| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
பத்தியால் யானுனைப் ...... பலகாலும் பத்தியால் யானுனை பலகாலும் 567 - பத்தியால் யானுனை (இரத்னகிரி) Songs from this thalam இரத்னகிரி
567 இரத்னகிரி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 148 - வாரியார் # 348 )
பத்தியால் யானுனை
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தத்தனா தானனத் ...... தனதான
தத்தனா தானனத் ...... தனதான
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.
பற்றியே மாதிருப்.....புகழ் பாடி
முத்தனாம் ஆறெனை பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கு.....அருள்வாயே
உத்தம அதான சற் குணர்நேயா
ஒப்பிலா மா மணிக்.....கிரிவாசா
வித்தகா ஞானசத்தி நிபாதா
வெற்றிவே லாயுதப்.....பெருமாளே.
அன்பினால் உன்னை உறுதியாக பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு உயர்ந்த திருப்புகழைப் பாடி ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை இடையறா இன்ப வாழ்வாம் சிவகதியை சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக உத்தம குணங்களைப் பற்றிக்கொண்டுள்ள நல்ல இயல்புள்ளவர்களின் நண்பனே சமானம் இல்லாத பெருமை பொருந்திய ரத்னகிரியில் வாழ்பவனே பேரறிவாளனே திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: பத்தியால் யானுனை ... அன்பினால் உன்னை உறுதியாக
பலகாலும் பற்றியே ... பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு
மாதிருப்புகழ் பாடி ... உயர்ந்த திருப்புகழைப் பாடி
முத்தனாம் ஆறெனை ... ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை
பெருவாழ்வின் முத்தியே ... இடையறா இன்ப வாழ்வாம் சிவகதியை
சேர்வதற்கு அருள்வாயே ... சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக
உத்தம அதான ... உத்தம குணங்களைப் பற்றிக்கொண்டுள்ள
சற் குணர்நேயா ... நல்ல இயல்புள்ளவர்களின் நண்பனே
ஒப்பிலா மா ... சமானம் இல்லாத பெருமை பொருந்திய
மணிக்கிரிவாசா ... ரத்னகிரியில் வாழ்பவனே
வித்தகா ... பேரறிவாளனே
ஞானசத்தி நிபாதா ... திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே
வெற்றிவே லாயுதப் பெருமாளே. ... வெற்றியைத் தரும் வேலை
ஆயுதமாகக் கொண்ட பெருமாளே.
தத்தனா தானனத் ...... தனதான
தத்தனா தானனத் ...... தனதான
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000