இருட்டறை மூலை யிருந்த கிழவி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி னருட்டி அவனை மணம்புணர்ந் தாளே.
|
1
|
தீம்புல னான திசையது சிந்திக்கில் ஆம்பு லனாய்அறி வார்க்கமு தாய்நிற்கும் தேம்புல னான தெளிவறி வார்கட்குக் கோம்புலன் நாடிய கொல்லையு மாமே.
|
2
|
இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி அருள்நீங்கா வண்ணமே ஆதி அருளும் மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப் பொருள்நீங்கா இன்பம் புலம்பயில் தானே.
|
3
|
இருள்சூ ழறையில் இருந்தது நாடிற் பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போல் மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.
|
4
|
மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி வெருட்டி வினைஅறுத் தின்பம் விளைத்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி அருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே.
|
5
|
Go to top |
கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர் கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர் கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல் பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.
|
6
|
செய்யன் கரியன் வெளியன் பசியனென் றெய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை ஐயனற் கண்ணல் லடுகரி போர்த்தவெங் கைய னிவனென்று காதல்செய் வீரே.
|
7
|
எய்திய காலங்கள் எத்தனை யாயினும் தையலும் தானும் தனிநா யகம்என்பர் வைகலும் தன்னை வணங்கு மவர்கட்குக் கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.
|
8
|
கண்டுகொண் டோம்இரண் டுந்தொடர்ந்தாங்கொளி பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர் வண்டுகொண் டாடும் மலர்வார் சடைஅண்ணல் நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.
|
9
|
அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் [கொட்டத்தில் எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும் உண்ணிற்ப வெல்லாம் ஒழிய முதல்வனைக் கண்ணுற்று நின்ற களியது வாமே.
|
10
|
Go to top |
பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும் மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும் குறப்பெண் குவிமுலை கோமள வல்லி சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.
|
11
|
தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன் பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும் ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத் தூங்கொளி நீலம் தொடர்தலு மாமே.
|
12
|
நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும் பணிகினும் பன்மலர் தூவிப் பணிவன் அணுகிய தொன்றறி யாத ஒருவன் அணுகும் உலகெங்கும் ஆவியு மாமே.
|
13
|
இருவி னைநேரொப்பில் இன்னருட் சத்தி குருவென வந்து குணமல நீக்கித் தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால் திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.
|
14
|
இரவும் பகலும் இறந்த இடத்தே குரவஞ்செய் கின்ற குழலியை உன்னி அரவசெய் யாமல் அவளுடன் சேரப் பரிவொன்றி யாளும் பராபரை தானே.
|
15
|
Go to top |
மாலை விளக்கும் மதியமும்ஞாயிறும் சால விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள் ஞானம் விளக்கிய நாதன்என் னுள்புகுந் தூனை விளக்கி உடனிருந் தானே. 17,
|
16
|