நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொள்மின் நீர் தேர்ந்து
|
[2382.0] |
சீராமப்பிள்ளை அருளிச்செய்தது
|
[2382.1] |
தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர் ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும் பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும் அருள் முடிவது ஆழியான்பால்
|
[2383.0] |
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து ஒரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில் அரு பொருளை யான் அறிந்த ஆறு?
|
[2384.0] |
ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும் கூறு உடையன் என்பதுவும் கொள்கைத்தே? வேறு ஒருவர் இல்லாமை நின்றானை எம்மானை எப் பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து
|
[2385.0] |
Back to Top |
தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம் வகிர்த்த வளை உகிர் தோள் மாலே உகத்தில் ஒருநான்று நீ உயர்த்தி உள்வாங்கி நீயே அரு நான்கும் ஆனாய் அறி
|
[2386.0] |
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே ஆதலால் இன்று
|
[2387.0] |
இன்று ஆக நாளையே ஆக இனிச் சிறிது நின்று ஆக நின் அருள் என்பாலதே நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இலை
|
[2388.0] |
இலை துணை மற்று என் நெஞ்சே! ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேரா குலை கொண்ட ஈர் ஐந்தலையான் இலங்கையை ஈடு அழித்த கூர் அம்பன் அல்லால் குறை
|
[2389.0] |
குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு
|
[2390.0] |
Back to Top |
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங் கார் அரவு அணையான் பொன் மேனி யாம் காண வல்லமே அல்லமே? மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து
|
[2391.0] |
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் சூழ்த்த துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து
|
[2392.0] |
மதித்தாய் போய் நான்கில் மதியார் போய் வீழ மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய் மடுக் கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு
|
[2393.0] |
வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்திக் கூடு ஆக்கி நின்று உண்டு கொன்று உழல்வீர் வீடு ஆக்கும் மெய்ப்பொருள் தான் வேத முதற்பொருள் தான் விண்ணவர்க்கு நற்பொருள் தான் நாராயணன
|
[2394.0] |
நாராயணன் என்னை ஆளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் தன் பேரான பேசப் பெறாத பிணச் சமயர் பேசக் கேட்டு ஆசைப்பட்டு ஆழ்வார் பலர
|
[2395.0] |
Back to Top |
பல தேவர் ஏத்த படி கடந்தான் பாதம் மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில் மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீர்க்கண்டன் கண்ட நிலை
|
[2396.0] |
நிலைமன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர் தலைமன்னர் தாமே மாற்றாக பல மன்னர் போர் மாள வெம் கதிரோன்மாய பொழில் மறைய தேர் ஆழியால் மறைத்தாரால்
|
[2397.0] |
ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு
|
[2398.0] |
மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு கூறாகக் கீறிய கோளரியை வேறாக ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தியிருப்பார் தவம்
|
[2399.0] |
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியாய் அன்றே? உவந்து எம்மைக் காப்பாய் நீ காப்பதனை ஆவாய் நீ வைகுந்தம் ஈப்பாயும் எவ் உயிர்க்கும் ந
|
[2400.0] |
Back to Top |