| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: திருத்துறையூர்
741 ஆரத்தன பார 742 வெகு மாய வித
741
திருத்துறையூர் ஆரத்தன பார தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன ...... தனதான
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்
யாழ்வைத்திசை கூரக்குழ ...... லுடைசோர
ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை
யாசப்படு வார்பொட்டணி ...... சசிநேர்வாள்
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை
கோவைக்கனி வாய்பற்கதி ...... ரொளிசேருங்
கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர
கோபச்செய லார்பித்தர்க ...... ளுறவாமோ
பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்
பூசைக்கியல் வாள்பத்தினி ...... சிவகாமி
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்
போகர்க்குப தேசித்தருள் ...... குருநாதா
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட
சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா
தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு
சோதித்துறை யூர்நத்திய ...... பெருமாளே.
ஆர் அத் தன பாரத் துகில் மூடிப் பலர் காணக் கையில் யாழ்
வைத்து இசை கூர
குழல் உடை சோர ஆகம் பனி நீர் அப் புழுகு ஓடக் குழை
ஆடப் பிரையாசைப் படுவார்
பொட்டு அணி சசி நேர் வாள் கூரக் கணை வேல் கண் கயல்
போலச் சுழல்வார்
சர்க்கரை கோவைக் கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் கோலக்
குயிலார்
பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோபச் செயலார்
பித்தர்கள் உறவு ஆமோ
பூரித் தன பாரச் சடை வேதக் குழலாள் பத்தர்கள் பூசைக்கு
இயல்வாள் பத்தினி சிவகாமி
பூமிக் கடல் மூவர்க்கும் மு(ன்)னாள் பத்திர காளிப் புணர்
போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா
சூரக் குவடு ஆழித் தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு
இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா
தோகைச் செயலாள் பொன் பிரகாசக் குறமான் முத்தொடு
சோதித் துறையூர் நத்திய பெருமாளே. Add (additional) Audio/Video Link
742
திருத்துறையூர் வெகு மாய வித தனதான தனத்தன தானன
தனதான தனத்தன தானன
தனதான தனத்தன தானன ...... தனதான
வெகுமாய விதத்துரு வாகிய
திறமேப ழகப்படு சாதக
விதமேழ்க டலிற்பெரி தாமதில் ...... சுழலாகி
வினையான கருக்குழி யாமெனு
மடையாள முளத்தினின் மேவினும்
விதியாரும் விலக்கவொ ணாதெனு ...... முதியோர்சொல்
தகவாம தெனைப்பிடி யாமிடை
கயிறாலு மிறுக்கிம காகட
சலதாரை வெளிக்கிடை யேசெல ...... வுருவாகிச்
சதிகாரர் விடக்கதி லேதிரள்
புழுவாக நெளித்தெரி யேபெறு
மெழுகாக வுருக்குமு பாதிகள் ...... தவிர்வேனோ
உககால நெருப்பதி லேபுகை
யெழவேகு முறைப்படு பாவனை
யுறவேகு கையிற்புட மாய்விட ...... வெளியாகி
உலவாந ரகுக்கிரை யாமவர்
பலவோர்கள் தலைக்கடை போயெதிர்
உளமாழ்கி மிகக்குழை வாகவு ...... முறவாடித்
தொகலாவ தெனக்கினி தானற
வளமாக அருட்பத மாமலர்
துணையேப ணியத்தரு வாய்பரி ...... மயில்வேலா
துதிமாத வர்சித்தர்ம கேசுரர்
அரிமால்பி ரமர்க்கருள் கூர்தரு
துறையூர்ந கரிற்குடி யாய்வரு ...... பெருமாளே.
வெகு மாய விதத்து உருவாகிய திறமே பழகப் படு சாதக
விதம் ஏழ் கடலில் பெரிதாம்
அதில் சுழலாகி வினையான கருக் குழியாம் எனும்
அடையாளம் உ(ள்)ளத்தினின் மேவினும்
விதி யாரும் விலக்க ஒணாது எனும் முதியோர் சொல்
தகவாம்
அது எனைப் பிடியா மிடை கயிறாலும் இறுக்கி
மகா கட(ம்) சல தாரை வெளிக்கு இடையே செல உருவாகி
சதிகாரர் விடக்கு அதிலே திரள் புழுவாக நெளித்து
எரியே பெறு மெழுகாக உருக்கும் உபாதிகள் தவிர்வேனோ
உக காலம் நெருப்பு அதிலே புகை எழ வேகு முறைப்படு
பாவனை உறவே
குகையில் புடமாய் விட வெளியாகி உலவா நரகுக்கு
இரையாம் அவர் பலவோர்கள்
தலைக் கடை போய் எதிர் உ(ள்)ளம் மாழ்கி மிகக்
குழைவாகவும் உறவாடித் தொகலாவது எனக்கு இனிதான்
அற
வளமாக அருள் பாதம் மா மலர் துணையே பணிய தருவாய்
பரி மயில் வேலா
துதி மாதவர் சித்தர் மகேசுரர் அரி மால் பிரமர்க்கு அருள் கூர்
தரு
துறையூர் நகரில் குடியாய் வரு பெருமாளே. Add (additional) Audio/Video Link