எப்பாழும் பாழாம் யாவுமாய் அன்றாகி முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே இப்பாழும் இன்னவா றென்ப திலாஇன்பத் தற்பரஞா னானந்தத் தான்அது வாகுமே.
|
1
|
மன்சத்தி ஆதி மணிஒளி மாசோபை அன்னதோ டொப்ப மிடல்ஒன்றா மாறது இன்னியல் உற்பலம் ஒண்சீர் நிறம் மணம்பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.
|
2
|
சத்தி சிவம்பர ஞானமும் சாற்றுங்கால் உய்த்த அனந்தம் சிவம்உயர் ஆனந்தம் வைத்த சொரூபத்த சத்தி வருகுரு உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.
|
3
|
உருஉற் பலம்நிறம் ஒண்மணம் சோபை தரம்நிற்ப போல்உயிர் தற்பரந் தன்னில் மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின் சொரூபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே.
|
4
|
நினையும் அளவில் நெகிழ வணங்கிப் புனையில் அவனைப் பொதியலும் ஆகும் எனையும்எங் கோன்நந்தி தன்னருள் கூட்டி நினையும் அளவில் நினைப்பித் தனனே.
|
5
|
Go to top |
பாலொடு தேனும் பழத்துள் இரதமும் வாலிய பேரமு தாகும் மதுரமும் போலும் துரியம் பொடிபட உள்புகச் சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.
|
6
|
அமரத் துவங்கடந் தண்டங் கடந்து தமரத்து நின்ற தனிமையன் ஈசன் பவளத்து முத்துப் பனிமொழி மாதர் துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.
|
7
|
மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச் சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப் பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச் சத்திய ஞானானந் தஞ்சார்ந்தான் ஞானியே.
|
8
|
சிவமாய் அவமான மும்மலம் தீர்ந்து பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத் தவமான சத்திய ஞானனந் தத்தே துவமார் துரியம் சொரூபம தாமே. 19,
|
9
|