நனவாதி மூன்றினில் சீவ துரியம் தனதாதி மூன்றில் பரதுரி யந்தான் நனவாதி மூன்றில் சிவதுரி யம்மாம் இனவாகும் தொம்தத் அசிபதத் தீடே.
|
1
|
தானாம் நனவில் துரியம் தன் தொம்பதம் தானாம் துரிய நனவாதி தான்மூன்றில் ஆனாப் பரபதம் அற்ற(து) அருநனா வானான மூன்று துரியத் தணுகுமே.
|
2
|
அணுவின் துரியத்து நான்கும்அ தாகிப் பணியும் பரதுரி யம்பயில் நான்கும் தணிவில் பரமாகிச் சார் முத் துரியக் கணுவிரு நான்கும் கலந்தஈ ரைந்தே.
|
3
|
ஈரைந் தவத்தை யிசைமுத் துரியத்துள் நேரந்த மாக நெறிவழி யேசென்று பாரந்த மான பராபரத் தைக்கியத்(து) ஓரந்த மாயீ ருபாதியைச் சேத்ந்திடே.
|
4
|
தொட்டே யிருமின் துரிய நிலத்தினை எட்டா தெனினும் நின் றெட்டும் இறைவனைப் பட்டாங் கறிந்திடில் பல்நா உதடுகள் தட்டா தொழிவதோர் தத்துவந் தானே.
|
5
|
Go to top |
அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று செறிவாய மாயை சிதைத்(து) அரு ளாலே பிறயாத பேரரு ளாயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலையறிந் தாரே.
|
6
|
நனவில் நனவாதி நாலாம் துரியம் தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல வினையறு சீவன் நனவாதி யாகத் தனைய பரதுரி யம்தற் பதமே.
|
7
|
தொம்பதம் தற்பதம் சொல்முத் துரியம்போல் நம்பிய மூன்றாம் துரியத்து நற்பரம் அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலைச் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 23,
|
8
|