💾 Save Offline
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதானா
அறிவழிய மயல்பெருக உரையுமற விழிசுழல
அனல்-அவிய மலமொழுக ...... அகலாதே
அனையுமனை அருகிலுற வெருவியழ உறவும்-அழ
அழலினிகர் மறலியெனை ...... அழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுலன் ஒழியவுயர்
திருவடியில் அணுகவர ...... அருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவன்-அக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே
நெறிதவறி அலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி
நிலவுமறை அவன்-இவர்கள் அலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே
மறிபரசு கரம்-இலகு பரமன்-உமை இருவிழியும்
மகிழமடிம் இசைவளரும் ...... இளையோனே
மதலைதவ ழும்-உததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே.
அறிவழிய மயல் பெருக உரையுமற விழிசுழல அனலவிய மலமொழுக அகலாதே அனையுமனை அருகிலுற வெருவியழ >உறவுமழ அழலினிகர் மறலி யெனை அழையாதே செறியுமிரு வினை கரண மருவுபுலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே சிவனைநிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே நெறிதவறி அலரிமதி நடுவன் மகபதி முளரி நிருதி நிதிபதி கரிய வனமாலி நிலவுமறை அவனிவர்கள் அலைய அரசுரிமை புரி நிருதனுரம் அற அயிலை விடுவோனே மறிபரசு கரமிலகு பரமனுமை இருவிழியு மகிழமடி மிசை வளரும் இளையோனே மதலைதவழ் உததியிடை வருதரள மணி புளின மறையவுயர் கரையிலுறை பெருமாளே.
அறிவு மங்கிப் போகவும், மயக்கம் பெருகவும், பேச்சும் அடங்கிப் போகவும், கண்கள் சுழலவும், உடம்பின் சூடு தணியவும், மலம் (தன்னிச்சையின்றி) ஒழுகவும், நீங்காமலே என் அன்னையும் மனைவியும் பக்கத்திலிருந்து பயந்து அழ, உறவினரும் அழ, நெருப்பை நிகர்த்த கொடிய யமன் என்னை அழைத்துச் செல்லாத படிக்கு, என்னை நெருங்கியுள்ள இருவினைகளும் (நல்வினை, தீவினை), என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியாக, உன் உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் தந்தருள்வாயாக சிவனுக்கு ஒப்பான பொதியமலையைச் சார்ந்த முனிவன் (அகத்தியன்) உள்ளம் மகிழ அவனது இரண்டு செவிகளும் குளிர, இனிய தமிழை ஓதியவனே தத்தமக்கு உண்டான வழி தவறி சூரியன், சந்திரன், யமன், இந்திரன், அக்கினி, நிருதி, குபேரன், கரிய நிறமானவனும், துளசி மாலை தரித்த திருமாலும், நிலைத்த பிரமன், ஆகியவர்கள் அலையும்படி (கொடிய) ஆட்சி புரிந்த அசுரனாம் சூரனின் மார்பு பிளவுபடும்படி வேலைச் செலுத்தியவனே மானும், மழுவும் கரங்களில் விளங்கும் பரமசிவனும், உமையும் தங்கள் இருவிழிகளும் உவகைகொள்ளும்படி அவர்தம் மடியின் மேல் வளரும் இளைய குமாரனே கப்பல்கள் தவழும் கடலிடையே வருகின்ற முத்து மணிகள் மணல்மேட்டில் மறையும்படி உயர்ந்த (திருச்செந்தூர்க்) கரையில் அமர்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)
அறிவழிய ... அறிவு மங்கிப் போகவும்,மயல் பெருக ... மயக்கம் பெருகவும்,உரையுமற ... பேச்சும் அடங்கிப் போகவும்,விழிசுழல ... கண்கள் சுழலவும்,அனலவிய ... உடம்பின் சூடு தணியவும்,மலமொழுக ... மலம் (தன்னிச்சையின்றி) ஒழுகவும்,அகலாதே அனையுமனை அருகிலுற ... நீங்காமலே என் அன்னையும் மனைவியும் பக்கத்திலிருந்துவெருவியழ ... பயந்து அழ,உறவுமழ ... உறவினரும் அழ,அழலினிகர் மறலி ... நெருப்பை நிகர்த்த கொடிய யமன்யெனை அழையாதே ... என்னை அழைத்துச் செல்லாத படிக்கு,செறியுமிரு வினை ... என்னை நெருங்கியுள்ள இருவினைகளும் (நல்வினை, தீவினை),கரண மருவுபுலன் ... என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும்ஒழிய ... ஒழிந்து நீங்கும்படியாக,உயர் திருவடியில் அணுக ... உன் உயர்ந்த திருவடிகளை அணுகவரம் அருள்வாயே ... எனக்கு வரம் தந்தருள்வாயாகசிவனைநிகர் ... சிவனுக்கு ஒப்பானபொதியவரை முனிவன் ... பொதியமலையைச் சார்ந்த முனிவன் (அகத்தியன்)அகமகிழ ... உள்ளம் மகிழஇரு செவிகுளிர ... அவனது இரண்டு செவிகளும் குளிர,இனியதமிழ் பகர்வோனே ... இனிய தமிழை ஓதியவனேநெறிதவறி ... தத்தமக்கு உண்டான வழி தவறிஅலரிமதி நடுவன் ... சூரியன், சந்திரன், யமன்,மகபதி முளரி ... இந்திரன், அக்கினி,நிருதி நிதிபதி ... நிருதி, குபேரன்,கரிய வனமாலி ... கரிய நிறமானவனும், துளசி மாலை தரித்த திருமாலும்,நிலவுமறை ... நிலைத்த பிரமன்,அவனிவர்கள் அலைய ... ஆகியவர்கள் அலையும்படிஅரசுரிமை புரி ... (கொடிய) ஆட்சி புரிந்தநிருதனுரம் அற ... அசுரனாம் சூரனின் மார்பு பிளவுபடும்படிஅயிலை விடுவோனே ... வேலைச் செலுத்தியவனேமறிபரசு கரமிலகு ... மானும், மழுவும் கரங்களில் விளங்கும்பரமனுமை இருவிழியு ... பரமசிவனும், உமையும் தங்கள் இருவிழிகளும்மகிழமடி மிசை ... உவகைகொள்ளும்படி அவர்தம் மடியின் மேல்வளரும் இளையோனே ... வளரும் இளைய குமாரனேமதலைதவழ் உததியிடை ... கப்பல்கள் தவழும் கடலிடையேவருதரள மணி ... வருகின்ற முத்து மணிகள்புளின மறையவுயர் ... மணல்மேட்டில் மறையும்படி உயர்ந்தகரையிலுறை பெருமாளே. ... (திருச்செந்தூர்க்) கரையில் அமர்ந்த பெருமாளே.
Similar songs: 28 - அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்)
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதானா
Songs from this thalam திருச்செந்தூர்
21 - அங்கை மென்குழல்
22 - அந்தகன் வருந்தினம்
23 - அமுத உததி விடம்
24 - அம்பொத்த விழி
25 - அருணமணி மேவு
26 - அவனி பெறுந்தோடு
27 - அளக பாரமலைந்து
28 - அறிவழிய மயல்பெருக
29 - அனிச்சம் கார்முகம்
30 - அனைவரும் மருண்டு
31 - இயலிசையில் உசித
32 - இருகுழை யெறிந்த
33 - இருள்விரி குழலை
34 - உததியறல் மொண்டு
35 - உருக்கம் பேசிய
36 - ஏவினை நேர்விழி
37 - ஓராது ஒன்றை
38 - கட்டழகு விட்டு
39 - கண்டுமொழி
40 - கமல மாதுடன்
41 - கரிக்கொம்பம்
42 - கருப்பம் தங்கு
43 - களபம் ஒழுகிய
44 - கனங்கள் கொண்ட
45 - கன்றிலுறு மானை
46 - காலனார் வெங்கொடும்
47 - குகர மேவுமெய்
48 - குடர்நிண மென்பு
49 - குழைக்கும் சந்தன
50 - கொங்கைகள்
51 - கொங்கைப் பணை
52 - கொடியனைய இடை
53 - கொம்பனையார்
54 - கொலை மதகரி
55 - சங்குபோல் மென்
56 - சங்கை தான் ஒன்று
57 - சத்தம் மிகு ஏழு
58 - சந்தன சவ்வாது
59 - சேமக் கோமள
60 - தகரநறை
61 - தண் தேனுண்டே
62 - தண்டை அணி
63 - தந்த பசிதனை
64 - தரிக்குங்கலை
65 - துன்பங்கொண்டு அங்கம்
66 - தெருப்புறத்து
67 - தொடரியமன்
68 - தொந்தி சரிய
69 - தோலொடு மூடிய
70 - நாலும் ஐந்து வாசல்
71 - நிதிக்குப் பிங்கலன்
72 - நிலையாப் பொருளை
73 - நிறுக்குஞ் சூதன
74 - பங்கம் மேவும் பிறப்பு
75 - பஞ்ச பாதகம்
76 - படர்புவியின் மீது
77 - பதும இருசரண்
78 - பரிமள களப
79 - பருத்தந்த
80 - பாத நூபுரம்
81 - புகரப் புங்க
82 - பூரண வார கும்ப
83 - பெருக்கச் சஞ்சலித்து
84 - மங்கை சிறுவர்
85 - மஞ்செனுங் குழல்
86 - மனத்தின் பங்கு
87 - மனைகனக மைந்தர்
88 - மாய வாடை
89 - மான்போல் கண்
90 - முகிலாமெனும்
91 - முந்துதமிழ் மாலை
92 - முலை முகம்
93 - மூப்புற்றுச் செவி
94 - மூளும்வினை சேர
95 - வஞ்சங்கொண்டும்
96 - வஞ்சத்துடன் ஒரு
97 - வந்து வந்து முன்
98 - வரியார் கருங்கண்
99 - விதி போலும் உந்து
100 - விந்ததில் ஊறி
101 - விறல்மாரன் ஐந்து
102 - வெங்காளம் பாணம்
103 - வெம் சரோருகமோ
1334 - கன்றிவரு நீல
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000