| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Marati
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
முதலியாண்டான்அருளிச்செய்தது
மூன்றாம் ஆயிரம்
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
Songs from 2082.0 to 2181.0 ( காஞ்சிபுரம் )
Pages:
1
2
3
4
5
6
Next
வையம் தகளியா வார் கடலே நெய் ஆக
வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய
சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை-
இடர்-ஆழி நீங்குகவே என்று
[2082.0]
கைதைசேர்பூம்பொழில்சூழ்கச்சிநகர்வந்துதித்த
பொய்கைப்பிரான்கவிஞர்போரேறு - வையத்து
அடியவர்வாழஅருந்தமிழந்தாதி
படிவிளங்கச்செய்தான்பரிந்து.
[2082.1]
என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?-
ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது-
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது-நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்
[2083.0]
பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின்
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்-
நீ அளவு கண்ட நெறி
[2084.0]
நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்-
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலம் அமர் கண்டத்து அரன்
[2085.0]
Back to Top
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று
[2086.0]
ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள்? அன்று
கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்-
திருவரங்கம் மேயான் திசை
[2087.0]
திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து
இசையும் கருமங்கள் எல்லாம்-அசைவு இல் சீர்க்
கண்ணன் நெடு மால் கடல் கடைந்த கார் ஓத
வண்ணன் படைத்த மயக்கு
[2088.0]
மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே!-
போர் ஆழிக் கையால் பொருது?
[2089.0]
பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன
்ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே-விரி தோட்ட
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க
மா வடிவின் நீ அளந்த மண்
[2090.0]
Back to Top
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ்
உலகு அளவும் உண்டோ உன் வாய்?
[2091.0]
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்-
காணா கண் கேளா செவி
[2092.0]
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே-
ஏனமாய் நின்றாற்கு இயல்வு
[2093.0]
இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர்
[2094.0]
அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம் பெருமான் என்று சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த
மூர்த்தி உருவே முதல்
[2095.0]
Back to Top
முதல் ஆவார் மூவரே அம் மூவருள்ளும்
முதல் ஆவான் மூரி நீர் வண்ணன் முதல் ஆய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது
[2096.0]
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி
அழுதேன் அரவு-அணைமேல் கண்டு தொழுதேன்-
கடல் ஓதம் கால் அலைப்பக் கண்வளரும் செங்கண்
அடல் ஓத வண்ணர் அடி
[2097.0]
அடியும் படி கடப்ப தோள் திசைமேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால்
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறைப் புள்
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று
[2098.0]
நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய்
தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்-
மருது இடை போய் மண் அளந்த மால்
[2099.0]
மாலும் கருங் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு
ஆலின் இலைத் துயின்ற ஆழியான் கோலக்
கரு மேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப்பெற்று?
[2100.0]
Back to Top
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 20 Feb 2026 21:28:50 +0000