நெறி காட்டி நீக்குதியோ? நின்பால் கரு மா முறி மேனி காட்டுதியோ? மேல் நாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே ஈது உரையாய் என் செய்தால் என் படோம் யாம்?
|
[2590.0] |
யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார் பூ மேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்துப் பார் இடந்த அம்மா! நின் பாதத்து அருகு
|
[2591.0] |
அருகும் சுவடும் தெரிவு உணரோம் அன்பே பெருகும் மிக இது என்? பேசீர் பருகலாம் பண்புடையீர் பார் அளந்தீர் பாவியெம் கண் காண்பு அரிய நுண்பு உடையீர்! நும்மை நுமக்கு
|
[2592.0] |
Go to Top |
நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்து என்? மாலார் தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர்திறத்தே யாதானும் சிந்தித்து இரு
|
[2593.0] |
இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு யாம் ஆர்? வணக்கம் ஆர்? ஏ பாவம் நல் நெஞ்சே நாமா மிக உடையோம் நாழ்
|
[2594.0] |
நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை வாழாவகை வலிதல் நின் வலியே? ஆழாத பாரும் நீ வானும் நீ காலும் நீ தீயும் நீ நீரும் நீ ஆய் நின்ற நீ
|
[2595.0] |
நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய் போய் ஒன்று சொல்லி என்? போ நெஞ்சே நீ என்றும் காழ்த்து உபதேசம் தரினும் கைக்கொள்ளாய் கண்ணன்தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு
|
[2596.0] |
Go to Top |
வழக்கொடு மாறுகோள் அன்று அடியார் வேண்ட இழக்கவும் காண்டும் இறைவ இழப்பு உண்டே? எம் ஆட்கொண்டு ஆகிலும் யான் வேண்ட என் கண்கள் தம்மால் காட்டு உன் மேனிச் சாய்
|
[2597.0] |
சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே பேயார் முலை கொடுத்தார் பேயர் ஆய் நீ யார்? போய்த் தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம் பாம்பார் வாய்க் கைந் நீட்டல் பார்த்து
|
[2598.0] |
பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம் பேர்த்து ஓதப் பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம் தம் மேனித் தாள் தடவ தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண்வளர்வார் சீர்
|
[2599.0] |
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமன் ஆகாக்கால் பேராளா மார்பு ஆரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே? சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து
|
[2600.0] |
Go to Top |
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய்திறவார் சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய தாள் வரை வில் ஏந்தினார் தாம்
|
[2601.0] |
தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளகப் பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இப் பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன் தொல் உருவை யார் அறிவார்? சொல்லு
|
[2602.0] |
சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லைக்கண் மாத் தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆகக் காத்தானைக் காண்டும் நீ காண்
|
[2603.0] |
காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம் நாணப்படும் அன்றே நாம் பேசில்! மாணி உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான் திரு ஆகம் தீண்டிற்றுச் சென்று
|
[2604.0] |
Go to Top |
சென்று அங்கு வெம் நரகில் சேராமல் காப்பதற்கு இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்குப் பார் உருவும் பார் வளைத்த நீர் உருவும் கண் புதையக் கார் உருவன் தான் நிமிர்த்த கால்
|
[2605.0] |
காலே பொதத் திரிந்து கத்துவராம் இனநாள் மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால் தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று இருக்கும் இடம் காணாது இளைத்து
|
[2606.0] |
இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன் இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான் தாய் தந்தை எவ் உயிர்க்கும் தான்
|
[2607.0] |
தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஒன்று இல்லாதான் தானே பிறர்கட்கும் தன் தோன்றல் தானே இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால் அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்?
|
[2608.0] |
Go to Top |
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே? சீர் ஆர் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான்
|
[2609.0] |