![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
புமியதனிற் ......ப்ரபுவான புமியதனிற் ப்ரபுவான 521 - புமி அதனில் (கயிலைமலை) Songs from this thalam கயிலைமலை
521 கயிலைமலை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 160 - வாரியார் # 241 )
புமி அதனில்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதனனத் ...... தனதான
தனதனனத் ...... தனதான
புகலியில்வித் ...... தகர்போல
அமிர்தகவித் ...... தொடைபாட
அடிமைதனக் ...... கருள்வாயே
சமரிலெதிர்த் ...... தசுர்மாளத்
தனியயில்விட் ...... டருள்வோனே
நமசிவயப் ...... பொருளானே
ரசதகிரிப் ...... பெருமாளே.
புகலியில்.....வித்தகர்போல
அமிர்தகவித் தொடைபாட
அடிமைதனக்கு.....அருள்வாயே
சமரிலெதிர்த்த சுர் மாள
தனியயில்விட்டு.....அருள்வோனே
நமசிவயப் பொருளானே
ரசதகிரிப்.....பெருமாளே. இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும் தலைவரும், சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு இந்த அடிமைக்கும் திருவருள் புரிவாயாக. போரில் எதிர்த்து வந்த சூரன் மாண்டொழிய ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவி அருளியவனே, நமசிவய என்ற ஐந்தெழுத்தின் தத்துவமாகியவனே, வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) உள்ள பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: புமியதனிற் ப்ரபுவான ... இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும்
தலைவரும்,
புகலியில் வித்தகர்போல ... சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான
திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல
அமிர்தகவித் தொடைபாட ... இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத்
தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு
அடிமைதனக்கு அருள்வாயே ... இந்த அடிமைக்கும் திருவருள்
புரிவாயாக.
சமரிலெதிர்த்த சுர் மாள ... போரில் எதிர்த்து வந்த சூரன்
மாண்டொழிய
தனியயில்விட்டு அருள்வோனே ... ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவி
அருளியவனே,
நமசிவயப் பொருளானே ... நமசிவய என்ற ஐந்தெழுத்தின்
தத்துவமாகியவனே,
ரசதகிரிப் பெருமாளே. ... வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) உள்ள
பெருமாளே.
தனதனனத் ...... தனதான
தனதனனத் ...... தனதான