சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
798   திருவிடைக்கழி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 273 - வாரியார் # 799 )  

மருக்குலாவிய

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனத்த தானன தனதன ...... தனதான

மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே
கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா
சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே.

மருக்கு லாவிய மலரணை கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது.....மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் பழியாதே
கடப்ப மாலையை யினிவர.....விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை மணவாளா
சமர்த்த னேமணி மரகத.....மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனில் உறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய.....பெருமாளே.

நறுமணம் கமழும் மலர்ப் படுக்கை (விரகத்தின் காரணமாக) கொதித்துச் சூடு தராமலும், வளர்த்த தாயும் சுற்றத்தாரும் வசை மொழிகளைப் பேசாமலும், காரணமாக (கருவைத்து) நட்பு கொண்டாடிய அயலார்கள் பழிச் சொல் கூறாமலும் (இருக்க வேண்டுமானால்) உன் (அடையாளமாய்) கடம்ப மாலையை இனி அனுப்பி வைக்க வேண்டும். கற்பக விருட்சத்தின் கீழ் வளர்ந்த, கொடிபோன்ற இடையை உடைய தேவயானையின் மணவாளனே, சாமர்த்தியசாலியே, மரகத மணியின் நிறம் கொண்ட மயில்மீது வரும் வீரனே, திருவிடைக்கழியில் உள்ள திருக்குராமரத்தின் அடிநிழல் தன்னில் வீற்றிருப்பவனே, திருக்கையில் வேல் ஏந்திய, வடிவம் அழகிய பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
மருக்கு லாவிய மலரணை ... நறுமணம் கமழும் மலர்ப் படுக்கை
கொதியாதே ... (விரகத்தின் காரணமாக) கொதித்துச் சூடு தராமலும்,
வளர்த்த தாய்தமர் ... வளர்த்த தாயும் சுற்றத்தாரும்
வசையது மொழியாதே ... வசை மொழிகளைப் பேசாமலும்,
கருக்கு லாவிய அயலவர் ... காரணமாக (கருவைத்து) நட்பு
கொண்டாடிய அயலார்கள்
பழியாதே ... பழிச் சொல் கூறாமலும் (இருக்க வேண்டுமானால்)
கடப்ப மாலையை யினி ... உன் (அடையாளமாய்) கடம்ப
மாலையை இனி
வரவிடவேணும் ... அனுப்பி வைக்க வேண்டும்.
தருக்கு லாவிய ... கற்பக விருட்சத்தின் கீழ் வளர்ந்த,
கொடியிடை மணவாளா ... கொடிபோன்ற இடையை உடைய
தேவயானையின் மணவாளனே,
சமர்த்த னேமணி மரகத மயில்வீரா ... சாமர்த்தியசாலியே, மரகத
மணியின் நிறம் கொண்ட மயில்மீது வரும் வீரனே,
திருக்கு ராவடி நிழல்தனில் ... திருவிடைக்கழியில் உள்ள
திருக்குராமரத்தின் அடிநிழல் தன்னில்
உறைவோனே ... வீற்றிருப்பவனே,
திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே. ... திருக்கையில் வேல்
ஏந்திய, வடிவம் அழகிய பெருமாளே.
Similar songs:

798 - மருக்குலாவிய (திருவிடைக்கழி)

தனத்த தானன தனதன ...... தனதான

Songs from this thalam திருவிடைக்கழி

792 - அனல் அப்பு அரி

793 - இரக்கும் அவர்க்கு

794 - பகரு முத்தமிழ்

795 - படி புனல் நெருப்பு

796 - பழியுறு சட்டகமான

797 - பெருக்க மாகிய

798 - மருக்குலாவிய

799 - முலை குலுக்கிகள்

This page was last modified on Thu, 13 Aug 2026 23:55:08 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group