![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
பட்டினத்துப் பிள்ளையார் திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 11 -th Thirumurai 11.028 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை பண் - (திருவிடைமருதூர் ) |
அன்றினர் புரங்கள் அழலிடை அவியக் குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றத்து நுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ கயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள் பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில் பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக சிமையச் செங்கோட் டிமையச் செல்வன் மணியெனப் பெற்ற அணியியல் அன்னம் வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை குயிலெனப் பேசும் மயிலிளம் பேடை கதிரொளி நீலங் கமலத்து மலர்ந்தன்ன மதரரி நெடுங்கண் மானின் கன்று வருமுலை தாங்குந் திருமார்பு வல்லி வையம் ஏழும் பன்முறை ஈன்ற ஐய திருவயிற் றம்மைப் பிராட்டி மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி எமையா ளுடைய உமையாள் நங்கை கடவுட் கற்பின் மடவரல் கொழுந பவள மால்வரைப் பனைக்கைபோந் தனைய தழைசெவி எண்தோள் தலைவன் தந்தை பூவலர் குடுமிச் சேவலம் பதாகை மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல் அமரர்த் தாங்குங் குமரன் தாதை பொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும் மருதிடங் கொண்ட மருத வாண நின்னது குற்றம் உளதோ நின்னினைந் தெண்ணருங் கோடி இடர்ப்பகை கடந்து கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு தேவர் ஆவின் கன்றெனத் திரியாப் பாவிகள் தமதே பாவம் யாதெனின் முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த அறுசுவை யடிசில் அட்டினி திருப்பப் புசியா தொருவன் பசியால் வருந்துதல் அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத் தாற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை தெண்ணீர்க் குற்றம் அன்றுகண் ணகன்று தேன்துளி சிதறிப் பூந்துணர் துறுமி வாலுகங் கிடந்த சோலை கிடப்ப வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப அடிபெயர்த் திடுவான் ஒருவன் நெடிது வருந்துதல் நிழல்தீங் கன்றே. | [ 16] |
மேலே செல் |
1.032
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓடே கலன்; உண்பதும் ஊர் பண் - தக்கராகம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
1.095
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு ஓர் காதினன்; பாடு பண் - குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
1.110
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை, பண் - வியாழக்குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
1.121
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நடை மரு திரிபுரம் எரியுண பண் - வியாழக்குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
1.122
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும் பண் - வியாழக்குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
2.056
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! பண் - காந்தாரம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
4.035
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
காடு உடைச் சுடலை நீற்றார்; பண் - திருநேரிசை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
5.014
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள் பண் - திருக்குறுந்தொகை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
5.015
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் பண் - திருக்குறுந்தொகை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
6.016
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப்படை உடையார் தாமே போலும்; பண் - திருத்தாண்டகம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
6.017
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் பண் - திருத்தாண்டகம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
7.060
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கழுதை குங்குமம் தான் சுமந்து பண் - தக்கேசி (திருவிடைமருதூர் மருதீசுவரர் நலமுலைநாயகியம்மை) |
9.017
9 -th Thirumurai
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர் பண் - (திருவிடைமருதூர் ) |
11.028
11 -th Thirumurai
பட்டினத்துப் பிள்ளையார்
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை பண் - (திருவிடைமருதூர் ) |