சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: நாகப்பட்டினம்
828   ஓலமிட்டிரைத்து     829   மார்பு ரம்பினளி     830   விழுதாதெனவே    
828   நாகப்பட்டினம்   ஓலமிட்டிரைத்து  
தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த
     தான தத்த தத்த தந்த ...... தனதான

ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
     ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென்
றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்
     ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற்
கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த
     கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன்
கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து
     கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே
வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
     மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே
வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த
     வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா
ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
     நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த
     நாக பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே.


ஓலமிட்டு இரைத்தெழுந்த வேலை வட்டமிட்ட இந்த
     ஊர் முகில் தருக்கள் ஒன்றும்.....அவர் யாரென்று
ஊமரை ப்ரசித்தரென்று மூடரைச் சமர்த்த ரென்றும்
     ஊனரை ப்ரபுக்க ளென்றும்.....அறியாமல்
கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து அநந்த
     கோடி இச்சை செப்பி வம்பில்.....உழல்நாயேன்
கோப மற்று மற்றும் அந்த மோகமற்று உனைப் பணிந்து
     கூடுதற்கு முத்தி யென்று.....தருவாயே
வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
     மாது பெற்றெடுத்து உகந்த.....சிறியோனே
வாரி பொட்டெழ க்ரவுஞ்சம் வீழ நெட்டயில் துரந்த
     வாகை மற்புய ப்ரசண்ட.....மயில்வீரா
ஞால வட்டம் முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
     நாரணற்கு அருட்சு ரந்த.....மருகோனே
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்மனைக் களைந்த
     நாக பட்டினத்தமர்ந்த.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Rld5CdTHYkE
Add (additional) Audio/Video Link

Back to Top

829   நாகப்பட்டினம்   மார்பு ரம்பினளி  
தான தந்ததன தந்ததன தந்ததன
     தான தந்ததன தந்ததன தந்ததன
          தான தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான

மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ
     டார மும்படித ரம்பொறியு டன்பணிகள்
          மாலை யொண்பவள மும்பரிம ளங்கலவை ...... தொங்கலாட
வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக
     பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி
          வாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகள ...... சங்குமோக
சார மஞ்சள்புய முங்கிளிமு கங்களுகிர்
     பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச
          தாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடை ...... ரம்பைமாதர்
தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி
     யாடல் கொண்டமட மங்கையரு டன்கலவி
          தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம ...... றந்திடேனே
வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர
     சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும்
          வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ ...... டர்ந்தசூரன்
வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடைய
     ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு
          மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட ...... னங்கொள்வேலா
நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி
     யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி
          ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர் ...... தந்தமூல
ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு
     தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய
          நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ் ...... தம்பிரானே.


உரம் மார்பு பின் நளினம் கிரி எனும் தனமொடு
     ஆரமும் படி தரம் பொறியுடன் பணிகள்
        மாலை ஒண் பவளமும் பரிமள கலவை.....தொங்கல் ஆட
வாள் சரம் கண் இயலும் குழை த(ள்)ள அம்பு அளக
     பார(ம்) தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி
        வாகை என்ப இதழும் சலசம் என்ப கள(ம்) சங்கு மோக
சார(ம்) மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர்
     பாளிதம் புனை துவண்ட இடையொடு இன்ப ரச
        தாழி என்ப அல்குலும் துளிர் அரம்பை தொடை.....ரம்பை மாதர்
தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி
     ஆடல் கொண்ட மட மங்கையருடன் கலவி
        தாகம் உண்டு உழல்கினும் கழலுறும் கழல்.....மறந்திடேனே
வீர வெண்டைய(ம்) முழங்க வரி சங்கு(ம்) முரசோடு
     பொன் பறை ததும்ப விதியும் சுரமும்
        வேத விஞ்சையர் உடன் குமுற வெந்து உக.....அடர்ந்த சூரன்
வீறு அடங்க முகிலும் கமற நஞ்சு உடைய
     ஆயிரம் பகடு கொண்ட உரகன் குவடுமே
        கொளுந்த பல சிரம் தனை எறிந்து நடனம்.....கொள்வேலா
நார சிங்க வடிவம் கொண்டு ப்ரசண்ட இரணியோன்
     நடுங்க நடனம் செய்து இலங்கை வலி
        ராவணன் குலம் அடங்க சிலை கொண்ட கரர்.....தந்த மூல
ஞான மங்கை அமுதம் சொருபி என்றன் ஒரு
     தாய் அணங்கு குற மங்கையை.....மணந்த புய
        நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ்.....தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

830   நாகப்பட்டினம்   விழுதாதெனவே  
தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

விழுதா தெனவே கருதா துடலை
     வினைசேர் வதுவே ...... புரிதாக
விருதா வினிலே யுலகா யதமே
     லிடவே மடவார் ...... மயலாலே
அழுதா கெடவே அவமா கிடநா
     ளடைவே கழியா ...... துனையோதி
அலர்தா ளடியே னுறவாய் மருவோ
     ரழியா வரமே ...... தருவாயே
தொழுதார் வினைவே ரடியோ டறவே
     துகள்தீர் பரமே ...... தருதேவா
சுரர்பூபதியே கருணா லயனே
     சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே
எழுதா மறைமா முடிவே வடிவே
     லிறைவா எனையா ...... ளுடையோனே
இறைவா எதுதா வதுதா தனையே
     இணைநா கையில்வாழ் ...... பெருமாளே.


விழுதா தெனவே கருதா துடலை
     வினைசேர் வதுவே....புரிதாக
விருதா வினிலே உலகா யதமே
     லிடவே மடவார்.....மயலாலே
அழுது ஆகெடவே அவமாகிட
     நாளடைவே கழியாது.....உனையோதி
அலர்தா ளடியே னுறவாய் மருவோ
     ரழியா வரமே.....தருவாயே
தொழுதார் வினைவே ர்யோ டறவே
     துகள்தீர் பரமே.....தருதேவா
சுரர்பூபதியே கருணா லயனே
     சுகிர்தா அடியார்.....பெருவாழ்வே
எழுதா மறைமா முடிவே வடிவே
     லிறைவா எனை.....யாளுடையோனே
இறைவா எதுதா அதுதா தனையே
     இணைநா கையில் வாழ்.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=1bBDYujDxns
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000