சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
திருப்புகழ் # 213 - குமரகுருபர முருக குகனே (சுவாமிமலை)
வயிரவர் திருப்புகழ்
திருப்புகழ் # 243 - இருமலு ரோக (திருத்தணிகை)
திருப்புகழ் # 889 - முகிலைக் காரை (திருநெய்த்தானம்)
திருப்புகழ் # 1015 - விடம் என அயில் (பொதுப்பாடல்கள்)
திருப்புகழ் # 1079 - சுடரொளி கதிரவன் (பொதுப்பாடல்கள்)
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி
அருணகிரி நாதருக்கு! போற்றி போற்றி
Back to Top
213
குமரகுருபர முருக குகனே
(சுவாமிமலை)
தனதனன தனதனன தனனா தனத்ததன
தனதனன தனதனன தனனா தனத்ததன
தனதனன தனதனன தனனா தனத்ததன ...... தனதான
குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்
குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு ...... முருகாதே
குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்
தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை
கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க ...... ளனைவோரும்
தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்
முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள்
தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் ...... வலையாலே
சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்
வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில்
தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் ...... தருவாயே
சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு
தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி
தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு ...... செருமீதே
தவனமொடு மலகைநட மிடவீ ரபத்திரர்க
ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய்
தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் ...... பலகோடி
திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி
வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு
திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு ...... முருகோனே
திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி
லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர்
சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை ...... பெருமாளே.
243 இருமலு ரோக (திருத்தணிகை) |
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான |
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே. |
889 முகிலைக் காரை (திருநெய்த்தானம்) |
தனனத் தானத் தனதன தனதன தனனத் தானத் தனதன தனதன தனனத் தானத் தனதன தனதன ...... தனதான |
முகிலைக் காரைச் சருவிய குழலது சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர் ...... முகம்வேர்வ முனையிற் காதிப் பொருகணை யினையிள வடுவைப் பானற் பரிமள நறையிதழ் முகையைப் போலச் சமர்செயு மிருவிழி ...... குழைமோதத் துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ் பருகிக் காதற் றுயரற வளநிறை துணைபொற் றோளிற் குழைவுற மனமது ...... களிகூரச் சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமத நிறைபொற் பாரத் திளகிய முகிழ்முலை துவளக் கூடித் துயில்கினு முனதடி ...... மறவேனே குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதியென் முரசொடு குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள் ...... களமீதே குழறிக் கூளித் திரளெழ வயிரவர் குவியக் கூடிக் கொடுவர அலகைகள் குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு ...... குமரேசா செகசெச் சேசெச் செகவென முரசொலி திகழச் சூழத் திருநட மிடுபவர் செறிகட் காளப் பணியணி யிறையவர் ...... தருசேயே சிகரப் பாரக் கிரியுறை குறமகள் கலசத் தாமத் தனகிரி தழுவிய திருநெய்த் தானத் துறைபவ சுரபதி ...... பெருமாளே. |
1015 விடம் என அயில் (பொதுப்பாடல்கள்) |
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான |
விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி வித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலை ...... யென்றுபேசும் விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில் இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு ...... ழன்றுவாடும் நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு ...... கொண்டுபோயே நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி முத்திக் குட்படு நித்யத் தத்துவம் ...... வந்திடாதோ இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ...... நஞ்சுவாளி எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள் பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு ...... மிந்த்ரலோகா வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி ...... யஞ்சசூரன் மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே. |
1079 சுடரொளி கதிரவன் (பொதுப்பாடல்கள்) |
தனதன தனதன தத்தத் தத்தத் தாந்தாந் ...... தனதான |
சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச் சூழ்ந்தோங் ...... கிடுபாரிற் றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச் சோர்ந்தோய்ந் ...... திடநாறுங் கடுகென எடுமெனு டற்பற் றற்றுக் கான்போந் ...... துறவோருங் கனலிடை விதியிடு தத்துக் கத்தைக் காய்ந்தாண் ...... டருளாயோ தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத் தாந்தோய்ந் ...... திருபாலும் தமருக வொலிசவு தத்திற் றத்தத் தாழ்ந்தூர்ந் ...... திடநாகம் படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப் பாய்ந்தாய்ந் ...... துயர்கானம் பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப் பாங்காம் ...... பெருமாளே. |