சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: திருக்காளத்தி
446   சரக்கு ஏறி இத்த     447   சிரத்தானத்தி     448   பங்கயனார்    
446   திருக்காளத்தி   சரக்கு ஏறி இத்த  
தனத்தா தத்தத் தனனா தந்தத்
     தனத்தா தத்தத் தனனா தந்தத்
          தனத்தா தத்தத் தனனா தந்தத் ...... தனதான

சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்
     பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்
          சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் ...... செயல்மேவிச்
சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்
     சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்
          தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் ...... குடிபேணிக்
குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
     குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
          குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் ...... படுவேனைக்
குறித்தே முத்திக் குமறா வின்பத்
     தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
          குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் ...... கழல்தாராய்
புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்
     கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்
          புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் ...... றருள்வோனே
புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்
     தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்
          புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் ...... தருள்வோனே
திருக்கா னத்திற் பரிவோ டந்தக்
     குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்
          திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் ...... புணர்வோனே
சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்
     புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்
          றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் ...... பெருமாளே.


சரக்கு ஏறி இத்தப் பதி வாழ் தொந்தப்
     பரிக் காயத்தில் பரிவோடு ஐந்து
         சதி காரர் புக்கு உலை மேவு இந்தச்.....செயல் மேவி
சலித்தே மெத்தச் சமுசாரம் பொன்
     சுகித்தே சுற்றத்தவரோடு இன்ப(ம்)
         தழைத்தே மெச்ச தயவோடு இந்தக்.....குடி பேணி
குரக்கோணத்தில் கழு நாய் உண்ப
     குழிக்கே வைத்துச் சவமாய் நந்து இக்
         குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப்.....படுவேனை
குறித்தே முத்திக்கு ம(மா)றா இன்பத்
     தடத்தே பற்றி சக மாயம் பொய்க்
         குலம் கால் வற்ற சிவ ஞானம் பொன்.....கழல் தாராய்
புரக் காடு அற்றுப் பொடியாய் மங்க
     கழைச் சாபத்து ஐச் சடலான் உங்க
         புகைத் தீ பற்ற அப்புகலோர் அன்புற்று.....அருள்வோனே
புடைத்தே எட்டுத் திசையோர் அஞ்ச
     தனிக்கோலத்துப் புகு சூர் மங்க
         புகழ்ப் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து.....அருள்வோனே
திருக் கானத்தில் பரிவோடு அந்தக்
     குறக் கோலத்துச் செயலாள் அஞ்ச
         திகழ்ச்சீர் அத்திக்கு அழல் வா என்பப்.....புணர்வோனே
சிவப் பேறுக்குக் கடையேன் வந்து உள்
     புக சீர் வைத்துக் கொ(ள்)ளு ஞானம் பொன்
         திருக் காளத்திப் பதி வாழ் கந்தப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=7FOTOJfeM44
Add (additional) Audio/Video Link

Back to Top

447   திருக்காளத்தி   சிரத்தானத்தி  
தனத்தா தத்தத் ...... தனதான
     தனத்தா தத்தத் ...... தனதான

சிரத்தா னத்திற் ...... பணியாதே
     செகத்தோர் பற்றைக் ...... குறியாதே
வருத்தா மற்றொப் ...... பிலதான
     மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத் ...... துவநேசா
     நினைத்தார் சித்தத் ...... துறைவோனே
திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே
     திருக்கா ளத்திப் ...... பெருமாளே.


சிரத்தா னத்திற்பணியாதே
     செகத்தோர் பற்றைக்.....குறியாதே
வருத்தா மற்றொப்பிலதான
     மலர்த்தாள் வைத்து எத்தனை.....ஆள்வாய்
நிருத்தா கர்த்தத துவநேச
     நினைத்தார் சித்தத்து.....உறைவோனே
திருத்தாள் முத்தர்க்கு அருள்வோனே
     திருக்கா ளத்திப்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=FP8AFRknPIA
Add (additional) Audio/Video Link

Back to Top

448   திருக்காளத்தி   பங்கயனார்  
தந்தன தானத் தனந்த தானன
     தந்தன தானத் தனந்த தானன
          தந்தன தானத் தனந்த தானன தனதான

பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர
     அண்டம தாயுற் றிருந்த பார்மிசை
          பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர ...... உருவாயே
பந்தம தாகப் பிணிந்த ஆசையில்
     இங்கித மாகத் திரிந்து மாதர்கள்
          பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல் ...... படிறாயே
சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை
     வந்துடல் மூடக் கலங்கி டாமதி
          தந்தடி யேனைப் புரந்தி டாயுன ...... தருளாலே
சங்கரர் வாமத் திருந்த நூபுர
     சுந்தரி யாதித் தருஞ்சு தாபத
          தண்டைய னேகுக் குடம்ப தாகையின் ...... முருகோனே
திங்களு லாவப் பணிந்த வேணியர்
     பொங்கர வாடப் புனைந்த மார்பினர்
          திண்சிலை சூலத் தழுந்து பாணியர் ...... நெடிதாழ்வார்
சிந்துவி லேயுற் றெழுந்த காளவி
     டங்கள மீதிற் சிறந்த சோதியர்
          திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய ...... குருநாதா
சிங்கம தாகத் திரிந்த மால்கெரு
     வம்பொடி யாகப் பறந்து சீறிய
          சிம்புள தாகச் சிறந்த காவென ...... வருகோமுன்
செங்கதி ரோனைக் கடிந்த தீவினை
     துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய
          தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள் ...... பெருமாளே.


பங்கயனார் பெற்றிடும் சர(ம்) அசர(ம்)
     அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை
        பஞ்சவர் கூடித் திரண்டது ஓர் நர.....உருவாயே
பந்தமது ஆகப் பிணிந்த ஆசையில்
     இங்கிதமாகத் திரிந்து மாதர்கள்
        பண்பு ஒழி சூதைக் கடந்திடாது உழல்.....படிறு ஆயே
சங்கடன் ஆகித் தளர்ந்து நோய் வினை
     வந்து உடல் மூட கலங்கிடா மதி
        தந்து அடியேனைப் புரந்திடாய் உனது.....அருளாலே
சங்கரர் வாமத்து இருந்த நூபுர
     சுந்தரி ஆதி தரும் சுதா பத
        தண்டையனே குக்குடம் பதாகையின்.....முருகோனே
திங்கள் உலாவப் பணிந்த வேணியர்
     பொங்கு அரவு ஆடப் புனைந்த மார்பினர்
        திண் சிலை சூலத்து அழுந்து பாணியர்.....நெடிது ஆழ்வார்
சிந்துவிலே உற்று எழுந்த காள விடம்
     கள(ம்) மீதில் சிறந்த சோதியர்
        திண் புய(ம்) மீதில் தவழ்ந்து வீறிய.....குருநாதா
சிங்கமதாகத் திரிந்த மால் கெரு
     வம் பொடியாக பறந்து சீறிய
        சிம்புளதாகச் சிறந்து அகா என.....வரு கோ முன்
செம் கதிரோனைக் கடிந்த தீ வினை
     துஞ்சிடவே நல் தவம் செய்து ஏறிய
        தென்கயிலாயத்து அமர்ந்து வாழ்வருள்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=PZk_6VIGV5Y
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000