💾 Save Offline
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான
இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச இருள்பிணி துஞ்ச ...... மலமாய எனதிடர் மங்க வுனதருள் பொங்க இசைகொடு துங்க ...... புகழ்கூறித் திருமுக சந்த்ர முருகக டம்ப சிவசுத கந்த ...... குகவேல சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு திகழந டஞ்செய் ...... கழல்தாராய் மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு மகிழரி விண்டு ...... மருகோனே வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற வலம்வரு செம்பொன் ...... மயில்வீரா அருகுறு மங்கை யொடுவிடை யுந்து மமலனு கந்த ...... முருகோனே அருள்செறி பந்த ணையிலிரு மங்கை அமளிந லங்கொள் ...... பெருமாளே.

சஞ்சித வினை, பிராரப்த வினை ஆகிய இருவினைகளும் பயப்படும்படியாக, இனி வந்து தாக்க இருக்கும் (ஆகாமிய) வினை தான் வரவில்லை என்று கெஞ்சிக் கூத்தாடி விலக, இருண்ட நோய்கள் வாராது மாய்ந்து போக, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்தொழிய, எனது துயரமெல்லாம் குறைந்துபோக, உனது திருவருள் பெருக, இசையுடன் உன் பரிசுத்தமான திருப்புகழைப் பாடி, சந்திரன் போன்ற அழகிய திருமுகத்தை உடையோனே, முருகா, கடம்பா, சிவகுமாரா, கந்தா, குகா, வேலா, சிவசிவ என்று கூறி அதனால் தெளிவுபெற்ற என் நெஞ்சு பொலிவு அடைவதற்காக நடனம் செய்யும் உன் திருவடிகளைத் தந்தருள்வாய். மருதமரம், கம்சன் இவர்களது உயிரை மாய்த்து மகிழ்ந்த ஹரி விஷ்ணுவின் மருமகனே, உயிர்களைக் கொன்ற அசுரர்கள் ஒடுங்க வெற்றிவலம் வந்த செம்பொன் மயில்வீரனே, அருகில் தன் பாகத்தில் அமர்ந்த பார்வதியுடன் ரிஷபவாகனம் ஏறும் அமலபிரான் சிவன் விரும்பும் முருகப் பெருமானே, அருள் நிறைந்த திருப்பந்தணைநல்லூர் தலத்தில் வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவிமாருடனும் மலர்ப்படுக்கையில் இன்புறும் பெருமாளே.
Audio/Video Link(s) இருவினை யஞ்ச ...
சஞ்சித வினை, பிராரப்த வினை ஆகிய இருவினைகளும் பயப்படும்படியாக,வருவினை கெஞ்ச ... இனி வந்து தாக்க இருக்கும் (ஆகாமிய) வினை தான் வரவில்லை என்று கெஞ்சிக் கூத்தாடி விலக,இருள்பிணி துஞ்ச ... இருண்ட நோய்கள் வாராது மாய்ந்து போக,மலம் மாய ... ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்தொழிய,எனதிடர் மங்க ... எனது துயரமெல்லாம் குறைந்துபோக,உனதருள் பொங்க ... உனது திருவருள் பெருக,இசைகொடு துங்க புகழ்கூற ... இசையுடன் உன் பரிசுத்தமான திருப்புகழைப் பாடி,திருமுக சந்த்ர ... சந்திரன் போன்ற அழகிய திருமுகத்தை உடையோனே,முருக கடம்ப சிவசுத கந்த ... முருகா, கடம்பா, சிவகுமாரா, கந்தா,குகவேல சிவசிவ என்று ... குகா, வேலா, சிவசிவ என்று கூறிதெளிவுறு நெஞ்சு திகழ ... அதனால் தெளிவுபெற்ற என் நெஞ்சு பொலிவு அடைவதற்காகந டஞ்செய் கழல்தாராய் ... நடனம் செய்யும் உன் திருவடிகளைத் தந்தருள்வாய்.மருதொடு கஞ்சன் உயிர்பலி கொண்டு ... மருதமரம், கம்சன் இவர்களது உயிரை மாய்த்துமகிழரி விண்டு மருகோனே ... மகிழ்ந்த ஹரி விஷ்ணுவின் மருமகனே,வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற ... உயிர்களைக் கொன்ற அசுரர்கள் ஒடுங்கவலம்வரு செம்பொன் மயில்வீரா ... வெற்றிவலம் வந்த செம்பொன் மயில்வீரனே,அருகுறு மங்கை யொடு ... அருகில் தன் பாகத்தில் அமர்ந்த பார்வதியுடன்விடை யுந்தும் அமலனுகந்த ... ரிஷபவாகனம் ஏறும் அமலபிரான் சிவன் விரும்பும்முருகோனே ... முருகப் பெருமானே,அருள்செறி பந்த ணையில் ... அருள் நிறைந்த திருப்பந்தணைநல்லூர் தலத்தில்இரு மங்கை அமளிந லங்கொள் பெருமாளே. ... வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவிமாருடனும் மலர்ப்படுக்கையில் இன்புறும் பெருமாளே.
Similar songs: 132 - கருகி அகன்று (பழநி)
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான
401 - இருவினை அஞ்ச (திருவருணை)
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான
560 - பொருள்கவர் சிந்தை (திருச்சிராப்பள்ளி)
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான
851 - இருவினையஞ்ச (திருப்பந்தணை நல்லூர்)
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான
991 - திருகு செறிந்த (விசுவை)
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான
Songs from this thalam திருப்பந்தணை நல்லூர்
991 - திருகு செறிந்த