தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
| புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன் பொறையி லாத கோபீகன் ...... முழுமூடன் புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி பொறிக ளோடி போய்வீழு ...... மதிசூதன் நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி நெறியி லாத வேமாளி ...... குலபாதன் நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல் நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள் சிதையு மாறு போராடி ...... யொருசீதை சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு திறமி யான மாமாயன் ...... மருகோனே அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி அமர தாடி யேதோகை ...... மயிலேறி அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும் அருணை மீதி லேமேவு ...... பெருமாளே. |
| புலையனான மாவீனன் வினையிலேகு மாபாதன் பொறையிலாத கோபீகன் முழுமூடன் புகழி லாத தாமீகன் அறிவிலாத காபோதி பொறிகளோடி போய்வீழும் மதிசூதன் நிலையிலாத கோமாளி கொடையி லாத ஊதாரி நெறியிலாத ஏமாளி குலபாதன் நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல் நினையுமாறு நீமேவி யருள்வாயே சிலையில் வாளி தானேவி எதிரி ராவணார்தோள்கள் சிதையு மாறு போராடி ஒருசீதை சிறையிலாமலேகூடி புவனி மீதிலேவீறு திறமியான மாமாயன் மருகோனே அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி அமரது ஆடியே தோகை மயிலேறி அதிக தேவரேசூழ உலக மீதிலே கூறும் அருணை மீதிலே மேவு பெருமாளே. |
கீழ்மகனாக மிகவும் இழிந்தவன், தீவினைச் செயல்களிலேயே செல்லுகின்ற மகா பாதகன், பொறுமை என்பதே சிறிதும் இல்லாத கோப குணத்தினன் முழு முட்டாள், புகழில்லாத வெறும் டாம்பீகன், அறிவு என்பதே அற்ற கண்ணில்லாக் கபோதி, ஐம்பொறிகள் இழுக்கும் வழியிலே வீழும் பெரிய சூதுடையவன், ஒரு நிலையில் நிற்காத கோணங்கி, ஈகை என்பதே இல்லாத வீண் செலவுக்காரன், நல்லொழுக்கம் இல்லாத பேதை, நான் பிறந்த குலத்தையே பாவத்துக்கு ஆளாக்குபவன், இத்தகைய நான் உன் திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல் நினைக்கும்வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள் புரிவாயாக. வில்லினின்றும் அம்பைச் செலுத்தி பகைவன் ராவணனுடைய தோள்கள் அறுபடும்படிப் போரிட்டு, ஒப்பற்ற சீதையைச் சிறையிலிருந்து விடுவித்து இவ்வுலகிலேயே மிக்க சாமர்த்தியசாலியாக விளங்கிய ராமனாக வந்த மகா மாயன் திருமாலின் மருமகனே, மேரு மலை அலைச்சலுறவும், பெருஞ் சூரர் பொடிபடும்படியாகவும் வேலினைச் செலுத்தி போர் புரிந்து, கலாப மயில் மீதில் நிரம்ப தேவர்கள் புடை சூழ, உலகில் புகழ்ந்து பேசப்படும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
|
| Audio/Video Link(s) |
புலையனான மாவீனன் ... கீழ்மகனாக மிகவும் இழிந்தவன், வினையிலேகு மாபாதன் ... தீவினைச் செயல்களிலேயே செல்லுகின்ற மகா பாதகன், பொறையிலாத கோபீகன் ... பொறுமை என்பதே சிறிதும் இல்லாத கோப குணத்தினன் முழுமூடன் புகழி லாத தாமீகன் ... முழு முட்டாள், புகழில்லாத வெறும் டாம்பீகன், அறிவிலாத காபோதி ... அறிவு என்பதே அற்ற கண்ணில்லாக் கபோதி, பொறிகளோடி போய்வீழும் அதிசூதன் ... ஐம்பொறிகள் இழுக்கும் வழியிலே வீழும் பெரிய சூதுடையவன், நிலையிலாத கோமாளி ... ஒரு நிலையில் நிற்காத கோணங்கி, கொடையி லாத ஊதாரி ... ஈகை என்பதே இல்லாத வீண் செலவுக்காரன், நெறியிலாத ஏமாளி ... நல்லொழுக்கம் இல்லாத பேதை, குலபாதன் ... நான் பிறந்த குலத்தையே பாவத்துக்கு ஆளாக்குபவன், இத்தகைய நான் நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல் ... உன் திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல் நினையுமாறு நீமேவி யருள்வாயே ... நினைக்கும்வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள் புரிவாயாக. சிலையில் வாளி தானேவி ... வில்லினின்றும் அம்பைச் செலுத்தி எதிரி ராவணார்தோள்கள் சிதையு மாறு போராடி ... பகைவன் ராவணனுடைய தோள்கள் அறுபடும்படிப் போரிட்டு, ஒருசீதை சிறையிலாமலேகூடி ... ஒப்பற்ற சீதையைச் சிறையிலிருந்து விடுவித்து புவனி மீதிலேவீறு திறமியான ... இவ்வுலகிலேயே மிக்க சாமர்த்தியசாலியாக விளங்கிய மாமாயன் மருகோனே ... ராமனாக வந்த மகா மாயன் திருமாலின் மருமகனே, அலைய மேரு மாசூரர் பொடிய தாக ... மேரு மலை அலைச்சலுறவும், பெருஞ் சூரர் பொடிபடும்படியாகவும் வேலேவி அமரது ஆடியே தோகைமயிலேறி ... வேலினைச் செலுத்தி போர் புரிந்து, கலாப மயில் மீதில் அதிக தேவரேசூழ உலக மீதிலேகூறும் ... நிரம்ப தேவர்கள் புடை சூழ, உலகில் புகழ்ந்து பேசப்படும் அருணை மீதிலேமேவு பெருமாளே. ... திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
|
|
Similar songs:
244 - உடலி னூடு (திருத்தணிகை)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
435 - புலையனான (திருவருணை)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
577 - கரிபுராரி காமாரி (விராலிமலை)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
637 - அலகின் மாறு (கதிர்காமம்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
694 - கடிய வேக (திருமயிலை)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
765 - இரதமான தேன் (சீகாழி)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
912 - திரு உரூப நேராக (வயலூர்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1043 - அகல நீளம் (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1044 - அடை படாது (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1045 - அமல வாயு (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1046 - அயிலின் வாளி (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1047 - இரதமான வாய் ஊறல் (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1048 - குருதி தோலினால் (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1049 - சுருதி ஊடு கேளாது (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1050 - தொட அடாது (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1051 - நிலவில் மாரன் (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1052 - மன கபாட (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1053 - அதல சேடனாராட (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
1054 - குருதி மூளை (பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
Songs from this thalam திருவருணை