சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.033   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவுசாத்தானம் (கோவிலூர்) - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=nUrPk4HHz-Y   Add audio link Add Audio
நீர்இடைத் துயின்றவன், தம்பி,நீள் சாம்புவான்,
போர்உடைச் சுக்கிரீவன்,அனு மான்தொழ;
கார்உடை நஞ்சுஉண்டு, காத்து;அருள் செய்தஎம்
சீர்உடைச் சேடர்வாழ் திருஉசாத் தானமே.


1


கொல்லைஏறு உடையவன், கோவண ஆடையன்,
பல்லைஆர் படுதலைப் பலிகொளும் பரமனார்
முல்லைஆர் புறவுஅணி முதுபதி நறைகமழ்
தில்லையான் உறைவுஇடம் திருஉசாத் தானமே.


2


தாம்அலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார் தம்கனா ஆக்கினான், ஒருநொடி;
காமனார் உடல்கெடக் காய்ந்தஎம் கண்ணுதல்;
சேமமா உறைவுஇடம் திருஉசாத் தானமே.


3


மறிதரு கரத்தினான், மால்விடை ஏறியான்,
குறிதரு கோலநல் குணத்தினார் அடிதொழ,
நெறிதரு வேதியர் நித்தலும் நியமம்செய்
செறிதரு பொழில்அணி திருஉசாத் தானமே.


4


பண்டு,இரைத்து அயனும்மா லும்,பல பத்தர்கள்
தொண்டுஇரைத் தும்,மலர் தூவித்தோத் திரம்சொல,
கொண்டுஇரைக் கொடியொடும் குருகினின் நல்இனம்
தெண்திரைக் கழனிசூழ் திருஉசாத் தானமே.


7


மடவரல் பங்கினன்; மலைதனை மதியாது
சடசட எடுத்தவன் தலைபத்தும் நெரிதர,
அடர்தர ஊன்றி,அங் கேஅவற்கு அருள்செய்தான்;
திடம்என உறைவுஇடம் திருஉசாத் தானமே.


8


ஆண்அலார், பெண்அலார், அயனொடு மாலுக்கும்
காணஒணா வண்ணத்தான், கருதுவார் மனத்துஉளான்,
பேணுவார் பிணியொடும் பிறப்புஅறுப் பான்இடம்
சேண்உலாம் மாளிகைத் திருஉசாத் தானமே.


9


கானம்ஆர் வாழ்க்கையான், கார்அமண் தேரர்சொல்
ஊனமாக் கொண்டு,நீர் உரைமின்உய் யஎனில்
வானம்ஆர் மதில்,அணி மாளிகை, வளர்பொழில்,
தேனமா மதியம்தோய் திருஉசாத் தானமே!


10


Go to top
வரைதிரிந்து இழியும்நீர் வளவயல் புகலிமன்,
திரைதிரிந்து எறிகடல்- திருஉசாத் தானரை
உரைதெரிந்து உணரும்சம் பந்தன்,ஒண் தமிழ்வல்லார்
நரைதிரை இன்றியே நன்நெறி சேர்வரே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவுசாத்தானம் (கோவிலூர்)
3.033   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீர் இடைத் துயின்றவன், தம்பி,
Tune - கொல்லி   (திருவுசாத்தானம் (கோவிலூர்) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song author %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D paadal name %E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%2C pathigam no 3.033