சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

முதல் ஆயிரம்   குலசேகராழ்வார்  
பெருமாள் திருமொழி - தாலாட்டு  

Songs from 719.0 to 729.0   ( )
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல் (647.0)     தனியன்கள் (647.1)     அரங்கநாதனது அடியார்க்கு அடியேன் (658.0)     அழகிய மணவாளன்பால் பித்தன் எனல் (668.0)     திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல (677.0)     வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல் (688.0)     கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல் (698.0)     தேவகியின் புலம்பல் (708.0)     தாலாட்டு (719.0)     தசரதன் புலம்பல் (730.0)     தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம் (741.0)    
அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
      அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி
      விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை
      என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே



[741.0]
வந்து எதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி
      வரு குருதி பொழிதர வன்கணை ஒன்று ஏவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
      வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
      அணிமணி-ஆசனத்து இருந்த அம்மான் தானே



[742.0]
செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்
      சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி
வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு
      வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்
தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை
      இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே.



[743.0]
தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்
      தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு
      பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து
சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற
      இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே



[744.0]
Go to Top
வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று
      வண் தமிழ் மா முனி கொடுத்த வரி-வில் வாங்கி
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி
      கரனோடு தூடணன்தன் உயிரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய எய்தான்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
தலை வணக்கிக் கைகூப்பி ஏத்தவல்லார்
      திரிதலால் தவமுடைத்துத் தரணிதானே



[745.0]
தனம் மருவு வைதேகி பிரியல் உற்று
      தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு
      வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்
சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை
      ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே.



[746.0]
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து
      குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்
      இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
      அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே



[747.0]
அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
      அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
      உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
      பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே



[748.0]
Go to Top
செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று
      செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்
      தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத்
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
உறைவானை மறவாத உள்ளந்தன்னை
      உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே



[749.0]
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
      அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
      விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்
      இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே



[750.0]
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
      திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று
      அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்
      கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த
நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்
      நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே             



[751.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Sun, 09 Mar 2025 21:42:45 +0000
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham chapter chapter1 %E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 lang tamil prabandham %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81