சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
1327   மதுரை திருப்புகழ் ( )  

சைவ முதல்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா

சைவமுதற் குருவாயே சமணர்களைத் ...... தெறுவோனே
பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் ...... புரிவாயே
கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் ...... புதநீபா
தெய்வசற் குருநாதா திருமதுரைப் ...... பெருமாளே.

சைவ முதல் குருவாயே சமணர்களைத் தெறுவோனே
     பொய்யர் உ(ள்)ளத்து அணுகானே புனித அருள்.....புரிவாயே
கையின் மிசைக் கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா
     தெய்வ சற் குரு நாதா திருமதுரைப்.....பெருமாளே.

சைவ சமயத்தின் முதலான குருவாக (திருஞானசம்பந்தராக) வந்து, சமணர்களை முறியடித்தவனே, பொய்யர்களின் மனத்தில் இருக்காதவனே, உன் திருவருளைத் தந்து அருளுவாயாக. உனது திருக் கரத்தில் ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, நறு மணம் வீசும் அற்புதமான கடப்ப மாலையைத் தரித்தவனே, இறைவனாகிய சிவ பெருமானுக்குச் சிறந்த குருவான தலைவனே, அழகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
சைவ முதல் குருவாயே சமணர்களைத் தெறுவோனே ... சைவ
சமயத்தின் முதலான குருவாக (திருஞானசம்பந்தராக) வந்து,
சமணர்களை முறியடித்தவனே,
பொய்யர் உ(ள்)ளத்து அணுகானே புனித அருள் புரிவாயே ...
பொய்யர்களின் மனத்தில் இருக்காதவனே, உன் திருவருளைத் தந்து
அருளுவாயாக.
கையின் மிசைக் கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா ... உனது
திருக் கரத்தில் ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, நறு மணம் வீசும்
அற்புதமான கடப்ப மாலையைத் தரித்தவனே,
தெய்வ சற் குரு நாதா திருமதுரைப் பெருமாளே. ...
இறைவனாகிய சிவ பெருமானுக்குச் சிறந்த குருவான தலைவனே,
அழகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

1326 - ஓருரு வாகி (திருவெழுகூற்றிருக்கை)

தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா

1327 - சைவ முதல் (மதுரை)

தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா

Songs from this thalam மதுரை

956 - அலகு இல் அவுணரை

957 - ஆனைமுகவற்கு

958 - பரவு நெடுங்கதிர்

959 - பழிப்பர் வாழ்த்துவர்

960 - சீத வாசனை மலர்

961 - புருவச் செஞ்சிலை

962 - முகமெலா நெய்

963 - ஏலப் பனி நீர்

965 - நீதத்துவமாகி

966 - மனநினை சுத்த

967 - முத்து நவரத்நமணி

1327 - சைவ முதல்

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:48 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org