![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
7.013
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மலை ஆர் அருவித்திரள் மா பண் - தக்கராகம் (திருத்துறையூர் (திருத்தளூர்) துறையூரப்பர் பூங்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DmK48qjw5j8 Audio: https://www.youtube.com/watch?v=ctvmgjRypXk |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.013  
மலை ஆர் அருவித்திரள் மா
பண் - தக்கராகம் (திருத்தலம் திருத்துறையூர் (திருத்தளூர்) ; (திருத்தலம் அருள்தரு பூங்கோதையம்மை உடனுறை அருள்மிகு துறையூரப்பர் திருவடிகள் போற்றி )
நம்பியாரூரர் தம்மை வலிய ஆட்கொண்டருளிய அருட்டுறை இறைவரை இறைஞ்சித் தம்முடைய ஊராகிய திரு நாவலூரை அடைந்தார். அங்குக் கோயில் கொண்டருளிய பெரு மானைப் பணிந்து செந்தமிழ்ப் பாமாலை பாடிப் போற்றினார். பின்னர் அருகில் உள்ள திருத் துறையூரை அடைந்து பெருமான் திருமுன் நின்று மலை ஆர் அருவித்திரள் என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி தவநெறி தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்து திருப்பதிகம் பாடினார். பெருமான் சுந்தரர் வேண்டியவாறே தவநெறி தந்தருளினார்.
மலை ஆர் அருவித்திரள் மா மணி உந்தி, குலை ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும், துறையூர்த் தலைவா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே. | [1] |
மத்தம் மதயானையின் வெண் மருப்பு உந்தி, முத்தம் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், பத்தர் பயின்று ஏத்திப் பரவும், துறையூர் அத்தா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே . | [2] |
கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்திச் செந்தண் புனல் வந்து இழி பெண்ணை வடபால், மந்தி பல மா நடம் ஆடும், துறையூர் எந்தாய்! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே . | [3] |
அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி, சுரும்பு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், கரும்பு ஆர் மொழிக் கன்னியர் ஆடும், துறையூர் விரும்பா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே . | [4] |
பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி, நாடு ஆர வந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், மாடு ஆர்ந்தன மாளிகை சூழும், துறையூர் வேடா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே . | [5] |
மட்டு ஆர் மலர்க் கொன்றையும் வன்னியும் சாடி, மொட்டு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா, துறையூர்ச் சிட்டா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே . | [6] |
மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி, தாது ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும், துறையூர் நாதா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே . | [7] |
கொய்யா மலர்க் கோங்கொடு வேங்கையும் சாடி, செய் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், மை ஆர் தடங்கண்ணியர் ஆடும், துறையூர் ஐயா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே . | [8] |
விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய, மண் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், பண் ஆர் மொழிப் பாவையர் ஆடும், துறையூர் அண்ணா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே . | [9] |
மா வாய் பிளந்தானும், மலர் மிசையானும், ஆவா! அவர் தேடித் திரிந்து அலமந்தார்; பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த் தேவா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே. | [10] |
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன், கையால்-தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் பொய்யாத் தமிழ் ஊரன், உரைத்தன வல்லார், மெய்யே பெறுவார்கள், தவநெறிதானே . | [11] |