நாசி நுனியினின் நான்மூ விரலிடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி யிருக்கும் பெருமறை அம்மறை கூசி யிருக்கும் குணம் அது வாமே.
|
1
|
கருமங்கள் ஒன்று கருதும் கருமத்(து) உரிமையும் கன்மமும் உன்னும் பிறவிக் கருவினை யாவதும் கண்டகன்(று) அன்பிற் புரிவன கன்மக் கயத்துட் புகுத்துமே.
|
2
|
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள் மாயை மறைய மறையவல் லார்கட்குக் காயமும் இல்லைக் கருத்தில்லை தானே.
|
3
|
மோழை அடைத்து முழைதிறந் துள்புக்குக் கோழை அடைக்கின்ற(து) அண்ணற் குறிப்பினில் ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து தாழ அடைப்பது தன்வலி யாமே.
|
4
|
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார் ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின் ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே.
|
5
|
Go to top |
ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்(கு) ஆசூசம் இல்லை அரனைஅற் சிப்பவர்க்(கு) ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்(கு) ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.
|
6
|
வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச் சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழிபட் டவர்க்கன்றிக் காணஒண் ணாதே.
|
7
|
தூய்மணி தூய்அனல் தூய ஒளிவிடும் தூய்மணி தூய்அனல் தூர்அறி வார்இல்லை தூய்மணி தூய்அனல் தூரறி வார்கட்குத் தூய்மணி தூய்அனல் தூயவும் ஆமே.
|
8
|
தூயது வாளாக வைத்தது தூநெறி தூயது வாளாக நாதன் திருநாமம் தூயது வாளாக அட்டமா சித்தியாம் தூயது வாளாகத் தூய்அடிச் செல்லே.
|
9
|
பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை அருளது போற்றும் அடியவ ரன்றிச் சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின் மருளவர் சிந்தை மயங்குகின் றாரே.
|
10
|
Go to top |
வினையால் அசத்து விளைவ துணரார் வினைஞானந் தன்னிலே விடாதுந் தேரார் வினைவீட வீடென்னும் பேதமும் ஓதார் வினையாளர் மிக்க விளைவறி யாரே.34,
|
11
|