அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்
|
[2182.0] |
திருகுருகைப்பிரான்பிள்ளான்அருளிச்செய்தது
|
[2182.1] |
ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள் தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள் பணி அமரர் கோமான் பரிசு
|
[2183.0] |
பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம் புரிவார் புகப்பெறுவர் போலாம் புரிவார்கள் தொல் அமரர் கேள்வித் துலங்கு ஒளி சேர் தோற்றத்து நல் அமரர் கோமான் நகர்
|
[2184.0] |
நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லாப் பைங் கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி
|
[2185.0] |
Back to Top |
அடி மூன்றில் இவ் உலகம் அன்று அளந்தாய் போலும் அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை யார் ஓத வல்லார் அறிந்து?
|
[2186.0] |
அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன் தன் பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே கார் ஓத வண்ணன் கழல்
|
[2187.0] |
கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார் அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த போர் ஆழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியை ஓர் ஆழி நெஞ்சே! உகந்து
|
[2188.0] |
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை அகம் குளிர உண் என்றாள் ஆவி உகந்து முலை உண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும் அலை பண்பால் ஆனமையால் அன்று
|
[2189.0] |
அன்று அதுகண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி நின்று முலை தந்த இந் நீர்மைக்கு அன்று வரன்முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து?
|
[2190.0] |
Back to Top |
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து காத்தனை பல் உயிரும் காவலனே ஏத்திய நா உடையேன் பூ உடையேன் நின் உள்ளி நின்றமையால் கா அடியேன் பட்ட கடை
|
[2191.0] |
கடைநின்றமரர் கழல்தொழுது நாளும் இடைநின்ற இன்பத்தராவர் -புடைநின்ற நீரோதமேனி நெடுமாலே! நின்னடியை யாரோதவல்லாரவர்?
|
[2192.0] |
அவர் இவர் என்று இல்லை அரவு அணையான் பாதம் எவர் வணங்கி ஏத்தாதார்? எண்ணில் பவரும் செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் அன்றே தொழும் தகையார் நாளும் தொடர்ந்து?
|
[2193.0] |
தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி படர் எடுத்த பைங் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன் பாழி தான் எய்திற்று பண்டு?
|
[2194.0] |
பண்டிப் பெரும் பதியை ஆக்கி பழி பாவம் கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான் பேர் ஓதி பேதைகாள் தீர்த்தகரர் ஆமின் திரிந்து
|
[2195.0] |
Back to Top |
திரிந்தது வெம் சமத்துத் தேர் கடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும் கண் பள்ளிகொள்ள அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு?
|
[2196.0] |
தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும் மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வனத் திடரை ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று?
|
[2197.0] |
மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன் சுற்றும் வணங்கும் தொழிலானை ஒற்றைப் பிறை இருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக் குறை இரந்து தான் முடித்தான் கொண்டு?
|
[2198.0] |
கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும் தான் கடந்த ஏழ் உலகே தாமரைக்கண் மால் ஒரு நாள் வான் கடந்தான் செய்த வழக்கு
|
[2199.0] |
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் வழக்கு என்று நீ மதிக்க வேண்டா குழக் கன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே! பார் விளங்கச் செய்தாய் பழி
|
[2200.0] |
Back to Top |