வு உற
முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட மங்கிடாதே
முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி முளரியொடு
அழகிய தொங்கல் தாரினை
முனிவு அற நினது அருள் தந்து என் மாலை
முனிந்திடாதோ
சிலை நுதல் கயல் விழி செம் சொல் வானவி
திரி புரை பயிரவி திங்கள் சூடிய திகழ் சடை நெடியவள்
செம்பொன் மேனியள் சிங்கம் ஏறி
திரள் படை அலகைகள் பொங்கு கோடுகள்
திமிலையொடு அறை பறை நின்று மோதிட
சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை தந்த வேளே
மலை தனில் ஒரு முநி தந்த மாது தன் மலர் அடி வருடியெ
நின்று நாள் தொறும்
மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே
மழை முகில் தவழ் தரும் மண்டு கோபுர
மதிள் வயல் புடை உற விஞ்சு காழியில்
வரும் ஒரு கவுணியர் மைந்த தேவர்கள் தம்பிரானே. Add (additional) Audio/Video Link
765
சீகாழி இரதமான தேன் தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
இரத மான தேனூற லதர மான மாமாத
ரெதிரி லாத பூணார ...... முலைமீதே
இனிது போடு மேகாச உடையி னாலு மாலால
விழியி னாலு மாலாகி ...... யநுராக
விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு
ம்ருகம தாதி சேரோதி ...... நிழல்மூழ்கி
விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும்
விழல னாய்வி டாதேநி ...... னருள்தாராய்
அரக ராஎ னாமூடர் திருவெ ணீறி டாமூடர்
அடிகள் பூசி யாமூடர் ...... கரையேற
அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர்
அறம்வி சாரி யாமூடர் ...... நரகேழிற்
புரள வீழ்வ ரீராறு கரவி நோத சேய்சோதி
புரண பூர ணாகார ...... முருகோனே
புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு
புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.
இரதமான தேன் ஊறல் அதரமான மா மாதர்
எதிர் இலாத பூண் ஆரம் முலை மீதே
இனிது போடும் ஏகாசம் உடையினாலும் ஆலால
விழியினாலும் மால் ஆகி
அநுராக விரகம் ஆகியே பாயல் இடைவிடாமல் நாடோறும்
ம்ருகமத ஆதிசேர் ஓதி நிழல் மூழ்கி
விளையும் மோக மா மாயை கழலுமாறு
நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள் தாராய்
அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள்
பூசியா மூடர்
கரை ஏற அறிவு நூல் க(ல்)லா மூடர் நெறியிலே நி(ல்)லா
மூடர்
அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் புரள வீழ்வர்
ஈராறு கர விநோத சேய் சோதி
புரணம் பூரணாகார முருகோனே
புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி
வாழ் தேவர் பெருமாளே. Add (additional) Audio/Video Link
766
சீகாழி ஊனத்தசை தோல்கள் தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த
தானத்தன தான தனந்த ...... தனதான
ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும்
ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து
ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக்
கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே
கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று
கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத்
தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா
கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து
காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர்
காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து
காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.
ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி மாயம் மிகுந்த
ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும்
ஓதப் படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும்
கோலம் எழுந்து ஓடித் தடுமாறி உழன்று தளர்வாகி
கூனித் தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
கூளச் சடம் ஈதை உகந்து புவி மீதே
கூசப் பிரமாண ப்ரபஞ்ச மாயக் கொடு நோய்கள் அகன்று
கோலக் கழலே பெற இன்று அருள்வாயே
சேனக் குரு கூடலில் அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச் சமணோர் கழுவின் கண் மிசை ஏற
தீரத் திரு நீறு புரிந்து மீனக் கொடியோன் உடல் துன்று
தீமைப் பிணி தீர உவந்த குருநாதா
கானச் சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து
காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர்
காணக் கணியாக வளர்ந்து ஞானக் குற மானை மணந்து
காழிப் பதி மேவி உகந்த பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=lxYb4KhGsoU
Add (additional) Audio/Video Link
767
சீகாழி ஒய்யா ரச்சிலை தய்யா தத்தன தானன தானன
தய்யா தத்தன தானன தானன
தய்யா தத்தன தானன தானன ...... தனதான
ஒய்யா ரச்சிலை யாமென வாசனை
மெய்யா ரப்பணி பூஷண மாலைக
ளுய்யா நற்கலை யேகொடு மாமத ...... விதமாகி
ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு
கையா ரக்கணை மோதிர மேய்பல
வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு ...... முடல்பேணிச்
செய்வா ரிப்படி யேபல வாணிப
மிய்யா ரிற்பண மேயொரு காசிடை
செய்யார் சற்பனை காரர்பி சாசரு ...... னடிபேணாச்
செய்வா ரிற்படு நானொரு பாதகன்
மெய்யா எப்படி யோர்கரை சேர்வது
செய்யா யற்புத மேபெற வோர்பொரு ...... ளருள்வாயே
மையா ரக்கிரி யேபொடி யாய்விட
பொய்சூ ரப்பதி யேகெட வானவர்
வையாய் பொற்சர ணாஎன வேதொழ ...... விடும்வேலா
வையா ளிப்பரி வாகன மாகொளு
துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய்
மைபோ லக்கதி ரேய்நிற மாகிய ...... மயில்வாழ்வே
தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ்
செய்யா முத்தமி ழாகர னேபுகழ்
தெய்வீ கப்பர மாகுரு வேயென ...... விருதூதத்
திய்யா ரக்கழு வேறிட நீறிடு
கையா அற்புத னேபிர மாபுர
செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
ஒய்யாரச் சிலையாம் என வாசனை மெய் ஆரப் பணி பூஷண
மாலைகள் உய்யா நற் கலையே கொடு மா மத இதமாகி
ஒவ்வார் இப்படியோர் எனவே இரு கை ஆரக் கணை
மோதிரம் ஏய் பல உள்ளார்
செப்பிட ஏம் உற நாளிலும் உடல்பேணிச் செய்வார் இப்படியே
பல வாணிபம்
இய்யார் இல் பணமே ஒரு காசு இடை செய்யார் சற்பனைகாரர்
பிசாசர் உ(ன்)னடி பேணாச் செய்வாரில் படு நான் ஒரு
பாதகன்
மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது செய்யா அற்புதமே பெற ஓர்
பொருள் அருள்வாயே
மை ஆர் அக் கிரியே பொடியாய் விட பொய் சூர் அப்பதியே
கெட வானவர் வையாய் பொன் சரணா எனவே தொழ விடும்
வேலா
வையாளிப் பரி வாகன மா கொளு துவ்வு ஆழிக் கடல் ஏழ்
மலை தூளி செய் மை போலக் கதிர் ஏய் நிறமாகிய மயில்
வாழ்வே
தெய்வ யானைக்கு அரசே குற மான் மகிழ் செய்யா முத்தமிழ்
ஆகரனே புகழ் தெய்வீகப் பரமா குருவே என விருது ஊத
திய்யார் அக் கழு ஏறிட நீறு இடு கையா அற்புதனே மா புர
செய் காழிப் பதி வாழ் முருகா சுரர் பெருமாளே. Add (additional) Audio/Video Link
768
சீகாழி கட்காமக்ரோத தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
கட்கா மக்ரோ தத்தே கட்சீ
மிழ்த்தோர் கட்குக் ...... கவிபாடிக்
கச்சா பிச்சா கத்தா வித்தா
ரத்தே யக்கொட் ...... களைநீளக்
கொட்கா லக்கோ லக்ஆகா ணத்தே
யிட்டா சைப்பட் ...... டிடவேவை
கொட்டா னக்கூ னுக்கா எய்த்தே
னித்தீ தத்தைக் ...... களைவாயே
வெட்கா மற்பாய் சுற்றூ மர்ச்சேர்
விக்கா னத்தைத் ...... தரிமாறன்
வெப்பா றப்பா டிக்கா ழிக்கே
புக்காய் வெற்பிற் ...... குறமானை
முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய்
முற்சார் செச்சைப் ...... புயவீரா
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.
கள் காம க்ரோதத்தே கண் சீமிழ்த்தோர்கட்குக் கவி பாடி
கச்சா பிச்சாகத் தாவித்து ஆரத்தே அக் கொட்களை நீளக்
கொள்கால்
அக்கோலக் கோணத்தே இட்டு ஆசைப் பட்டிடவே வை
கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இத்தீது அத்தைக்
களைவாயே
வெட்காமல் பாய் சுற்று ஊமர்ச் சேர் விக்கானத்தைத் தரி
மாறன் வெப்பு ஆறப் பாடிக் காழிக்கே புக்காய்
வெற்பில் குறமானை முள் கானில் கால் வைத்து ஓடிப் போய்
முற்சார் செச்சைப் புய வீரா
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
769
சீகாழி கொங்கு லாவிய தந்த தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன ...... தனதான
கொங்கு லாவிய குழலினு நிழலினு
நஞ்ச ளாவிய விழியினு மிரணிய
குன்று போல்வளர் முலையினு நிலையினு ...... மடமாதர்
கொம்பு சேர்வன இடையினு நடையினு
மன்பு கூர்வன மொழியினு மெழில்குடி
கொண்ட சேயித ழமுதினு நகையினு ...... மனதாய
சங்கை யாளியை அணுவிடை பிளவள
வின்சொல் வாசக மொழிவன இவையில
சம்ப்ர தாயனை அவலனை ஒளிதிக ...... ழிசைகூருந்
தண்டை நூபுர மணுகிய இருகழல்
கண்டு நாளவ மிகையற விழியருள்
தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே
வங்க வாரிதி முறையிட நிசிசரர்
துங்க மாமுடி பொடிபட வடவனல்
மங்கி நீறெழ அலகைகள் நடமிட ...... மயிலேறி
வஞ்ச வேல்கொடு முனிபவ அழகிய
சண்பை மாநக ருறையுமொ ரறுமுக
வந்த வானவர் மனதினி லிடர்கெட ...... நினைவோனே
பங்க வீரியர் பறிதலை விரகினர்
மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர்
பந்த மேவிய பகடிகள் கபடிகள் ...... நிலைகேடர்
பண்பி லாதவர் கொலைசெயு மனதின
ரிங்கெ ணாயிர ருயரிய கழுமிசை
பஞ்ச பாதகர் முனைகெட அருளிய ...... பெருமாளே.
கொங்கு உலாவிய குழலினு(ம்) நிழலினு(ம்) நஞ்சு அளாவிய
விழியினும் இரணிய குன்று போல் வளர் முலையினு(ம்)
நிலையினு(ம்) மடமாதர் கொம்பு சேர்வன இடையினு(ம்)
நடையினு(ம்)
அன்பு கூர்வன மொழியினும் எழில் குடி கொண்ட சேய்
இதழினு(ம்) நகையினு(ம்) மனது ஆய சங்கையாளியை அணு
இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல
சம்ப்ர தாயனை அவலனை
ஒளி திகழ் இசை கூரும் தண்டை நூபுரம் அணுகிய இரு கழல்
கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள் தந்த பேர் அருள்
கனவிலும் நனவிலும் மறவேனே
வங்க வாரிதி முறை இட நிசிசரர் துங்க மா முடி பொடிபட
வட அனல் மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட மயில் ஏறி
வஞ்ச வேல் கொ(ண்)டு முனிபவ
அழகிய சண்பை மா நகர் உறையும் ஒர் அறு முக வந்த
வானவர் மனதினில் இடர் கெட நினைவோனே
பங்க வீரியர் பறி தலை விரகினர் மிஞ்சு பாதகர் அற நெறி
பயன் இலர் பந்தம் மேவிய பகடிகள் கபடிகள் நிலை கேடர்
பண்பு இலாதவர் கொலை செயும் மனதினர்
இங்கு எ(ண்)ணாயிரர் உயரிய கழு மிசை பஞ்ச பாதகர் முனை
கெட அருளிய பெருமாளே. Add (additional) Audio/Video Link
770
சீகாழி சந்தனம் பரிமள தந்த தந்தன தனதன தனதன
தந்த தந்தன தனதன தனதன
தந்த தந்தன தனதன தனதன ...... தனதான
சந்த னம்பரி மளபுழு கொடுபுனை
கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை
தங்கு செங்கையர் அனமென வருநடை ...... மடமாதர்
சந்த தம்பொலி வழகுள வடிவினர்
வஞ்ச கம்பொதி மனதின ரணுகினர்
தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர ...... அவர்மீதே
சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்
தந்த்ர மந்த்ரிகள் தரணியி லணைபவர்
செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியு ...... முனிவாகித்
திங்க ளொன்றினில் நெனல்பொரு ளுதவில
னென்று சண்டைகள் புரிதரு மயலியர்
சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி ...... னருள்கூர்வாய்
மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர்
சிந்த அன்றடர் மழைதனி லுதவிய
மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ் ...... மருகோனே
மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ
துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல்
வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி ...... மணவாளா
தந்த னந்தன தனதன தனவென
வண்டு விண்டிசை முரல்தரு மணமலர்
தங்கு சண்பக முகிலள வுயர்தரு ...... பொழில்மீதே
சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு
துங்க வொண்பணி மணிகளும் வெயில்விடு
சண்பை யம்பதி மருவிய அமரர்கள் ...... பெருமாளே.
சந்தனம் பரிமள புழுகொடு புனை கொங்கை வஞ்சியர்
சரியொடு கொடுவளை தங்கு செம் கையர் அ(ன்)னம் என
வரு நடை மடமாதர்
சந்ததம் பொலி அழகுள வடிவினர் வஞ்சகம் பொதி
மனதினர்
அணுகினர் தங்கள் நெஞ்சக(ம்) மகிழ்வுற நிதி தர அவர் மீதே
சிந்தை வஞ்சக நயமொடு பொருள் கவர் தந்த்ர மந்த்ரிகள்
தரணியில் அணைபவர் செம் பொன் இங்கு இனி இலை
எனில் மிகுதியும் முனிவாகி
திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன் என்று
சண்டைகள் புரி தரு மயலியர்
சிங்கியும் கொடு மிடிமையும் அகல நின் அருள் கூர்வாய்
மந்தரம் குடை என நிரை உறு துயர் சிந்த அன்று அடர் மழை
தனில் உதவிய
மஞ்சு எனும்படி வடிவுறும் அரி புகழ் மருகோனே
மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன்
மகிழ் துணைவ
நல் வஞ்சி தண் குற மகள் பத மலர் பணி மணவாளா
தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல்
தரு மண மலர் தங்கு
சண்பக முகில் அளவு உயர் தரு பொழில் மீதே
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி
மணிகளும் வெயில் விடு
சண்பை அம் பதி மருவிய அமரர்கள் பெருமாளே. Add (additional) Audio/Video Link
771
சீகாழி சருவி இகழ்ந்து தனதன தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன ...... தனதான
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி
தலையரு நின்று கலங்க விரும்பிய ...... தமிழ்கூறுஞ்
சலிகையு நன்றியும் வென்றியு மங்கள
பெருமைக ளுங்கன முங்குண மும்பயில்
சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் ...... தனிவேலும்
விருது துலங்க சிகண்டியி லண்டரு
முருகி வணங்க வரும்பத மும்பல
விதரண முந்திற முந்தர முந்தினை ...... புனமானின்
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி
வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல
விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் ...... மறவேனே
கருதியி லங்கை யழிந்துவி டும்படி
அவுணர டங்கம டிந்துவி ழும்படி
கதிரவ னிந்து விளங்கி வரும்படி ...... விடுமாயன்
கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு
மடுவினில் வந்துத வும்புய லிந்திரை
கணவன ரங்க முகுந்தன் வருஞ்சக ...... டறமோதி
மருது குலுங்கி நலங்க முனிந்திடு
வரதன லங்கல் புனைந்தரு ளுங்குறள்
வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை ...... தொடுமீளி
மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய
பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர்
மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள் ...... பெருமாளே.
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு சமயமும்
ஒன்றிலை யென்ற வரும்
பறிதலையரு நின்று கலங்க
விரும்பிய தமிழ்கூறுஞ் சலிகையு
நன்றியும் வென்றியு மங்கள பெருமைகளும்
கனமுங்குணமும்பயில் சரவணமும்
பொறையும்புகழுந்திகழ் தனிவேலும்
விருது துலங்க சிகண்டியில்
அண்டரும் உருகி வணங்கவரும்பதமும்
பல விதரணமுந்திறமுந் தரமும்
தினைபுனமானின் ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து
அடி வருடி மணந்துபுணர்ந்ததுவும்
பல விஜயமும் அன்பின்மொழிந்துமொழிந்து இயல்
மறவேனே
கருதியிலங்கை யழிந்துவிடும்படி
அவுணர் அடங்க மடிந்துவிழும்படி
கதிரவ னிந்து விளங்கி வரும்படி விடுமாயன்
கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு
மடுவினில் வந்துதவும்புயல்
இந்திரை கணவன் அரங்க முகுந்தன்
வருஞ்சகடற மோதி
மருது குலுங்கி நலங்க முனிந்திடுவரதன்
அலங்கல் புனைந்தருளுங்குறள் வடிவன்
நெடுங்கடல் மங்க ஒர் அம்பு கை தொடுமீளி மருக
புரந்தரனுந்தவ மொன்றிய பிரமபு ரந்தனிலும்
குக னென்பவர் மனதினிலும்
பரி வொன்றிய மர்ந்தருள் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=CTmCAl8krJA
Add (additional) Audio/Video Link
772
சீகாழி சிந்து உற்று எழு தந்தத்தன தானன தந்தத் ...... தனதான
சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே
தென்றற்றரு வாசமி குந்துற் ...... றெழலாலே
அந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே
அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே
சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே.
சிந்து உற்று எழு மா மதி அங்கித் திரளாலே
தென்றல் தரு வாசம் மிகுந்து உற்று எழலாலே
அந்திப் பொழுதாகிய கங்குல் திரளாலே
அன்புற்று எழு பேதை மயங்கித் தனி ஆனாள்
நந்து உற்றிடு வாரியை மங்கத் திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர்
வேலினை உந்திப் பொரு வேளே
சந்தக் கவி நூலினர் தம் சொற்கு இனியோனே
சண்பைப் பதி மேவிய கந்தப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
773
சீகாழி செக்கர்வானப் பிறை தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத்
தத்தனா தத்தனத் ...... தனதான
செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்
தெற்கிலூ தைக்கனற் ...... றணியாத
சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச்
சித்தம்வா டிக்கனக் ...... கவிபாடிக்
கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக்
கற்பதா ருச்செகத் ...... த்ரயபாநு
கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க்
கைக்குணான் வெட்கிநிற் ...... பதுபாராய்
சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித்
தப்ரதா பர்க்குமெட் ...... டரிதாய
தத்வவே தத்தினுற் பத்திபோ தித்தஅத்
தத்வரூ பக்கிரிப் ...... புரைசாடிக்
கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக்
குத்துரா வுத்தபொற் ...... குமரோனே
கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக்
கொச்சைவாழ் முத்தமிழ்ப் ...... பெருமாளே.
செக்கர் வானப் பிறைக்கு இக்கு மாரற்கு அ(ல்)ல
தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத சித்ர வீணைக்கு
அலர் பெற்ற தாயர்க்கு அவச் சித்தம் வாடி
கனக் கவி பாடி
கைக் கபோலக் கிரி பொன் கொள் ராசிக் கொடைக் கற்ப
தாருச் செக த்ரய பானு
கற்ற பேர் வைப்பு எனச் செத்தை யோகத்தினர்க் கைக்குள்
நான் வெட்கி நிற்பது பாராய்
சக்ர பாணிக்கும் அப் பத்ம யோனிக்கு(ம்) நித்த
ப்ரதாபர்க்கும் எட்ட அரிது ஆய
தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அத் தத்வ ரூப
கிரிப் புரை சாடிக் கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு
எழ
குத்து ராவுத்த பொற் குமரோனே
கொற்றவா உற்பலச் செச்சை மாலைப் புயக் கொச்சை வாழ்
முத்தமிழ்ப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
774
சீகாழி தினமணி சார்ங்க தனதன தாந்த தான தனதன தாந்த தான
தனதன தாந்த தான ...... தனதான
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
தினகர னேய்ந்த மாளி ...... கையிலாரஞ்
செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்
வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும்
இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை
புழுககில் சாந்து பூசி ...... யரசாகி
இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
மொருபிடி சாம்ப லாகி ...... விடலாமோ
வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை
மயிலொடு பாங்கி மார்க ...... ளருகாக
மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே
கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
கருணைகொள் பாண்டி நாடு ...... பெறவேதக்
கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய
கவுணியர் வேந்த தேவர் ...... பெருமாளே.
தினமணி சார்ங்க பாணி யென
மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில்
ஆரஞ் செழுமணி சேர்ந்த பீடிகையில்
இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட
இருபாலும் இனவளை பூண்கையார்க வரியிட
வேய்ந்து மாலை புழுககில் சாந்து பூசி
அரசாகி
இனிதிறுமாந்து வாழும்
இருவினை நீண்ட காயம்
ஒருபிடி சாம்ப லாகி விடலாமோ
வனசரர் ஏங்க வான முகடுற வோங்கி
ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக
மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
மலைமிசை தோன்று மாய வடிவோனே
கனசமண் மூங்கர் கோடி
கழுமிசை தூங்க
நீறு கருணைகொள் பாண்டி நாடு பெற
வேதக் கவிதரு காந்த
பால கழுமல பூந்த ராய
கவுணியர் வேந்த தேவர்பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=JcEVLi_2zJ8
Add (additional) Audio/Video Link
775
சீகாழி பூமாது உரமேயணி தானாதன தானன தானன
தானாதன தானன தானன
தானாதன தானன தானன ...... தந்ததான
பூமாதுர மேயணி மான்மறை
வாய்நாலுடை யோன்மலி வானவர்
கோமான்முநி வோர்முதல் யாருமி ...... யம்புவேதம்
பூராயம தாய்மொழி நூல்களும்
ஆராய்வதி லாதட லாசுரர்
போரால்மறை வாயுறு பீதியின் ...... வந்துகூடி
நீமாறரு ளாயென ஈசனை
பாமாலைக ளால்தொழு தேதிரு
நீறார்தரு மேனிய தேனியல் ...... கொன்றையோடு
நீரேர்தரு சானவி மாமதி
காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளாமுத லார்சடை ...... யெம்பிரானே
போமாறினி வேறெது வோதென
வேயாரரு ளாலவ ரீதரு
போர்வேலவ நீலக லாவியி ...... வர்ந்துநீடு
பூலோகமொ டேயறு லோகமு
நேரோர் நொடி யேவரு வோய்சுர
சேனாபதி யாயவ னேயுனை ...... யன்பினோடுங்
காமாவறு சோம
பூமாது உரமேயணி மால்
மறை வாய்நாலுடையோன்
மலி வானவர் கோமான்
முநிவோர்முதல் யாரும்
இயம்புவேதம் பூராயமதாய்மொழி நூல்களும்
ஆராய்வதிலாத அடலாசுரர்
போரால்மறை வாயுறு பீதியின் வந்துகூடி
நீ மாறு அருளாயென
ஈசனை பாமாலைக ளால்தொழுதே
திருநீறார்தரு மேனிய
தேனியல் கொன்றையோடு
நீரேர்தரு சானவி மாமதி
காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளாமுதலார்சடை யெம்பிரானே
போமாறினி வேறெது வோதெனவே
ஆரருளாலவர் ஈதரு போர்வேலவ
நீல கலாவி யிவர்ந்து
நீடு பூலோகமொடே யறு லோகமு
நேரோர் நொடி யேவரு வோய
சுர சேனாபதி யாயவனே
உனை யன்பினோடுங் காமா அறு சோம சம ஆனன
தாமாமண மார்தரு நீப
சுதாமாவெனவேதுதி யாது
உழல் வஞ்சனேனைக் காவாய்
அடிநாள் அசு ரேசரையேசாடிய
கூர்வடி வேலவ
காரார்தரு காழியின் மேவிய தம்பிரானே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=vpmuXTrD7Io
Add (additional) Audio/Video Link
776
சீகாழி மதனச்சொற் கார தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன ...... தனதான
மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள்
மருளப்பட் டாடைக் காரிக ...... ளழகாக
மவுனச்சுட் டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக் காரிகள்
வகைமுத்துச் சாரச் சூடிகள் ...... விலைமாதர்
குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்
குசலைக்கொட் சூலைக் காலிகள் ...... மயல்மேலாய்க்
கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை
குமுதப்பொற் பாதச் சேவையி ...... லருள்வாயே
கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்பட
ககனக்கட் டாரிக் காயிரை ...... யிடும்வேலா
கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகில
கவுரிப்பொற் சேர்வைச் சேகர ...... முருகோனே
திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையை
தினமுற்றுச் சாரத் தோள்மிசை ...... யணைவோனே
திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக் காழியில்
சிவன்மெச்சக் காதுக் கோதிய ...... பெருமாளே.
மதனச் சொல் காரக் காரிகள் பவள கொப்பு ஆடச் சீறிகள்
மருளப் பட்டு ஆடைக் காரிகள் அழகாக மவுனச் சுட்டு ஆடிச்
சோலிகள்
இசலிப்பித்து ஆசைக் காரிகள் வகை முத்துச் சாரச் சூடிகள்
விலை மாதர் குதலைச் சொல் சாரப் பேசிகள் நரக அச்சில்
சாடிப் பீடிகள்
குசலைக் கொள் சூலைக் காலிகள் மயல் மேலாய்க் கொளுவிக்
கட்டு ஆசைப் பாசனை பவம் துக்கக் கார சூதனை குமுதப்
பொன் பாதச் சேவையில் அருள்வாயே
கதறக் கல் சூரைக் கார் கடல் எரியத் திக்கு ஊறில் பாழ்பட
ககன(ம்) கட்டாரிக்கா(க) இரை இடும் வேலா
கதிர் சுற்றிட்ட ஆசைப் பால் கிரி உறை பச்சைப் பாசக்
கோகில கவுரி பொன் சேர்வைச் சேகர முருகோனே
திதலைப் பொன் பாணிக் கார் குயில் அழகில் பொன்
தோகைப் பாவையை தினம் உற்றுச் சாரத் தோள் மிசை
அணைவோனே
திலதப் பொட்டு ஆசைச் சேர் முக மயில் உற்றிட்டு ஏறிக்
காழியில் சிவன் மெச்சக் காதுக்கு ஓதிய பெருமாளே. Add (additional) Audio/Video Link
777
சீகாழி விடம் என மிகுத்த தனதனன தத்ததன தனதனன தத்ததன
தனதனன தத்ததன ...... தனதான
விடமெனமி குத்தவட வனலெனவு யர்த்துரவி
விரிகதிரெ னப்பரவு ...... நிலவாலே
விதனமிக வுற்றுவரு ரதிபதிக டுத்துவிடு
விரைதருவி தட்கமல ...... கணையாலே
அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல்
அழலொடுகொ தித்துவரு ...... கடைநாளில்
அணுகிநம னெற்றமயல் கொளுமநிலை சித்தமுற
அவசமொட ணைத்தருள ...... வரவேணும்
அடவிதனில் மிக்கபரு வரையவர ளித்ததிரு
அனையமயில் முத்தமணி ...... சுரயானை
அழகியம ணிக்கலச முலைகளில்ம யக்கமுறு
மதிவிரக சித்ரமணி ...... மயில்வீரா
கடதடக ளிற்றுமுக ரிளையவகி ரிக்குமரி
கருணையொட ளித்ததிற ...... முருகோனே
கமலமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணி
கழுமலந கர்க்குமர ...... பெருமாளே.
விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர்
எனப் பரவு நிலவாலே விதனம் மிக உற்று
வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே
அடல் அமர் இயற்று திசையினில்
மருவி மிக்க அனல் அழலொடு கொதித்து வரு கடை நாளில்
அணுகி நமன் எற்ற மயல் கொளும் அ(ந்)நிலை
சித்தம் உற அவசமோடு அணைத்து அருள வர வேணும்
அடவி தனில் மிக்க பரு வரையவர் அளித்த திரு அனைய
மயில் முத்த மணி சுர யானை
அழகிய மணிக் கலச முலைகளில் மயக்கம் உறும் அதி விரக
சித்ர மணி மயில் வீரா
கட தட களிற்று முகர் இளையவ கிரிக் குமரி கருணையோடு
அளித்த திற முருகோனே
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர்க்
குமர பெருமாளே. Add (additional) Audio/Video Link