சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
289   திருத்தணிகை திருப்புகழ் ( - வாரியார் # 300 )  

மருக்குல மேவும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்
     மதிப்பிள வாகும் ...... நுதலார்தம்
மயக்கினி லேநண் புறப்படு வேனுன்
     மலர்க்கழல் பாடுந் ...... திறநாடாத்
தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்
     சமத்தறி யாவன் ...... பிலிமூகன்
தலத்தினி லேவந் துறப்பணி யாதன்
     தனக்கினி யார்தஞ் ...... சபைதாராய்
குருக்குல ராஜன் தனக்கொரு தூதன்
     குறட்பெல மாயன் ...... நவநீதங்
குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்
     குணத்ரய நாதன் ...... மருகோனே
திருக்குள நாளும் பலத்திசை மூசும்
     சிறப்பது றாஎண் ...... டிசையோடும்
திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந்
     திருத்தணி மேவும் ...... பெருமாளே.

மருக் குல(ம்) மேவும் குழல் கனி வாய் வெண்
     மதிப் பிளவு ஆகும்.....நுதலார் தம்
மயக்கினிலே நண்பு உறப் படுவேன் உன்
     மலர்க் கழல் பாடும்.....திற(ன்) நாடாத்
தருக்கன் உதாரம் துணுக்கு இலி லோபன்
     சமத்து அறியா அன்பு.....இலி மூகன்
தலத்தினிலே வந்து உறப் பணியாத(வ)ன்
     தனக்கு இனியார் தம்.....சபை தாராய்
குருக் குல ராஜன் தனக்கு ஒரு தூதன்
     குறள் பெல மாயன்.....நவ நீதம்
குறித்து அயில் நேயன் திருப் பயில் மார்பன்
     குண த்ரய நாதன்.....மருகோனே
திருக் குள(ம்) நாளும் பலத் திசை மூசும்
     சிறப்பு அது உறா எண் திசையோடும்
திரைக்கடல் சூழும் புவிக்கு உயிராகும்
     திருத்தணி மேவும் ...... பெருமாளே

வாசனை வகைகள் நிறைந்த கூந்தலையும், கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயையும், வெண் பிறையின் பிளவு போன்ற நெற்றியையும் உடைய விலைமாதர்களின் மோக மயக்கத்தில் நட்புப் பூணும் நான் உன்னுடைய மலரடியைப் பாடும் வழி வகையை நாடாத ஆணவம் கொண்டவன், கொடைக் குணம் கொஞ்சமும் இல்லாதவன், (மாறாக) லோப குணம் உடையவன், திறமை இல்லாதவன், அன்பு அற்றவன், ஊமையன், (உனது திருத்தணிகைத்) தலத்துக்கு வந்து மனம் ஒன்றிப் பணியாதவன், இத்தகைய எனக்கு, இனியவரான உன் அடியார்கள் திருக் கூட்டத்தில் சேரும் பேற்றைத் தந்து அருள்வாய். குருகுல அரசனாகிய தருமருக்கு ஒரு தூதனாகச் சென்றவன், (மாவலி சக்கரவர்த்தி இடம்) வாமனனாய் குட்டை வடிவத்தில் சென்றவன், பலத்த மாயைகள் செய்ய வல்லவன், வெண்ணெய் (இருக்கும் இடத்தை) குறித்து அறிந்து உண்ணும் நேசன், லக்ஷ்மி தேவி வாசம் செய்யும் மார்பன், (சத்துவம், ராஜதம், தாம
Add (additional) Audio/Video Link
மருக் குல(ம்) மேவும் குழல் கனி வாய் வெண் மதிப் பிளவு
ஆகும் நுதலார் தம்
... வாசனை வகைகள் நிறைந்த கூந்தலையும்,
கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயையும், வெண் பிறையின் பிளவு
போன்ற நெற்றியையும் உடைய விலைமாதர்களின்
மயக்கினிலே நண்பு உறப் படுவேன் உன் மலர்க் கழல் பாடும்
திற(ன்) நாடாத் தருக்கன்
... மோக மயக்கத்தில் நட்புப் பூணும் நான்
உன்னுடைய மலரடியைப் பாடும் வழி வகையை நாடாத ஆணவம்
கொண்டவன்,
உதாரம் துணுக்கு இலி லோபன் சமத்து அறியா அன்பு இலி
மூகன்
... கொடைக் குணம் கொஞ்சமும் இல்லாதவன், (மாறாக) லோப
குணம் உடையவன், திறமை இல்லாதவன், அன்பு அற்றவன், ஊமையன்,
தலத்தினிலே வந்து உறப் பணியாத(வ)ன் ... (உனது
திருத்தணிகைத்) தலத்துக்கு வந்து மனம் ஒன்றிப் பணியாதவன்,
தனக்கு இனியார் தம் சபை தாராய் ... இத்தகைய எனக்கு,
இனியவரான உன் அடியார்கள் திருக் கூட்டத்தில் சேரும் பேற்றைத்
தந்து அருள்வாய்.
குருக் குல ராஜன் தனக்கு ஒரு தூதன் குறள் பெல மாயன்
நவ நீதம் குறித்து அயில் நேயன்
... குருகுல அரசனாகிய
தருமருக்கு ஒரு தூதனாகச் சென்றவன், (மாவலி சக்கரவர்த்தி இடம்)
வாமனனாய் குட்டை வடிவத்தில் சென்றவன், பலத்த மாயைகள் செய்ய
வல்லவன், வெண்ணெய் (இருக்கும் இடத்தை) குறித்து அறிந்து
உண்ணும் நேசன்,
திருப் பயில் மார்பன் குண த்ரய நாதன் மருகோனே ... லக்ஷ்மி
தேவி வாசம் செய்யும் மார்பன், (சத்துவம், ராஜதம், தாம ம் ஆகிய)
முக்குணங்களுக்குத் தலைவனாகிய திருமாலின் மருகனே,
திருக் குள(ம்) நாளும் பலத் திசை மூசும் சிறப்பு அது உறா ...
குமார தீர்த்தம் என்னும் திருக் குளத்தில்* நாள் தோறும் பல திசைகளில்
இருந்து வரும் அடியார்கள் நெருங்கிக் குளிக்கும் சிறப்பைப் பெற்றதும்,
எண் திசையோடும் திரைக் கடல் சூழும் புவிக்கு உயிராகும்
திருத்தணி மேவும் பெருமாளே
... எட்டுத் திக்குகளிலும்
அலைகடல் சூழ்ந்த பூமிக்கு உயிர் நிலையான இடமுமாகிய
திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

249 - எனக்கென யாவும் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

284 - பெருக்க உபாயம் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

289 - மருக்குல மேவும் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

301 - வினைக்கு இனமாகும் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

Songs from this thalam திருத்தணிகை

239 - அமைவுற்று அடைய

240 - அரகர சிவன் அரி

241 - அருக்கி மெத்தென

242 - இருப்பவல் திருப்புகழ்

243 - இருமலு ரோக

244 - உடலி னூடு

245 - உடையவர்கள் ஏவர்

246 - உய்யஞானத்து நெறி

247 - எத்தனை கலாதி

248 - எலுப்பு நாடிகள்

249 - எனக்கென யாவும்

250 - எனை அடைந்த

251 - ஏது புத்தி

252 - ஓலை இட்ட

253 - கச்சணி இளமுலை

254 - கடற்செகத் தடக்கி

255 - கரிக்குழல் விரித்தும்

256 - கலை மடவார்தம்

257 - கவடுற்ற சித்தர்

258 - கனத்த அற

259 - கனைத்து அதிர்க்கும்

260 - கிரி உலாவிய

261 - கிறி மொழி

262 - குயில் ஒன்று

263 - குருவி என

264 - குலைத்து மயிர்

265 - குவளைக் கணை

266 - கூந்தல் அவிழ்த்து

267 - கூர்வேல் பழித்த

268 - கொந்துவார் குரவடி

269 - சினத்தவர் முடிக்கும்

270 - சினத் திலத் தினை

271 - சொரியும் முகிலை

272 - தாக்கு அமருக்கு

273 - திருட்டு நாரிகள்

274 - துப் பார் அப்பு

275 - தொக்கறாக் குடில்

276 - தொடத்துளக்கிகள்

277 - நிலையாத சமுத்திர

278 - நினைத்தது எத்தனை

279 - பகல் இராவினும்

280 - பருத்தபற் சிரத்தினை

281 - பழமை செப்பிய

282 - புருவ நெறித்து

283 - பூசலிட்டு

284 - பெருக்க உபாயம்

285 - பொரியப் பொரிய

286 - பொருவிக் கந்தொடு

287 - பொற்குடம் ஒத்த

288 - பொற் பதத்தினை

289 - மருக்குல மேவும்

290 - மலை முலைச்சியர்

291 - முகத்தை மினுக்கி

292 - முகிலும் இரவியும்

293 - முடித்த குழலினர்

294 - முத்துத் தெறிக்க

295 - முலைபுளகம் எழ

296 - மொகுமொகு என

297 - வங்கம் பெறு

298 - வட்ட வாள் தன

299 - வரிக் கலையின்

300 - வார் உற்று எழும்

301 - வினைக்கு இனமாகும்

302 - வெற்றி செயவுற்ற
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000