சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Marati
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது
மூன்றாம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவிருத்தம்
Songs from 2478.0 to 2577.0 ( ஆழ்வார்திருநகரி )
Pages:
1
2
3
4
5
6
Next
பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே
[2478.0]
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.
[2478.1]
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ!
முழு நீர் முகில் வண்ணன் கண்ணன் விண் நாட்டவர் மூதுவர் ஆம்
தொழுநீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே
[2479.0]
குழல் கோவலர் மடப் பாவையும் மண்மகளும் திருவும்
நிழல்போல்வனர் கண்டு நிற்கும்கொல் மீளும்கொல் தண் அம் துழாய்
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும்
தழல் போல் சினத்த அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே?
[2480.0]
Back to Top
தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாம் இலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே?
[2481.0]
பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இக் காலம் இவ் ஊர்ப்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி விசும் அம் தண்ணம் துழாய்ப்
பனிப் புயல் சோரும் தடங் கண்ணி மாமைத் திறத்துக்கொலாம்
பனிப் புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே
[2482.0]
தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு
கடாயின கொண்டு ஒல்கும் வல்லி ஈது ஏனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே
[2483.0]
ஞாலம் பனிப்பச் செறுத்து நல் நீர் இட்டு கால் சிதைந்து
நீல வல் ஏறு பொராநின்ற வானம் இது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூங்
காலம் கொலோ? அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே
[2484.0]
காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இந் நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள்படைப்பான் கற்ற திண்ணனவே
[2485.0]
Back to Top
திண் பூஞ் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம்? இவையோ
கண் பூங் கமலம் கருஞ் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி
வண் பூங் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே
[2486.0]
மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக்கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உறையீர் நுமது
வாயோ? அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ? அடும் தொண்டையோ? அறையோ இது அறிவு அரிதே
[2487.0]
அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவு என ஞாலம் எய்தற்கு
உரியன ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே
[2488.0]
பேர்கின்றது மணி மாமை பிறங்கி அள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குல் ஊழிகளே இது எல்லாம் இனவே
ஈர்கின்ற சக்கரத்து எம் பெருமான் கண்ணன் தண் அம் துழாய்
சார்கின்ற நல் நெஞ்சினார் தந்து போன தனி வளமே
[2489.0]
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர்? எனை ஊழிகள் ஈர்வனவே
[2490.0]
Back to Top
ஈர்வன வேலும் அம் சேலும் உயிர்மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தெய்வ நல் வேள் கணைப் பேர் ஒளியே
சோர்வன நீலச் சுடர் விடு மேனி அம்மான் விசும்பு ஊர்
தேர்வன தெய்வம் அன்னீர கண்ணோ இச் செழுங் கயலே?
[2491.0]
கயலோ நும கண்கள்? என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை? கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே
[2492.0]
பலபல ஊழிகள் ஆயிடும் அன்றி ஓர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறு ஆயிடும் கண்ணன் விண் அனையாய்!
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இப் பாய் இருளே
[2493.0]
இருள் விரிந்தால் அன்ன மா நீர்த் திரைகொண்டு வாழியரோ!
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு அணைமேல்
இருள் விரி நீலக் கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதிப் பெருமான் உறையும் எறி கடலே
[2494.0]
கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றிச் சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுந்த அக் காலம் கொலோ? புயல் காலம்கொலோ?
கடல் கொண்ட கண்ணீர் அருவிசெய்யாநிற்கும் காரிகையே
[2495.0]
Back to Top
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரி கை ஏறி அறையிடும் காலத்தும் வாழியரோ
சாரிகைப் புள்ளர் அம் தண்ணம் துழாய் இறை கூய் அருளார்
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்மொழிக்கே
[2496.0]
Other Prabandhams:
திருப்பல்லாண்டு
திருப்பாவை
பெரியாழ்வார் திருமொழி
நாச்சியார் திருமொழி
திருவாய் மொழி
பெருமாள் திருமொழி
திருச்சந்த விருத்தம்
திருமாலை
திருப்பள்ளி எழுச்சி
அமலன் ஆதிபிரான்
கண்ணி நுண் சிறுத்தாம்பு
பெரிய திருமொழி
திருக்குறுந் தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
முதல் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி
திருவிருத்தம்
திருவாசிரியம்
பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார்
திரு எழு கூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்
இராமானுச நூற்றந்தாதி
திருவாய்மொழி
கண்ணிநுண்சிறுத்தாம்பு
அமலனாதிபிரான்
திருச்சந்தவிருத்தம்
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:04 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
divya prabandham song lang tamil prabandham %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D