சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: திருவலஞ்சுழி
876   மகர குண்டல மீதே    
876   திருவலஞ்சுழி   மகர குண்டல மீதே  
தனன தந்தன தானா தானன
     தனன தந்தன தானா தானன
          தனன தந்தன தானா தானன ...... தனதான

மகர குண்டல மீதே மோதுவ
     வருண பங்கய மோபூ வோடையில்
          மருவு செங்கழு நீரோ நீவிடு ...... வடிவேலோ
மதன்வி டுங்கணை யோவா ளோசில
     கயல்கள் கெண்டைக ளோசே லோகொலை
          மறலி யென்பவ னோமா னோமது ...... நுகர்கீத
முகர வண்டின மோவான் மேலெழு
     நிலவ ருந்துபு ளோமா தேவருண்
          முதிய வெங்கடு வோதே மாவடு ...... வகிரோபார்
முடிவெ னுங்கட லோயா தோவென
     வுலவு கண்கொடு நேரே சூறைகொள்
          முறைய றிந்தப சாசே போல்பவ ...... ருறவாமோ
நிகரில் வஞ்சக மாரீ சாதிகள்
     தசமு கன்படை கோடா கோடிய
          நிருத ரும்பட வோரே வேவியெ ...... யடுபோர்செய்
நெடிய னங்கனு மானோ டேயெழு
     பதுவெ ளங்கவி சேனா சேவித
          நிருப னம்பரர் கோமான் ராகவன் ...... மருகோனே
சிகர வும்பர்கள் பாகீ ராதிகள்
     பிரபை யொன்றுபி ராசா தாதிகள்
          சிவச டங்கமொ டீசா னாதிகள் ...... சிவமோனர்
தெளியு மந்த்ரக லாபா யோகிகள்
     அயல்வி ளங்குசு வாமீ காமரு
          திருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.


மகர குண்டல(ம்) மீதே மோதுவ
     அருண பங்கயமோ பூ ஓடையில்
        மருவு செங்கழு நீரோ நீ விடு.....வடி வேலோ
மதன் விடும் கணையோ வாளோ சில
     கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை
        மறலி என்பவனோ மானோ மது.....நுகர் கீத(ம்)
முகர வண்டினமோ வான் மேல் எழு
     நிலவு அருந்து பு(ள்)ளோ மா தேவர் உண்
        முதிய வெம் கடுவோ தேமா வடு.....வகிரோ பார்
முடிவு எனும் கடலோ யாதோ என
     உலவு கண் கொடு நேரே சூறை கொள்
        முறை அறிந்த பசாசே போல்பவர்.....உறவு ஆமோ
நிகர் இல் வஞ்சக மாரீச ஆதிகள்
     தசமுகன் படை கோடா கோடிய
        நிருதரும் பட ஓர் ஏய் ஏவியே.....அடு போர் செய்
நெடியன் அங்கு அனுமானோடு எழுபது
     வெ(ள்)ளம் கவி சேனா சேவித
        நிருபன் அம்பரர் கோமான் ராகவன்.....மருகோனே
சிகர உம்பர்கள் பாகீராதிகள்
     பிரபை ஒன்று பிராசாதாதிகள்
        சிவ சடங்கமொடு ஈசானாதிகள்.....சிவ மோனர்
தெளியும் மந்த்ர கலா பாய் யோகிகள்
     அயல் விளங்கு சுவாமீ காமரு
        திரு வலஞ்சுழி வாழ்வே தேவர்கள்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000