பூ நிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய் தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய் மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய் நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே?
|
[752.0] |
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய் வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய் ஊறொடு ஓசையாய ஐந்தும் ஆய ஆய மாயனே
|
[753.0] |
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்று உளாயுமாய் ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனே ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே?
|
[754.0] |
மூன்று முப்பது ஆறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் மூன்று மூர்த்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் தோன்று சோதி மூன்றுமாய் துளக்கம் இல் விளக்கமாய் ஏன்று என் ஆவியுள்புகுந்தது என் கொலோ? எம் ஈசனே
|
[755.0] |
Back to Top |
நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள் தோறும் ஆவியாய் ஒன்றி உள்கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று என்றும் யார்க்கும் எண் இறந்த ஆதியாய் நின் உந்திவாய் அன்று நான்முகற் பயந்த ஆதிதேவன் அல்லையே?
|
[756.0] |
நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் ஏந்து வார்புனல் மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்கணே இயன்றதே
|
[757.0] |
ஒன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய் ஒன்று இரண்டு காலம் ஆகி வேலை ஞாலம் ஆயினாய் ஒன்று இரண்டு தீயும் ஆகி ஆயன் ஆய மாயனே ஒன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே?
|
[758.0] |
ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ ஆதி ஆன வான வாணர் அந்த-காலம் நீ உரைத்தி ஆதி ஆன காலம் நின்னை யாவர் காண வல்லரே
|
[759.0] |
தாது உலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன் நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர் வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார் நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே
|
[760.0] |
Back to Top |
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல் தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல் நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே
|
[761.0] |
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே?
|
[762.0] |
உலகுதன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு உலகுதன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால் உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால் உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே?
|
[763.0] |
இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும் நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே?
|
[764.0] |
தூய்மை யோகம் ஆயினாய் துழாய்-அலங்கல் மாலையாய் ஆமை ஆகி ஆழ்கடற் துயின்ற ஆதிதேவ நின் நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும் சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே?
|
[765.0] |
Back to Top |
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே தங்குகின்ற தன்மையாய் தடங்கடற் பணத்தலை செங்கண் நாகணைக் கிடந்த செல்வம் மல்கு சீரினாய் சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே?
|
[766.0] |
தலைக் கணம் துகள் குழம்பு-சாதி சோதி தோற்றமாய் நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும் கலைக் கணங்கள் சொற் பொருள் கருத்தினால் நினைக்கொணா மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்தன் மாட்சியே
|
[767.0] |
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர் போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண் இல் மூர்த்தியாய் நாக மூர்த்தி சயனமாய் நலங் கடற் கிடந்து மேல் ஆக மூர்த்தி ஆய வண்ணம் என் கொல்? ஆதிதேவனே
|
[768.0] |
விடத்த வாய் ஒர் ஆயிரம் இராயிரம் கண் வெந்தழல் விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர் தொடுத்து மேல் விதானமாய பௌவ-நீர் அராவணைப் படுத்த பாயல் பள்ளிகொள்வது என்கொல் வேலைவண்ணனே
|
[769.0] |
புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும் புள்ளின்வாய் பிளந்து புட் கொடிப் பிடித்த பின்னரும் புள்ளை ஊர்தி ஆதலால் அது என்கொல் மின் கொள் நேமியாய் புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல் காதலித்ததே?
|
[770.0] |
Back to Top |
கூசம் ஒன்றும் இன்றி மாசுணம் படுத்து வேலை-நீர் பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும் பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே
|
[771.0] |