திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன்பால் இன்று
|
[2282.0] |
குருகைகாவலப்பன்அருளிச்செய்தது சீராரும்மாடத்திருக்கோவலூரதனுள் காரார்கருமுகிலைக்காணப்புக்கு - ஓராத் திருக்கண்டேனென்றுரைத்த சீரான்கழலே உரைக்கண்டாய்நெஞ்சே! உகந்து.
|
[2282.1] |
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய் அன்று திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை மருக்கண்டுகொண்டு என் மனம்
|
[2283.0] |
மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள் தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்துச் செருநர் உகச் செற்று உகந்த தேங்கு ஓத வண்ணன் வரு நரகம் தீர்க்கும் மருந்து
|
[2284.0] |
மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங் கண் மால் ஆங்கே பொருந்தியும் நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி
|
[2285.0] |
Back to Top |
அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம் ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே ஆர் ஆழி கொண்டாற்கு அழகு
|
[2286.0] |
அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்? அழகு அன்றே அண்டம் கடத்தல்? அழகு அன்றே அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ கங்கை நீர் கான்ற கழல்?
|
[2287.0] |
கழல் தொழுதும் வா நெஞ்சே! கார்க் கடல் நீர் வேலைப் பொழில் அளந்த புள் ஊர்திச் செல்வன் எழில் அளந்து அங்கு எண்ணற்கு அரியானை எப் பொருட்கும் சேயானை நண்ணற்கு அரியானை நாம்
|
[2288.0] |
நாமம் பல சொல்லி நாராயணா என்று நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே வா மருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நம் கண்
|
[2289.0] |
கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும் மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் கரு மா முகில் வண்ணன் கார்க் கடல் நீர் வண்ணன் திரு மா மணி வண்ணன் தேசு
|
[2290.0] |
Back to Top |
தேசும் திறலும் திருவும் உருவமும் மாசு இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில் வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத நலம் புரிந்து சென்று அடையும் நன்கு
|
[2291.0] |
நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும் பொங்கு ஓதருவிப் புனல் வண்ணன் சங்கு ஓதப் பாற்கடலான் பாம்பு அணையின் மேலான் பயின்று உரைப்பார் நூல் கடலான் நுண் அறிவினான்
|
[2292.0] |
அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும் நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாள்தோறும் பைங்கோத வண்ணன் படி
|
[2293.0] |
படி வட்டத் தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம் ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே மா காயமாய் நின்ற மாற்கு
|
[2294.0] |
மால்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு நூல்பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பணிந்து
|
[2295.0] |
Back to Top |
பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள் மோத பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன் மனம் தன் அணைக் கிடக்கும் வந்து
|
[2296.0] |
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம் அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திருவல்லிக்கேணியான் சென்று
|
[2297.0] |
சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந் நாளும் நாள் ஆகும் என்றும் இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய்
|
[2298.0] |
வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடி மண் நீ அளந்து கொண்ட நெடுமாலே தாவிய நின் எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள்
|
[2299.0] |
அருளாது ஒழியுமே ஆல் இலைமேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது முந்தையராய் நிற்பார்க்கு முன்?
|
[2300.0] |
Back to Top |