சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
308   ஆறு திருப்பதி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 146 - வாரியார் # 456 )  

ஈனமிகுத்துள பிறவி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தானதனத் தனதனன ...... தனதான
     தானதனத் தனதனன ...... தனதான

ஈனமிகுத் துளபிறவி ...... யணுகாதே
     யானுமுனக் கடிமையென ...... வகையாக
ஞானஅருட் டனையருளி ...... வினைதீர
     நாணமகற் றியகருணை ...... புரிவாயே
தானதவத் தினின்மிகுதி ...... பெறுவோனே
     சாரதியுத் தமிதுணைவ ...... முருகோனே
ஆனதிருப் பதிகமரு ...... ளிளையோனே
     ஆறுதிருப் பதியில்வளர் ...... பெருமாளே.

ஈனமிகுத்துள பிறவி யணுகாதே
யானுமுனக்கு அடிமையென வகையாக
ஞானஅருள் தனையருளி வினைதீர
நாணம் அகற்றிய கருணை புரிவாயே
தானதவத்தினின்மிகுதி பெறுவோனே
சாரதியுத்தமி துணைவ முருகோனே
ஆனதிருப் பதிகம் அருள் இளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே.
 

இழிவு மிகுந்துள்ள பிறப்பு மீண்டும் என்னை அணுகாதபடி, நானும் உனக்கு அடிமையாகும் பாக்கியத்தைப் பெற மெய்ஞ்ஞான அருளைப் புரிந்து, அடியேனது வினைகள் அறவே நீங்க, (வள்ளியிடம் வெட்கத்தை விட்டு வலியச் சென்று ஆட்கொண்டது போல) நாணத்தை நீக்கி நீயே வந்து கருணை புரிவாயாக. அடியார்களின் தானத்திலும் தவத்திலும் மேன்மையான பகுதியைப் பெறுபவனே,
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
ஈனமிகுத்துள பிறவி யணுகாதே ... இழிவு மிகுந்துள்ள பிறப்பு
மீண்டும் என்னை அணுகாதபடி,
யானுமுனக்கு அடிமையென வகையாக ... நானும் உனக்கு
அடிமையாகும் பாக்கியத்தைப் பெற
ஞானஅருள் தனையருளி ... மெய்ஞ்ஞான அருளைப் புரிந்து,
வினைதீர ... அடியேனது வினைகள் அறவே நீங்க,
நாணம் அகற்றிய கருணை புரிவாயே ... (வள்ளியிடம்
வெட்கத்தை விட்டு வலியச் சென்று ஆட்கொண்டது போல)
நாணத்தை நீக்கி நீயே வந்து கருணை புரிவாயாக.
தானதவத்தினின்மிகுதி பெறுவோனே ... அடியார்களின்
தானத்திலும் தவத்திலும் மேன்மையான பகுதியைப் பெறுபவனே,
சாரதியுத்தமி துணைவ முருகோனே ...
Similar songs:

308 - ஈனமிகுத்துள பிறவி (ஆறு திருப்பதி)

தானதனத் தனதனன ...... தனதான
     தானதனத் தனதனன ...... தனதான

Songs from this thalam ஆறு திருப்பதி

307 - அலைகடல் நிகராகிய

308 - ஈனமிகுத்துள பிறவி

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:48 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org