பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர் தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
|
[2791.0] |
கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில் கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால் உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே
|
[2792.0] |
பேர் இயல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னை பேய்ப் பிறவிப் பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர் ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும் சீரிய பேறு உடையார் அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே
|
[2793.0] |
என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே
|
[2794.0] |
எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா மனக் குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா இனக் குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே
|
[2795.0] |
Back to Top |
இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால் பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால் முயல்கின்றனன் அவன் தன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே
|
[2796.0] |
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பு ஆம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா வழியைக் கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே
|
[2797.0] |
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத் திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுளத்தே இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே
|
[2798.0] |
இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர் மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே
|
[2799.0] |
மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவலுள் மா மலராள் தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே
|
[2800.0] |
Back to Top |
சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த பார் இயலும் புகழப் பாண்பெருமாள் சரண் ஆம் பதுமத் தார் இயல் சென்னி இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர் தம் கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இக் கடல் இடத்தே
|
[2801.0] |
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும் கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத் திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே
|
[2802.0] |
செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் செந்தமிழில் பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன் இராமாநுசன் சரணே கதி வேறு எனக்கே
|
[2803.0] |
கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம் கொதிக்கத் தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னைச் சோர்விலனே
|
[2804.0] |
சோராத காதல் பெருஞ் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் பாராது அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே?
|
[2805.0] |
Back to Top |
தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே
|
[2806.0] |
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும் தனி ஆனையை தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில் இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே
|
[2807.0] |
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே
|
[2808.0] |
உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் வெறி தரு பூமகள் நாதனும் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர் அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே
|
[2809.0] |
ஆரப் பொழில் தென் குருகைப்பிரான் அமுதத் திருவாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமாநுசன் என் தன் மா நிதியே
|
[2810.0] |
Back to Top |