சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை thalam திருஅன்னியூர் (பொன்னூர்)
1.096   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மன்னி ஊர் இறை; சென்னியார்,
பண் - குறிஞ்சி   (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=u-A7eRn23xU
5.008   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாறு அலைத்த படுவெண் தலையினன்;
பண் - திருக்குறுந்தொகை   (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ULaSDmC766E

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.096   மன்னி ஊர் இறை; சென்னியார்,  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருஅன்னியூர் (பொன்னூர்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி )
மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை
அன்னியூர் அமர் மன்னுசோதியே.

[1]
பழகும் தொண்டர், வம்! அழகன், அன்னியூர்க்
குழகன், சேவடி தொழுது வாழ்மினே!

[2]
நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச்
சோதி, நாமமே ஓதி உய்ம்மினே!

[3]
பத்தர் ஆயினீர்! அத்தர், அன்னியூர்ச்
சித்தர், தாள் தொழ முத்தர் ஆவரே.

[4]
நிறைவு வேண்டுவீர்! அறவன், அன்னியூர்
மறை உளான், கழற்கு உறவு செய்ம்மினே!

[5]
இன்பம் வேண்டுவீர்! அன்பன், அன்னியூர்
நன்பொன் என்னுமின், உம்பர் ஆகவே!

[6]
அந்தணாளர்தம் தந்தை! அன்னியூர்
எந்தையே! என, பந்தம் நீங்குமே.

[7]
தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்தமா அடைந்து, ஏத்தி வாழ்மினே!

[8]
இருவர் நாடிய அரவன் அன்னியூர்
பரவுவார், விண்ணுக்கு ஒருவர் ஆவரே.

[9]
குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்த்
தொண்டு உளார் வினை விண்டு போகுமே.

[10]
பூந்தராய்ப் பந்தன் ஆய்ந்த பாடலால்,
வேந்தன் அன்னியூர் சேர்ந்து, வாழ்மினே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.008   பாறு அலைத்த படுவெண் தலையினன்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருஅன்னியூர் (பொன்னூர்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி )
அன்னியூர் என்று தேவாரப் பதிகங்களில் அழைக்கப்பட்ட இந்த தலம், இந்நாளில் அன்னூர் என்றும் பொன்னூர் என்றும் அழைக்கப்படுகின்றது. மயிலாடுதுறை மணல்மேடு பாதையில், மயிலாடுதுறைக்கு வடகிழக்கே எட்டு கி.மீ. தூரத்தில் உள்ள தலம். அப்பர் பிரான் அன்னியூர் சென்றதாக பெரிய புராண குறிப்பு ஏதும் இல்லை. அப்பர் பிரான் கயிலாயம் தவிர்த்த மற்ற அனைத்து தலங்களின் மீது அருளிய பதிகங்களை, அந்தந்த தலங்களுக்கு சென்று பாடினார் என்பதாலும், இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடல் கிடைத்திருப்பதால், அவர் அருகில் உள்ள பந்தணைநல்லூர் முதலிய தலங்களுக்கு சென்ற போது இங்கும் சென்றிருக்க வேண்டும்
பாறு அலைத்த படுவெண் தலையினன்;
நீறு அலைத்த செம்மேனியன் நேரிழை
கூறு அலைத்த மெய், கோள் அரவு ஆட்டிய,
ஆறு அலைத்த சடை, அன்னியூரனே.

[1]
பண்டு ஒத்த(ம்) மொழியாளை ஓர்பாகம் ஆய்,
இண்டைச் செஞ்சடையன்(ன்); இருள் சேர்ந்தது ஓர்
கண்டத்தன்; கரியின்(ன்) உரி போர்த்தவன்;
அண்டத்து அப் புறத்தான் அன்னியூரனே.

[2]
பரவி நாளும் பணிந்தவர்தம் வினை
துரவை ஆகத் துடைப்பவர்தம் இடம்,
குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர்போல், அன்னியூரரே.

[3]
வேதகீதர்; விண்ணோர்க்கும் உயர்ந்தவர்;
சோதி வெண்பிறை துன்று சடைக்கு அணி
நாதர்; நீதியினால் அடியார் தமக்கு
ஆதி ஆகி நின்றார்-அன்னியூரரே.

[4]
எம்பிரான்; இமையோர்கள் தமக்கு எலாம்
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார்;
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கு
அன்பர் ஆகி நின்றார்-அன்னியூரரே.

[5]
வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர்;
கந்தமாமலர் சூடும் கருத்தினர்;
சிந்தை ஆர் சிவனார்; செய்யதீவண்ணர்;
அந்தணாளர் கண்டீர்-அன்னியூரரே.

[6]
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்-
வானை; வானவர்தாங்கள் வணங்கவே,
தேனை ஆர் குழலாளை ஓர்பாகமா,
ஆனைஈர் உரியார்-அன்னியூரரே.

[7]
காலை போய்ப் பலி தேர்வர்; கண்ணார், நெற்றி;
மேலைவானவர் வந்து விரும்பிய,
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே,
ஆலின்கீழ் அறத்தார்-அன்னியூரரே.

[8]
எரி கொள் மேனியர்; என்பு அணிந்து இன்பராய்த்
திரியும் மூ எயில் தீ எழச் செற்றவர்;
கரிய மாலொடு, நான்முகன், காண்பதற்கு
அரியர் ஆகி நின்றார்-அன்னியூரரே.

[9]
வஞ்ச(அ)அரக்கன் கரமும்-சிரத்தொடும்-
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும்(ம்) இற,
பஞ்சின் மெல்விரலால் அடர்த்து, ஆயிழை,
அஞ்சல் அஞ்சல்! என்றார்-அன்னியூரரே.

[10]
Back to Top

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org