💾 Save Offline
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான
கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக் கணவகெட் டேனெனப் ...... பெறுமாது கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக் கதறிடப் பாடையிற் ...... றலைமீதே பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப் பறைகள்கொட் டாவரச் ...... சமனாரும் பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப் பரிகரித் தாவியைத் ...... தரவேணும் அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற் றருணையிற் கோபுரத் ...... துறைவோனே அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத் தரியசொற் பாவலர்க் ...... கெளியோனே புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற் புனமறப் பாவையைப் ...... புணர்வோனே பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப் பொருமுழுச் சேவகப் ...... பெருமாளே.
கயல்விழித்தேன் எனைச் செயலழித் தாயென கணவகெட் டேனெனப் பெறுமாது கருதுபுத் ராஎனப் புதல்வர் அப்பா எனக் கதறிடப் பாடையிற் றலைமீதே பயில்குலத் தாரழப் பழையநட் பாரழ பறைகள்கொட் டாவர சமனாரும் பரியகைப் பாசம்விட் டெறியுமப்போது எனைப் பரிகரித்து ஆவியைத் தரவேணும் அயில் அறச் சேவல்கைக்கு இனிதர தோகையுற்று அருணையிற் கோபுரத் துறைவோனே அமரர் அத்தா சிறுக் குமரிமுத்தா சிவத் தரியசொற் பாவலர்க்கு எளியோனே புயல் இளைப்பாறு பொற் சயில மொய்ச் சாரலில் புனமறப் பாவையைப் புணர்வோனே பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனை பொருமுழுச் சேவகப் பெருமாளே.
கண்விழித்து உனக்கு எத்தனை நாள் பணிவிடைகள் செய்தேன், என்னை செயலற்றுப் போகச் செய்துவிட்டாயே என்றும், கணவனே, உன்னை இழந்து நான் அழிந்து போனேனே என்றும் மனைவி அழவும், என் கருத்திலேயே நிலைத்து நிற்கும் மகனே என்று தாயார் அழவும், புதல்வர் அப்பா எனக் கதறி அழவும், பிணத்தை வைத்த பாடையின் தலைமாட்டில் நின்று பழகிய சுற்றத்தார் அழவும், பழமையான நட்பினர்கள் அழவும், பறைகளை முழக்கிக் கொண்டு பலர் வரவும், யமனும் பருத்த கையிலுள்ள பாசக் கயிற்றை என்மீது விட்டெறியும் அந்தத் தருணத்தில் என்னைக் காப்பாற்றி உயிரைத் தந்தருள்க. வேலும், தர்ம நெறி வழுவாத சேவற்கொடியும் கைகளில் இனிது விளங்க, மயில் மீது விளங்கி, திருவண்ணாமலைக் கோபுரத்து வாயிலில் வீற்றிருப்பவனே, தேவர்களுக்குத் தலைவனே, அவர்களிடை வளர்ந்த சிறிய குமரி தேவயானையை முத்தமிட்டு மகிழ்வோனே, சிவபிரானை அருமையான சொற்களால் பாடும் புலவர்களுக்கு எளியவனே, மேகங்கள் தங்கி இளைப்பாறும் அழகிய மலையாம் வள்ளிமலையின் நெருங்கிய மலைச்சாரலில் தினைப்புனம் காத்த வேடர்குலப் பெண் வள்ளியைக் கூடியவனே, தூளாகும்படியாக கிரெளஞ்ச மலையோடும், கடலில் மாமரமாக நின்ற சூரனோடும் போர் புரிந்த, பரிபூரண பராக்கிரமத்தை உடைய பெருமாளே.
Audio/Video Link(s) கயல்விழித்தேன் எனைச் செயலழித் தாயென ... கண்விழித்து உனக்கு எத்தனை நாள் பணிவிடைகள் செய்தேன், என்னை செயலற்றுப் போகச் செய்துவிட்டாயே என்றும்,கணவகெட்டேனெனப் பெறுமாது ... கணவனே, உன்னை இழந்து நான் அழிந்து போனேனே என்றும் மனைவி அழவும்,கருதுபுத்ராஎன ... என் கருத்திலேயே நிலைத்து நிற்கும் மகனே என்று தாயார் அழவும்,புதல்வர் அப்பா எனக் கதறிட ... புதல்வர் அப்பா எனக் கதறி அழவும்,பாடையிற் றலைமீதே ... பிணத்தை வைத்த பாடையின் தலைமாட்டில் நின்றுபயில்குலத்தாரழப் பழையநட்பாரழ ... பழகிய சுற்றத்தார் அழவும், பழமையான நட்பினர்கள் அழவும்,பறைகள்கொட்டாவர ... பறைகளை முழக்கிக் கொண்டு பலர் வரவும்,சமனாரும் பரியகைப் பாசம்விட்டெறியுமப்போது ... யமனும் பருத்த கையிலுள்ள பாசக் கயிற்றை என்மீது விட்டெறியும் அந்தத் தருணத்தில்எனைப் பரிகரித்து ஆவியைத் தரவேணும் ... என்னைக் காப்பாற்றி உயிரைத் தந்தருள்க.அயில் அறச் சேவல்கைக்கு இனிதர ... வேலும், தர்ம நெறி வழுவாத சேவற்கொடியும் கைகளில் இனிது விளங்க,தோகையுற்று அருணையிற் கோபுரத்துறைவோனே ... மயில் மீது விளங்கி, திருவண்ணாமலைக் கோபுரத்து வாயிலில் வீற்றிருப்பவனே,அமரர் அத்தா சிறுக் குமரிமுத்தா ... தேவர்களுக்குத் தலைவனே, அவர்களிடை வளர்ந்த சிறிய குமரி தேவயானையை முத்தமிட்டு மகிழ்வோனே,சிவத்தரியசொற் பாவலர்க்கு எளியோனே ... சிவபிரானை அருமையான சொற்களால் பாடும் புலவர்களுக்கு எளியவனே,புயல் இளைப்பாறு பொற் சயில மொய்ச் சாரலில் ... மேகங்கள் தங்கி இளைப்பாறும் அழகிய மலையாம் வள்ளிமலையின் நெருங்கிய மலைச்சாரலில்புனமறப் பாவையைப் புணர்வோனே ... தினைப்புனம் காத்த வேடர்குலப் பெண் வள்ளியைக் கூடியவனே,பொடிபடப் பூதரத்தொடு கடற் சூரனை ... தூளாகும்படியாக கிரெளஞ்ச மலையோடும், கடலில் மாமரமாக நின்ற சூரனோடும்பொருமுழுச் சேவகப் பெருமாளே. ... போர் புரிந்த, பரிபூரண பராக்கிரமத்தை உடைய பெருமாளே.
Similar songs: 131 - கரியிணை கோடென (பழநி)
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான
376 - கயல் விழித்தேன் (திருவருணை)
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான
377 - கறுவு மிக்கு ஆவி (திருவருணை)
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான
378 - பரியகைப் பாசம் (திருவருணை)
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான
Songs from this thalam திருவருணை
6 - முத்தைத்தரு
367 - குமர குருபர குணதர
368 - அருவ மிடையென
369 - கருணை சிறிதும்
370 - துகிலு ம்ருகமத
371 - மகர மெறிகடல்
372 - முகிலை யிகல்
373 - முருகு செறிகுழல் சொரு
374 - விடமும் அமுதமும்
375 - கமரி மலர்குழல்
376 - கயல் விழித்தேன்
377 - கறுவு மிக்கு ஆவி
378 - பரியகைப் பாசம்
379 - தருண மணி
380 - முழுகிவட
381 - வடவை அனல் ஊடு
382 - ஆலவிழி நீல
383 - பேதக விரோத
384 - அமுதம் ஊறு சொல்
385 - உருகும் மாமெழுகாக
386 - கரி உரி அரவம்
387 - கனை கடல் வயிறு
388 - இரவியும் மதியும்
389 - விரகொடு வளை
390 - இடம் அடு சுறவை
391 - கெஜ நடை மடவார்
392 - அருக்கார் நலத்தை
393 - அருமா மதனை
394 - அழுதும் ஆவா
395 - ஆனை வரிக் கோடு
396 - இடருக்கு இடர்
397 - இமராஜன் நிலாவது
398 - இரத சுரதமுலை
399 - இரவுபகற் பலகாலும்
400 - இருவர் மயலோ
401 - இருவினை அஞ்ச
402 - இருவினை ஊண்
403 - இருளளகம் அவிழ
404 - இறுகு மணி முலை
405 - உலையிலனல்
406 - கடல்பரவு தரங்க
407 - கமலமுகப் பிறை
408 - கமல மொட்டை
409 - கரிமுகக் கடகளிறு
410 - கரு நிறம் சிறந்து
411 - காணாத தூர நீள்
412 - காராடக் குழல்
413 - காரும் மருவும்
414 - கீத விநோத மெச்சு
415 - குரவ நறும் அளக
416 - குழவியுமாய் மோகம்
417 - கேதகையபூ முடித்த
418 - கோடு ஆன மடவார்கள்
419 - கோடு செறி
420 - சிலைநுதல் வைத்து
421 - சிவமாதுடனே
422 - சினமுடுவல் நரிகழுகு
423 - சுக்கிலச் சுரொணித
424 - செஞ்சொற் பண்
425 - செயசெய அருணா
426 - தமரம் குரங்களும்
427 - தமிழோதிய குயிலோ
428 - தலையை மழித்து
429 - திருட்டு வாணிப
430 - தேதென வாச முற்ற
431 - தோதகப் பெரும்
432 - பாண மலரது
433 - பாலாய் நூலாய்
434 - புணர்முலை மடந்தை
435 - புலையனான
436 - போக கற்ப
437 - மானை விடத்தை
438 - முகத் துலக்கிகள்
439 - மேக மொத்தகுழலார்
440 - மொழிய நிறம்
441 - வலிவாத பித்தமொடு
442 - விடு மதவேள்
443 - விதி அதாகவே
444 - விந்துப் புளகித
445 - வீறு புழுகான பனி
1328 - ஏறுமயிலேறி