சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  

மலர் அர்ச்சனை பாடல்

1. ரோஜாப் பூ கொண்டு வந்தே –எங்கள் ராஜேஸ்வரியை பூஜை செய்தால்,
தேசாதி தேசம் மெச்சும் ஒரு ராஜாவைப் போல வாழச் செய்வாள்.

2. முல்லைப் பூ கொண்டு வந்தே –எங்கள் கோமளங்கியை பூஜை செய்தால்,
இல்லை என்று சொல்லாமலே அவள் அள்ளி அள்ளி தந்திடுவாள்.

3. மருக்கொழுந்து கொண்டு வந்தே –எங்கள் மாஹேஸ்வரியை பூஜை செய்தால்,
திருக்கோலம் கொண்டு அங்கே தினம் தோறும் அவள் வந்திடுவாள்.

4. ஜாதிப் பூ கொண்டு வந்தே –எங்கள் ஜோதி அவளை பூஜை செய்தால்,
ஓதி உணராத வித்தை எல்லம் தந்து மேதை என்றாக்கி விடுவாள்.

5. மகிழம் பூ கொண்டு வந்தே –எங்கள் மாதங்கியை பூஜை செய்தால்,
மனமாகத கன்னியர்க்கு திருமணம் அவளே நடத்தி வைப்பாள்.

6. தாழம் பூ கொண்டு வந்தே –எங்கள் தாக்ஷயனியை பூஜை செய்தால்,
வாழாத பெண்ணை அவள் நாதனுடன் சேர்த்து வாழ வைப்பாள்.

7. பத்ரம் பல கொண்டு வந்தே –எங்கள் பஹவதியை பூஜை செய்தால்,
புத்ர பாக்யம் இல்லாதவர்க்கு குழந்தை பேறு தந்திடுவாள்.

8. தாமரை பூ கொண்டு வந்தே –எங்கள் ஷ்யாமலியை பூஜை செய்தால்,
தாமதம் செய்யமாலே அவள் தாலி பிச்சை தந்திடுவாள்.

9. மல்லிகைப் பூ கொண்டு வந்தே –எங்கள் மாஹேஸ்வரியை பூஜை செய்தால்,
பில்லி சூன்யம் ஏவல் , யெல்லம் அவள் பின்னாலே ஓடச் செய்வாள்.

10. செண்பகப் பூ கொண்டு வந்தே –எங்கள் அம்பிகையை பூஜை செய்தால்,
ஜன்மாந்திர பாவமெல்லாம் அவள் தீர்த்து விலக்கி ஓட்டிடுவாள்.

11. பாரிஜாதம் கொண்டு வந்தே –எங்கள் பார்வதியை பூஜை செய்தால்,
பால ரூபம் கொண்டு அவள் நம் பாவமெல்லாம் போக்கிடுவாள்

12. அரளிப் பூ கொண்டு வந்தே –எங்கள் அபிராமியை பூஜை செய்தால்,
அளவில்லாத செல்வத்தையே அவள் அக மகிழ தந்திடுவாள்

13. செம்பருத்தி கொண்டு வந்தே –எங்கள் சண்டிகையை பூஜை செய்தால்,
மாயமாய் கனவில் வந்து மந்திரங்கள் பல சொல்லிடுவாள்.

14. மகிளம் பூ கொண்டு வந்தே –எங்கள் மாதவை பூஜை செய்தால்,
மங்கள வாழ்வு தந்து அவள் மன மகிழச் செய்திடுவாள்.

15. மருதானிப்பூ வந்தே – எங்கள் மங்கலையை பூஜை செய்தால்,
அருள் கூர்ந்து நம்முன்னெ அவள் அனுக்ரஹம் செய்திடுவாள்.

16. நீலாம்பரம் கொண்டு வந்தே –எங்கள் நீலயாதக்ஷியை பூஜை செய்தால்,
நித்யாநந்தம் கொண்டுமே அவள் நித்ய வாஸம் செய்திடுவாள்.

17. மனோரஞ்ஜிதம் கொண்டு வந்தே -எங்கள் மனோன்மணியை பூஜை செய்தால்,
ஞனமான ஸுகந்தமுடன் அவள் கலிப்பு மிக தந்திடுவாள்.

18. சம்பங்கி பூ கொண்டு வந்தே –எங்கள் சங்கரியை பூஜை செய்தால்,
சகல ஸொபாக்யமும் தந்து , அவள் சஞ்ஜலத்தை நீக்கிடுவாள்.

19. தும்பைப் பூ கொண்டு வந்தே , எங்கள் துர்க்கையை பூஜை செய்தால்,
தரித்திரத்தை துரத்தி , அவள் தன தான்யம் பொழிந்திடுவாள்.

20. சாமந்தி பூ கொண்டு வந்தே –எங்கள் சர்வேஸ்வரியை பூஜை செய்தால்,
சத்யமாய் வாழ்வினிலே, அவள் சந்தோஷத்தை அளித்திடுவாள்

21. மந்தாரம்பூ கொண்டு வந்தே –எங்கள் லலிதாம்பிகையை பூஜை செய்தால்,
பந்த பாசம் யாவும் நீங்கி அவள் சிந்தை மகிழசெய்திடுவாள்.

22. வெட்டிவேர் கொண்டு வந்தே –எங்கள் இஷ்ட தெய்வத்தை பூஜை செய்தால்,
மட்டில்லாத மகிழ்ச்சியுடன் அவள் மாநிதி தந்திட வந்திடுவாள்.

23. கதிர் பச்சை கொண்டு வந்தே –எங்கள் காமக்ஷியை பூஜை செய்தால்,
கடைக் கண்ணால் கடாக்ஷித்து ஜன்ம சாபல்யம் நீக்கிடுவாள்.

24. கருமாரி சாம்பல் பெற்றால் கண்ட பிணியும் ஓடி விடும் ,
இடைஞ்சல்கள் மாறி இன்பம் இல்லத்தை நாடி வரும்.

Back to Top
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

malar paadal