![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
பட்டினத்துப் பிள்ளையார் திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 11 -th Thirumurai 11.028 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை பண் - (திருவிடைமருதூர் ) |
கொண்டலின் இருண்ட கண்டத் தெண்தோள் செவ்வான் உருவிற் பையர வார்த்துச் சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடை மூவா முதல்வ முக்கட் செல்வ தேவ தேவ திருவிடை மருத மாசறு சிறப்பின் வானவர் ஆடும் பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி அயிரா வணத்துறை ஆடும் அப்ப கயிலாய வாண கௌரி நாயக நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர் இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும் மழைக்கவுட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும் அமரர்த் தாங்கும் குமர வேளும் சுரிசங் கேந்திய திருநெடு மாலும் வான்முறை படைத்த நான்முகத் தொருவனும் தாருகற் செற்ற வீரக் கன்னியும் நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும் பீடுயர் தோற்றத்துக் கோடிஉருத் திரரும் ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும் செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும் வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும் சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும் நிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும் வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும் எட்டு நாகமும் அட்ட வசுக்களும் மூன்று கோடி ஆன்ற முனிவரும் வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும் தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும் வித்தகப் பாடல் முத்திறத் தடியரும் திருந்திய அன்பின் பெருந்துறைப் பிள்ளையும் அத்தகு செல்வம் அவமதித் தருளிய சித்த மார்சிவ வாக்கிய தேவரும் (1) வெள்ளை நீறு மெய்யிற் கண்டு கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் (2) ஓடும் பல்நரி ஊளைகேட் டரனைப் பாடின என்று படாம்பல அளித்தும் (3) குவளைப் புனலில் தவளை அரற்ற ஈசன் தன்னை ஏத்தின என்று காசும் பொன்னுங் கலந்து தூவியும் (4) வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு பிடித்தலும் அவன்இப் பிறப்புக் கென்ன இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும் (5) மருத வட்டத் தொருதனிக் கிடந்த தலையைக் கண்டு தலையுற வணங்கி உம்மைப் போல எம்இத் தலையும் கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும் (6)கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப வாய்த்த தென்றுநாய்க் கட்டம் எடுத்தும் (7) காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும் (8)விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுண தேவரும் இனைய தன்மையர் எண்ணிறந் தோரே அனையவர் நிற்க யானும் ஒருவன் பத்தி என்பதோர் பாடும் இன்றிச் சுத்த னாயினும் தோன்றாக் கடையேன் நின்னை இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும் வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும் கருதி யிருப்பன் கண்டாய் பெரும நின்னுல கனைத்தினும் நன்மை தீமை ஆனவை நின்செய லாதலின் நானே அமையும் நலமில் வழிக்கே. | [ 28] |
மேலே செல் |
1.032
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓடே கலன்; உண்பதும் ஊர் பண் - தக்கராகம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
1.095
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு ஓர் காதினன்; பாடு பண் - குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
1.110
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை, பண் - வியாழக்குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
1.121
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நடை மரு திரிபுரம் எரியுண பண் - வியாழக்குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
1.122
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும் பண் - வியாழக்குறிஞ்சி (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
2.056
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! பண் - காந்தாரம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
4.035
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
காடு உடைச் சுடலை நீற்றார்; பண் - திருநேரிசை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
5.014
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள் பண் - திருக்குறுந்தொகை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
5.015
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் பண் - திருக்குறுந்தொகை (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
6.016
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப்படை உடையார் தாமே போலும்; பண் - திருத்தாண்டகம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
6.017
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் பண் - திருத்தாண்டகம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை) |
7.060
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கழுதை குங்குமம் தான் சுமந்து பண் - தக்கேசி (திருவிடைமருதூர் மருதீசுவரர் நலமுலைநாயகியம்மை) |
9.017
9 -th Thirumurai
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர் பண் - (திருவிடைமருதூர் ) |
11.028
11 -th Thirumurai
பட்டினத்துப் பிள்ளையார்
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை பண் - (திருவிடைமருதூர் ) |