![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி இயலிசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி 31 - இயலிசையில் உசித (திருச்செந்தூர்) Songs from this thalam திருச்செந்தூர் 1334 - கன்றிவரு நீல
31 திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 17 - வாரியார் # 25 )
இயலிசையில் உசித
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதனன தனன தந்தத் ...... தனதான
தனதனன தனன தந்தத் ...... தனதான
இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே
மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே
உயர்கருணை புரியும் இன்பக்கடல் மூழ்கி
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே
மயில் தகர்கல் இடையர் அந்தத் தினைகாவல்
வனசகுற மகளை வந்தித்து அணைவோனே
கயிலைமலை அனைய செந்தில் பதிவாழ்வே
கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே. இலக்கியத் தமிழிலும், இசையிலும் சிறப்பான பெண்களிடம் ஈடுபட்டு, அதனால் தளர்வு அடைந்து, இரவும் பகலும் மனது அவர்களையே நினைத்து நான் அலையாமல் இருந்து, உனது உயர்ந்த கருணையால் வரும் பேரின்பக் கடலில் மூழ்கி உன்னை நான் எனது உள்ளத்திலே அறியக்கூடிய அன்பினைத் தந்தருள்வாயாக. மயிலும் ஆடுகளும் உள்ள மலையிடை வாழும் வேடர்களின் அழகிய தினைப்புனத்தைக் காவல் செய்த லக்ஷ்மி போன்று அழகிய குறத்தியாம் வள்ளியை வணங்கிப் பின் அணைந்து கொண்டவனே, திருக்கயிலை போன்ற புனிதமான செந்தில் திருத்தலத்தில் வாழ்பவனே, யானைமுகனாம் வினாயகனுக்கு தம்பியான கந்தப் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: இயலிசையில் உசித ... இலக்கியத் தமிழிலும், இசையிலும் சிறப்பான
வஞ்சிக்கு அயர்வாகி ... பெண்களிடம் ஈடுபட்டு, அதனால் தளர்வு
அடைந்து,
இரவுபகல் மனது சிந்தித்து ... இரவும் பகலும் மனது அவர்களையே
நினைத்து
உழலாதே ... நான் அலையாமல் இருந்து,
உயர்கருணை புரியும் ... உனது உயர்ந்த கருணையால் வரும்
இன்பக்கடல்மூழ்கி ... பேரின்பக் கடலில் மூழ்கி
உனையெனதுள் அறியும் ... உன்னை நான் எனது உள்ளத்திலே
அறியக்கூடிய
அன்பைத் தருவாயே ... அன்பினைத் தந்தருள்வாயாக.
மயில் தகர்கல் இடையர் ... மயிலும் ஆடுகளும் உள்ள மலையிடை
வாழும் வேடர்களின்
அந்தத் தினைகாவல் ... அழகிய தினைப்புனத்தைக் காவல் செய்த
வனசகுற மகளை ... லக்ஷ்மி போன்று அழகிய குறத்தியாம் வள்ளியை
வந்தித்து அணைவோனே ... வணங்கிப் பின் அணைந்து
கொண்டவனே,
கயிலைமலை யனைய செந்தில் ... திருக்கயிலை போன்ற புனிதமான
செந்தில்
பதிவாழ்வே ... திருத்தலத்தில் வாழ்பவனே,
கரிமுகவ னிளைய ... யானைமுகனாம் வினாயகனுக்கு தம்பியான
கந்தப் பெருமாளே. ... கந்தப் பெருமாளே.
தனதனன தனன தந்தத் ...... தனதான
தனதனன தனன தந்தத் ...... தனதான
This page was last modified on Thu, 13 Aug 2026 23:55:08 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this
WhatsApp Group