![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏவினை நேர்விழி மாதரை மேவிய 36 - ஏவினை நேர்விழி (திருச்செந்தூர்) Songs from this thalam திருச்செந்தூர் 1334 - கன்றிவரு நீல
36 திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 20 - வாரியார் # 29 )
ஏவினை நேர்விழி
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானன தானன தானன தானன
தானன தானன ...... தனதானா
ஏதனை மூடனை ...... நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை ...... அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை ...... யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது ...... மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் ...... குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி ...... லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு ...... பெருமாளே.
  ஏதனை மூடனை.... நெறி பேணா
ஈனனை ஏடு எழுதா முழு
  ஏழையை மோழையை.... அகலா நீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
  வாய்மை இலாதனை.... இகழாதே
மாமணி நூபுர சேதள தாள் தனி
  வாழ்வுற ஈவதும்.... ஒருநாளே
நாவலர் பாடிய நூலிசையால் வரு
  நாரதனார் புகல்.... குற மாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
  நாயக மாமயில்.... உடையோனே
தேவி மநோமணி ஆயி பராபரை
  தேன் மொழியாள் தரு.... சிறியோனே
சேணுயர் சோலையின் நீழலி லேதிகழ்
  சீரலை வாய் வரு..... பெருமாளே. அம்பினை நிகர்க்கும் கண்களை உடைய மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை, மூடனை, ஒழுக்கம் இல்லாத இழிந்தோனை, படிப்பே இல்லாத முழு ஏழையை, மடையனை, என்னைவிட்டு நீங்கா தீவினை மூடியுள்ள நோயும் பிணியும் கொண்டவனை, உண்மை இல்லாதவானை, இகழ்ந்து ஒதுக்காமல் சிறந்த மணிகளாலான சிலம்புள்ள உன் பாதங்களை, ஒப்பற்ற வாழ்வை (முக்தியை) யான் பெற தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ? புலவர்கள் பாடிய நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர் முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை விரும்பிச் சென்று காட்டிலே கூடிய வீரனே தலைவனே சிறந்த மயில் வாகனனே தேவி, மனோன்மணி, அன்னை, பராபரை, தேன் மொழியாள் உமையின் சிறுமகனே விண்வரை உயர்ந்த சோலைகளின் நிழலினிலே வளங்கும் திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: ஏவினை நேர்விழி ... அம்பினை நிகர்க்கும் கண்களை உடைய
மாதரை மேவிய ஏதனை ... மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை,
மூடனை நெறி பேணா ஈனனை ... மூடனை, ஒழுக்கம் இல்லாத
இழிந்தோனை,
ஏடெழு தாமுழு ஏழையை ... படிப்பே இல்லாத முழு ஏழையை,
மோழையை ... மடையனை,
அகலா நீள் மாவினை மூடிய ... என்னைவிட்டு நீங்கா தீவினை
மூடியுள்ள
நோய்பிணி யாளனை ... நோயும் பிணியும் கொண்டவனை,
வாய்மை யிலாதனை ... உண்மை இல்லாதவானை,
இகழாதே ... இகழ்ந்து ஒதுக்காமல்
மாமணி நூபுர சேதள தாள் ... சிறந்த மணிகளாலான சிலம்புள்ள
உன் பாதங்களை,
தனி வாழ்வுற ... ஒப்பற்ற வாழ்வை (முக்தியை) யான் பெற
ஈவதும் ஒருநாளே ... தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ?
நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் ... புலவர்கள் பாடிய
நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர்
புகல் குற மாதை ... முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை
நாடியெ கானிடை கூடிய சேவக ... விரும்பிச் சென்று காட்டிலே
கூடிய வீரனே
நாயக மாமயில் உடையோனே ... தலைவனே சிறந்த மயில்
வாகனனே
தேவி மநோமணி ஆயிப ராபரை ... தேவி, மனோன்மணி,
அன்னை, பராபரை,
தேன்மொழி யாள்தரு சிறியோனே ... தேன் மொழியாள் உமையின்
சிறுமகனே
சேணுயர் சோலையின் ... விண்வரை உயர்ந்த சோலைகளின்
நீழலி லேதிகழ் ... நிழலினிலே வளங்கும்
சீரலை வாய் வரு பெருமாளே. ... திருச்செந்தூரில் அமர்ந்த
பெருமாளே.
தானன தானன தானன தானன
தானன தானன ...... தனதானா
This page was last modified on Thu, 13 Aug 2026 23:55:08 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this
WhatsApp Group