| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Marati
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
திருகுருகைப்பிரான்பிள்ளான்அருளிச்செய்தது
மூன்றாம் ஆயிரம்
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
Songs from 2182.0 to 2281.0 ( மாமல்லபுரம் )
Pages:
1
2
3
4
5
6
Next
அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக
இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
[2182.0]
[2182.1]
ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் வானத்து
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணி அமரர் கோமான் பரிசு
[2183.0]
பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் புரிவார்கள்
தொல் அமரர் கேள்வித் துலங்கு ஒளி சேர் தோற்றத்து
நல் அமரர் கோமான் நகர்
[2184.0]
நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லாப்
பைங் கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி
[2185.0]
Back to Top
அடி மூன்றில் இவ் உலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அறிந்து?
[2186.0]
அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன் தன்
பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே
கார் ஓத வண்ணன் கழல்
[2187.0]
கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த
போர் ஆழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியை
ஓர் ஆழி நெஞ்சே! உகந்து
[2188.0]
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்றாள் ஆவி உகந்து
முலை உண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பால் ஆனமையால் அன்று
[2189.0]
அன்று அதுகண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந் நீர்மைக்கு அன்று
வரன்முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து?
[2190.0]
Back to Top
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து
காத்தனை பல் உயிரும் காவலனே ஏத்திய
நா உடையேன் பூ உடையேன் நின் உள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை
[2191.0]
கடைநின்றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தராவர் -புடைநின்ற
நீரோதமேனி நெடுமாலே! நின்னடியை
யாரோதவல்லாரவர்?
[2192.0]
அவர் இவர் என்று இல்லை அரவு அணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார்? எண்ணில் பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து?
[2193.0]
தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படர் எடுத்த பைங் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்று பண்டு?
[2194.0]
பண்டிப் பெரும் பதியை ஆக்கி பழி பாவம்
கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே எண் திசையும்
பேர்த்த கரம் நான்கு உடையான் பேர் ஓதி பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து
[2195.0]
Back to Top
திரிந்தது வெம் சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளிகொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு?
[2196.0]
தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வனத் திடரை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று?
[2197.0]
மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை ஒற்றைப்
பிறை இருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை இரந்து தான் முடித்தான் கொண்டு?
[2198.0]
கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக்கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு
[2199.0]
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா குழக் கன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே!
பார் விளங்கச் செய்தாய் பழி
[2200.0]
Back to Top
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 20 Feb 2026 21:28:50 +0000