சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

முதல் ஆயிரம்   ஆண்டாள்  
நாச்சியார் திருமொழி - சிற்றில் சிதையேல் எனல்  

Songs from 514.0 to 523.0   ( திருவில்லிபுத்தூர் )
தைத்திங்களில் காமனை வழிபடல் (504.0)     தனியன்கள் (504.1)     சிற்றில் சிதையேல் எனல் (514.0)     துகிலைப் பணித்தருள் எனல் (524.0)     கூடல் இழைத்தல் (534.0)     குயிற் பத்து (545.0)     திருமணக் கனவை உரைத்தல் (556.0)     வலம்புரிக்குக் கிடைத்த பேறு (567.0)     மேகவிடு தூது (577.0)     திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல் (587.0)     காதல்-நோய் செய்த பரிசு (597.0)     திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல் (607.0)     கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல் (617.0)     கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல் (627.0)     விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை (637.0)    
பட்டி மேய்ந்து ஓர் காரேறு
      பலதேவற்கு ஓர் கீழ்க்-கன்றாய்
இட்டீறு இட்டு விளையாடி
      இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை
      இனிது மறித்து நீர் ஊட்டி
விட்டுக் கொண்டு விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே



[637.0]
அனுங்க என்னைப் பிரிவு செய்து
      ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
      கோவர்த்தனனைக் கண்டீரே?
கணங்களோடு மின் மேகம்
      கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே



[638.0]
மாலாய்ப் பிறந்த நம்பியை
      மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
      இங்கே போதக் கண்டீரே?
மேலால் பரந்த வெயில்காப்பான்
      வினதை-சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே



[639.0]
கார்த் தண் கமலக் கண் என்னும்
      நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
      ஈசன்தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயப்
      புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே



[640.0]
Go to Top
மாதவன் என் மணியினை
      வலையிற் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத் தாரா
      ஈசன்தன்னைக் கண்டீரே?
பீதக-ஆடை உடை தாழ
      பெருங் கார்மேகக் கன்றே போல்
வீதி ஆர வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே



[641.0]
தருமம் அறியாக் குறும்பனைத்
      தன் கைச் சார்ங்கம் அதுவே போல்
புருவ வட்டம் அழகிய
      பொருத்தம் இலியைக் கண்டீரே?
உருவு கரிதாய் முகம் சேய்தாய்
      உதயப் பருப்பதத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
      விருந்தாவனத்தே கண்டோமே



[642.0]
பொருத்தம் உடைய நம்பியைப்
      புறம்போல் உள்ளும் கரியானைக்
கருத்தைப் பிழைத்து நின்ற அக்
      கரு மா முகிலைக் கண்டீரே?
அருத்தித் தாரா-கணங்களால்
      ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே



[643.0]
வெளிய சங்கு ஒன்று உடையானைப்
      பீதக-ஆடை உடையானை
அளி நன்கு உடைய திருமாலை
      ஆழியானைக் கண்டீரே?
களி வண்டு எங்கும் கலந்தாற்போல்
      கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே



[644.0]
Go to Top
நாட்டைப் படை என்று அயன் முதலாத்
      தந்த நளிர் மா மலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும்
      விமலன்தன்னைக் கண்டீரே?
காட்டை நாடித் தேனுகனும்
      களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டையாடி வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே



[645.0]
பருந்தாள்-களிற்றுக்கு அருள்செய்த
      பரமன்தன்னைப் பாரின் மேல்
விருந்தாவனத்தே கண்டமை
      விட்டுசித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே
      வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப்
      பிரியாது என்றும் இருப்பாரே



[646.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham chapter