![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
வாரிமீ தேயெழு ...... திங்களாலே வாரிமீதேயெழு திங்களாலே 1303 - வாரி மீதே (பொதுப்பாடல்கள்) Songs from this thalam பொதுப்பாடல்கள்
1303 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 418 - வாரியார் # 1104 )
வாரி மீதே
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானனா தானன ...... தந்ததான
மாரவே ளேவிய ...... அம்பினாலே
பாரெலா மேசிய ...... பண்பினாலே
பாவியே னாவிம ...... யங்கலாமோ
சூரனீள் மார்புதொ ...... ளைந்தவேலா
சோதியே தோகைய ...... மர்ந்தகோவே
மூரிமால் யானைம ...... ணந்தமார்பா
மூவர்தே வாதிகள் ...... தம்பிரானே.
மாரவே ளேவிய அம்பினாலே
பாரெலாம் ஏசிய பண்பினாலே
பாவியேன் ஆவி மயங்கலாமோ
சூரனீள் மார்பு தொளைந்த வேலா
சோதியே தோகையமர்ந்த கோவே
மூரிமால் யானைமணந்தமார்பா
மூவர்தேவாதிகள் தம்பிரானே. கடலின் மீது உதிக்கின்ற சந்திரனாலே, மன்மதக் கடவுள் ஏவிய மலர் அம்புகளினாலே, உலகிலுள்ள பெண்களெல்லாம் இகழ்ந்து ஏசிய செய்கையாலே, (உன்னைப் பிரிந்த) பாவம் செய்த தலைவியாகிய நான் உயிர் போகும் நிலைக்கு வந்து மயங்கலாமோ? சூரனுடைய பெரும் மார்பைத் தொளைத்த வேலனே, ஜோதியே, மயில் மீது வீற்றிருக்கும் அரசே, பெருமையும், உன் மீது ஆசையும் கொண்ட தேவயானையை மணந்த திருமார்பா, மும்மூர்த்திகளுக்கும், தேவாதிகளுக்கும் தலைவனே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: வாரிமீதேயெழு திங்களாலே ... கடலின் மீது உதிக்கின்ற
சந்திரனாலே,
மாரவே ளேவிய அம்பினாலே ... மன்மதக் கடவுள் ஏவிய
மலர் அம்புகளினாலே,
பாரெலாம் ஏசிய பண்பினாலே ... உலகிலுள்ள
பெண்களெல்லாம் இகழ்ந்து ஏசிய செய்கையாலே,
பாவியேன் ஆவி மயங்கலாமோ ... (உன்னைப் பிரிந்த)
பாவம் செய்த தலைவியாகிய நான் உயிர் போகும் நிலைக்கு வந்து
மயங்கலாமோ?
சூரனீள் மார்பு தொளைந்த வேலா ... சூரனுடைய பெரும்
மார்பைத் தொளைத்த வேலனே,
சோதியே தோகையமர்ந்த கோவே ... ஜோதியே, மயில்
மீது வீற்றிருக்கும் அரசே,
மூரிமால் யானைமணந்தமார்பா ... பெருமையும், உன் மீது
ஆசையும் கொண்ட தேவயானையை மணந்த திருமார்பா,
மூவர்தேவாதிகள் தம்பிரானே. ... மும்மூர்த்திகளுக்கும்,
தேவாதிகளுக்கும் தலைவனே.
தானனா தானன ...... தந்ததான
This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:48 +0000