உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
|
[2899.0] |
மனன் அகம் மலம் அற மலர்மிசை எழுதரும் மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே
|
[2900.0] |
Back to Top |
இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அந் நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே
|
[2901.0] |
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள் தாம் அவர் இவர் உவர் அது இது உது எது வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே
|
[2902.0] |
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர் அவரவர் விதிவழி அடைய நின்றனரே
|
[2903.0] |
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே
|
[2904.0] |
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசைப் படர் பொருள் முழுவதும் ஆய் அவைஅவைதொறும் உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே
|
[2905.0] |
Back to Top |
சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன் புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே
|
[2906.0] |
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள் உளன் என இலன் என இவை குணம் உடைமையில் உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே
|
[2907.0] |
பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அறக் கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும் கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே
|
[2908.0] |
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை வரன் நவில் திறல் வலி அளி பொறை ஆய்நின்ற பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே
|
[2909.0] |
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம் உயிர் வீடு உடையானிடை வீடு செய்ம்மினே
|
[2910.0] |
Back to Top |
மின்னின் நிலை இல மன் உயிர் ஆக்கைகள் என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே
|
[2911.0] |
நீர் நுமது என்று இவை வேர்முதல் மாய்த்து இறை சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே
|
[2912.0] |
இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு எல்லை இல் அந் நலம் புல்கு பற்று அற்றே
|
[2913.0] |
அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் செற்ற அது மன் உறில் அற்று இறை பற்றே
|
[2914.0] |
பற்று இலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்று இலையாய் அவன் முற்றில் அடங்கே
|
[2915.0] |
Back to Top |
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே
|
[2916.0] |
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே
|
[2917.0] |
ஒடுங்க அவன்கண் ஒடுங்கலும் எல்லாம் விடும் பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே
|
[2918.0] |