சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
779   வைத்தீசுரன் கோயில் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 318 - வாரியார் # 789 )  

உரத்துறை போத

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனத்தன தானத் ...... தனதான

உரத்துறை போதத் ...... தனியான
உனைச்சிறி தோதத் ...... தெரியாது
மரத்துறை போலுற் ...... றடியேனும்
மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ
பரத்துறை சீலத் ...... தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற் ...... றருள்வோனே
வரத்துறை நீதர்க் ...... கொருசேயே
வயித்திய நாதப் ...... பெருமாளே.

உரத்துறை போதத்.....தனியான
     உனைச்சிறிதோதத்.....தெரியாது
மரத்துறை போலுற்று.....அடியேனும்
     மலத்திருள் மூடிக்.....கெடலாமோ
பரத்துறை சீலத்தவர்.....வாழ்வே
     பணித்தடி வாழ்வுற்று.....அருள்வோனே
வரத்துறை நீதர்க்கு.....ஒருசேயே
     வயித்திய நாதப்.....பெருமாளே.

உறுதி வாய்ந்த ஞானத்தின் தனிப்பொருளான உன்னைச் சிறிதளவேனும் போற்றத் தெரியாமல் மரக்கட்டை போன்று இருந்து அடியேனும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் இருள் போல் என் மனத்தை மூடி நான் கெட்டுப்போகலாமோ? மேலான நிலையிலுள்ள புனித வாழ்க்கையர்களின் செல்வமே, உன் திருவடியில் பணிவித்து வாழ்வு பெற அருள்வோனே, வரம் தருவதே தன் நீதியாகக் கொண்ட சிவனாரின் ஒப்பற்ற சேயே, வைத்தீசுரன்கோயில் நாதனாம் சிவனுக்குப் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
உரத்துறை போதத் தனியான ... உறுதி வாய்ந்த ஞானத்தின்
தனிப்பொருளான
உனைச்சிறிதோதத் தெரியாது ... உன்னைச் சிறிதளவேனும்
போற்றத் தெரியாமல்
மரத்துறை போலுற்று அடியேனும் ... மரக்கட்டை போன்று
இருந்து அடியேனும்
மலத்திருள் மூடிக் கெடலாமோ ... ஆணவம், கன்மம், மாயை
என்ற மும்மலங்களும் இருள் போல் என் மனத்தை மூடி நான்
கெட்டுப்போகலாமோ?
பரத்துறை சீலத்தவர் வாழ்வே ... மேலான நிலையிலுள்ள புனித
வாழ்க்கையர்களின் செல்வமே,
பணித்தடி வாழ்வுற்று அருள்வோனே ... உன் திருவடியில்
பணிவித்து வாழ்வு பெற அருள்வோனே,
வரத்துறை நீதர்க்கு ஒருசேயே ... வரம் தருவதே தன் நீதியாகக்
கொண்ட சிவனாரின் ஒப்பற்ற சேயே,
வயித்திய நாதப் பெருமாளே. ... வைத்தீசுரன்கோயில் நாதனாம்
சிவனுக்குப் பெருமாளே.
Similar songs:

779 - உரத்துறை போத (வைத்தீசுரன் கோயில்)

தனத்தன தானத் ...... தனதான

Songs from this thalam வைத்தீசுரன் கோயில்

779 - உரத்துறை போத

780 - எத்தனை கோடி

781 - பாட கச்சிலம்போடு

782 - மாலினால் எடுத்த

783 - மூல ஆதாரமோடு

784 - மேக வார்குழல

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:48 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org