![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
வானவராதி யோர்சிறைமேவ மாவலியேசெய் ...... திடுசூரன் வானவர் ஆதியோர் சிறைமேவ மாவலியே செய்திடு சூரன் 1330 - வானவராதி யோர் (திருப்பூவணம்) Songs from this thalam திருப்பூவணம்
1330 திருப்பூவணம் திருப்புகழ் ( )
வானவராதி யோர்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானனதான தானனதான தானனதான ...... தனதான
தானனதான தானனதான தானனதான ...... தனதான
மார்பிருகூற தாய்விடவாரி வாய்விடவேலை ...... விடுதீரா
கானவர்பாவை காதலனான காசணிபார ...... தனமார்பா
காலனைமோது காலகபால காளகளேசர் ...... தருபாலா
தேனமர்நீப மாலைவிடாத சேவகஞான ...... முதல்வோனே
தீயகுணாதி பாவிநினாது சேவடிகாண ...... அருள்வாயே
போனகசாலை யாதுலர்வாழ வீதிகடோறும் ...... நனிமேவு
பூவணமான மாநகர்வாழு நாதகுகேச ...... பெருமாளே.
மார்பிரு கூற தாய் விடவாரி வாய்விடவேலை விடுதீரா
கானவர் பாவை காதலனான காசணி பார தனமார்பா
காலனை மோது காலகபால காளகளேசர் தருபாலா
தேனமர் நீபமாலை விடாத சேவகஞான முதல்வோனே
தீய குணாதி பாவி நினாது சேவடிகாண அருள்வாயே
போனக சாலை யாதுலர்வாழ வீதிகடோறும் நனிமேவு
பூவணமான மாநகர் வாழு நாத குகேச பெருமாளே.
NULL
Add (additional) Audio/Video Link
Similar songs: குறிப்பு:
காளகளேசர்=விசத்தைக் கண்டத்திலுடையவர்,
போனகம்=போஜனம்=அன்னம்.
......... உரை .........
வானவர்கள் அனைவரும் பத்மாசுரனால் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மிகவும் வலிமை பொருந்திய இந்த அசுரனின் மார்பினை இரண்டு
கூறாக ஆக்கிடுமாறு வேலைவிடுத்த தீரனாகிய முருகப் பெருமானே!
கானகத்தின் குறமகளான வள்ளியின் காதலுக்கு அடிமையானவனே!
எமனை எதிர்த்து காலங்களையெல்லாம் கடந்து ஆலகால விசத்தையுண்ட
பரமேசுரனின் மைந்தனே! தேன் உதிரும் நீபமாலையை எப்பொழுதும்
அணிந்து சேவக ஞான முதல்வனாய் விளங்குபவனே.
தீயகுணங்களைக் கொண்ட பாவியாகிய நான் உனது சேவடிகளைக்
காண நீ அருளவேண்டும். வீதிகள் தோறும் அன்னதானம் நடைபெறும்
சிறப்புப் பெற்ற திருப்பூவணமான மாநகரில் வாழும் நாதகுகேசப்
பெருமானே, நீ எனக்கு அருளவேண்டும்.
தானனதான தானனதான தானனதான ...... தனதான
தானனதான தானனதான தானனதான ...... தனதான