இருந்தஇவ் வட்டங்கள் ஈரா றிரேகை இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி இருந்த மனைகளும் ஈராறு பத்தொன் றிருந்த மனையொன்றில் எய்துவன் தானே.
|
1
|
தான்ஒன்றி வாழ்இடம் தன்னெழுத் தேயாகும் தான்ஒன்றும் அந்நான்கும் தன்பேர் எழுத்தாகும் தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும் தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே.
|
2
|
அரகர என்ன அரியதொன் றில்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப் பன்றே.
|
3
|
எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம் எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும் ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப் பட்டது மந்திரம் பான்மொழி பாலே.
|
4
|
மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன் ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர் விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்டவல் லார்உயிர் காக்கவல் லாரே.
|
5
|
Go to top |
ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம் ஆலய மாக அமர்ந்தஅத் தூலம்போய் ஆலய மாக அறிகின்ற சூக்குமம் ஆலய மாக அமர்ந்திருந் தானே.
|
6
|
இருந்தஇவ் வட்டம் இருமூன் றிரேகை இருந்த அதனுள் இரேகைஐந் தாக இருந்த அறைகள் இருபத்தஞ் சாக இருந்த அறை ஒன்றில் எய்தும் மகாரமே.
|
7
|
மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை ஒகாரம் வளைத்திட் டுப்பிளந் தேற்றி யகாரம் தலையா இருகண் சிகாரமா நகார அகாரம்நற் காலது வாமே.
|
8
|
நாடும் பிரணவம் நடு இரு பக்கமும் ஆடும்அவர் வா அமர்ந்தங்கு நின்றது நாடும் நடுஉள் முகம்ந மசிவாய வாடும் சிவாயநம புறவட்டத் தாயதே.
|
9
|
ஆயும் சிவாய நமமசி வாயந ஆயும் நமசி வயய நமசிவா ஆயுமே வாய நமசியெனும் மந்திரம் ஆயும் சிகாரம்தொட் டந்தத் தடைவிலே.
|
10
|
Go to top |
அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின் அடையும் அறைஒன்றுக் கீரெழுத் தாக்கி அடையும் அகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும் அடைவின் எழுத்தைம்பத் தொன்றும் அமர்ந்ததே.
|
11
|
அமர்ந்த அரகர வாம்புற வட்டம் அமர்ந்த அரிகரி யாம்அதனுள் வட்டம் அமர்ந்த அசபையாம்அத னுள்வட்டம் அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே.
|
12
|
சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும் சூலத் தலையினில் சூழூம்ஓங் காரத்தால் சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத் தால்அப் பதிக்கும் அடைவது ஆமே.
|
13
|
அதுவாம் அகார இகார உகாரம் அதுவாம் எகார ஒகாரம தஞ்சாம் அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம் பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.
|
14
|
பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியில் நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம் ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.
|
15
|
Go to top |
இயலும்இம் மந்திரம் எய்தும் வழியில் செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன் புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண் முயலும் எழுத்துக்கு முன்னா யிருந்ததே.
|
16
|
ஆறெட் டெழுத்தின்மேல் ஆறும் பதினாலும் ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமும் சீறிட்டு நின்று சிவாய நமஎன்னக் கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.
|
17
|
அண்ணல் இருப்ப தவளக் கரத்துளே பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப் புண்ணிய வாளர் பொருளறி வார்களே.
|
18
|
அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும் மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே.
|
19
|
அவ்வுண்டு சவ்வுண் டனைத்தும்அங் குள்ளது கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வார்இல்லை கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச் சவ்வுண்டு சத்தி சதாசிவன் றானே.
|
20
|
Go to top |
அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம் அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம் அஞ்செழுத் துள்ளே அமர்ந்துநின் றானே.
|
21
|
கூத்தனைக் காணும் குறிபல பேசிடின் கூத்தன் எழுத்தின் முதலெழுத் தோதினால் கூத்தனொ டொன்றிடுங் கொள்கைய ராய்நிற்பர் கூத்தனைக் காணும் குறியது வாகுமே.
|
22
|
அத்திசைக் குள்நின் றனலை எழுப்பிய அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால் அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை அத்திசைக் குள்ளுற வாக்கினள் தானே.
|
23
|
தானே அளித்திடும் தையலை நோக்கினால் தானே அளித்திட்டு மேல்உற வைத்திடும் தானே அளித்த மகாரத்தை ஓதினால் தானே அளித்ததோர் கல்ஒளி யாமே.
|
24
|
கல்லொளி யேஎன நின்ற வடதிசைக் கல்லொளி யேஎன நின்றநல் லிந்திரன் கல்லொளி யேஎன நின்ற சிகாரத்தைக் கல்லொளி யேஎனக் காட்டிநின் றானே.
|
25
|
Go to top |
தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும் தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும் தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில் தானே எழுந்த மறையவ னாமே.
|
26
|
மறையவன் ஆக மதித்த பிறவி மறையவன் ஆக மதித்திடக் காண்பர் மறையவன் அஞ்செழுத் துள்நிற்கப் பெற்ற மறையவன் அஞ்செழுத் தாம்அவர் தாமே.
|
27
|
ஆகின்ற பாதமும் அந்நவ்வாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகரரமாம் ஆகின்ற சீஇரு தோள்வவ்வாய்க் கண்டபின் ஆகின்ற அச்சுடர் அவ்வியவ் வாமே.
|
28
|
அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையும் செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும் ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடின் பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.
|
29
|
பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம் வரந்தரும் மந்திரம் வாய்த்திட வாங்கித் துரந்திடு மந்திரம் சூழ்பகை போக உரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.
|
30
|
Go to top |
ஓமென் றெழுப்பித்தம் உத்தம நந்தியை நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை ஆமென் றெழுப்பிஅவ் வாரறி வார்களே மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.
|
31
|
ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும் பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும் ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப் பாகொன்றி நிற்கும் பராபரன் றானே.
|
32
|
பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப் பரமா யநவசிம பார்க்கில் மவயநசி பரமா யசியநம வாபரத் தோதில் பரமாய வாசி மயநவாய் நின்றதே.
|
33
|
நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும் நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும் நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில் நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.
|
34
|
நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம் மன்றது வா நின்ற மாயநன் னாடனைக் கன்றது வாகக் கறந்தனன் நந்தியும் குன்றிடை நின்றிடுங் கொள்கையன் ஆமே.
|
35
|
Go to top |
கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து கொண்டஇச் சக்கரம் கூத்தன் எழுத்தைந்தும் கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.
|
36
|
வெளியில் இரேகை இரேகையில் அத்தலைச் சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதம் தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.
|
37
|
அகார உகார சிகாரம் நடுவா வகாரமொ டாறும் வளியுடன் கூடிச் சிகார முடனே சிவஞ்சிந்தை செய்ய ஒகார முதல்வன் உவந்துநின் றானே.
|
38
|
அற்ற இடத்தே அகாரம தாவது உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச் செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள் குற்றம் அறுத்தபொன் போலும் குளிகையே.
|
39
|
அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால் உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும் மவ்வென்றென் னுள்ளே வழிபட்ட நந்தியை எவ்வண்ணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.
|
40
|
Go to top |
நீரில் எழுத்திவ் வுலகர் அறிவது வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்களே ஊனில் எழுத்தை உணர்கிலார் தாமே.
|
41
|
காலை நடுவுறக் காயத்தில் அக்கரம் மாலை நடுவுற ஐம்பதும் ஆவன மேலை நடுவுற வேதம் விளம்பிய மூலன் நடுவுற முத்திதந் தானே.
|
42
|
நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை ஓவிய ராலும் அறியஒண் ணாதது தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.
|
43
|
அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம் அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர் அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின் அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.
|
44
|
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்கும் சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர் அந்தி தொழுதுபோய் ஆர்த்தகன் றார்களே.
|
45
|
Go to top |
சேவிக்கும் மந்திரம் செல்லும் திசைபெற ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில் ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.
|
46
|
அருவினில் அம்பரம் அங்கெழும் நாதம் பெருகு துடியிடை பேணிய விந்து மருவி யகார சிகாரம் நடுவாய் உருவிட ஆறும் உறுமந் திரமே.
|
47
|
விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச் சந்திர னோடே தலைப்படு மாயிடின் அந்தர வானத் தமுதம்வந் தூறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.
|
48
|
ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர் ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள் வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு ஓரெழுத் தாலே உயிர்பெறல் ஆமே.
|
49
|
ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும் ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர் சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.
|
50
|
Go to top |
விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப் பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க் கந்தர வாகரம் கால்உடம் பாயினாள் அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.
|
51
|
ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்ப தெழுத்தே அனைத்தா கமங்களும் ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின் ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.
|
52
|
அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன் அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன் அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன் அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.
|
53
|
வீழ்ந்தெழல் ஆம்விகிர் தன்திரு நாமத்தைச் சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச் சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும் போந்திடும் என்னும் புரிசடை யோனே.
|
54
|
உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும் பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும் விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே.
|
55
|
Go to top |
ஐந்தின் பெருமையே அகலிட மாவதும் ஐந்தின் பெருமையே ஆலய மாவதும் ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும் ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.
|
56
|
வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும் நீரெழுத் தாய்நிலம் தாங்கியும் அங்குளன் சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத் தோரெழுத் தீசனும் ஒண்சுட ராமே.
|
57
|
நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு நாலாம் எழுத்தது நன்னெறி தானே.
|
58
|
இயைந்தனள் ஏந்திழை என்உளம் மேவி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் பயந்தனை ஓரும் பதமது பற்றும் பெயர்த்தனன் மற்றுப் பிதற்றறுத் தேனே.
|
59
|
ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை ஓமத்தி லேஉதம் பண்ணும் ஒருத்திதன் நாம நமசிவ என்றிருப் பாருக்கு நேமத் தலைவி நிலவிநின் றாளே.
|
60
|
Go to top |
பட்ட பரிசே பரன்அஞ் செழுத்தின் இட்டம் அறிந்திட் டிரவு பகல்வர நட்டம தாடும் நடுவே நிலயங்கொண் டட்டதே சப்பொருள் ஆகிநின் றானே.
|
61
|
அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் மலமாய் வரும்முப்பத் தாறில் சிகாரம் சிவமா வகாரம் வடிவா யகாரம் உயிரென் றறையலும் ஆமே.
|
62
|
நகார மகார சிகாரம் நடுவா வகாரம் இரண்டு வளியுடன் கூடி ஒகாரம் முதற்கொண் டொருகால் உரைக்க மகார முதல்வன் மனத்தகத் தானே.
|
63
|
அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே அஞ்சாதி ஆதி யகம்புகல் ஆமே.
|
64
|
ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த நகராதி மாற்றி மகாராதி நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும் சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.
|
65
|
Go to top |
மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும் அருமந்த யோகமும் ஞானமு மாகும் தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே அருள்தங்கி அச்சிவ மாவது வீடே.
|
66
|
அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின் நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம் வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை தஞ்சம் இதுஎன்று சாற்றுகின் றேனே.
|
67
|
சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச் சிவாயவொ டவ்வே சிவனுரு வாகும் சிவாயவொ டவ்வும் தெளியவல் லார்கள் சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே.
|
68
|
சிகார வகார யகார முடனே நகார மகார நடுவுற நாடி ஒகார முடனே ஒருகால் உரைக்க மகார முதல்வன் மதித்துநின் றானே.
|
69
|
நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள் அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத் தம்முத லாகும் சதாசிவன் றானே. |
70
|
Go to top |
நவமும் சிவமும் உயிர்பர மாகும் தவம்ஒன் றிலாதன தத்துவ மாகும் சிவம்ஒன்றி ஆய்பவர் ஆதர வால்அச் சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.
|
71
|
கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள் தேடி யதனைத் தெளிந்தறி யீரே.
|
72
|
எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.
|
73
|
எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி யிட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில் வட்டத்தி லேஅறை நாற்பத்தெட் டும்இட்டுச் சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.
|
74
|
தானவர் சிட்டர் சதுரர் இருவர் ஆனஇம் மூவரோ டாற்ற அராதிகள் ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும் சேனையும் செய்சிவ சக்கரந் தானே.
|
75
|
Go to top |
பட்டன மாதவம் ஆற்றும் பராபரம் விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர் எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம் ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.
|
76
|
சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றான அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.
|
77
|
வித்தாஞ் செகமய மாக வரைகீறி நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின் உத்தாரம் பன்னிரண் டாதிகலை தொகும் பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.
|
78
|
கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடைக் கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப் பண்பழி யாத பதிவழி யேசென்று நண்பழி யாமே நமஎன லாமே.
|
79
|
புண்ணிய வானவர் பூமழை தூவிநின் றெண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம் நண்ணுவர் நண்ணி நமஎன்னும் நாமத்தைக் கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.
|
80
|
Go to top |
ஆறெழுத் தாகுவ ஆறு சமயங்கள் ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர் சாவித் திரியில் தலைஎழுத் தொன்றுளது பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.
|
81
|
எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச் சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டே ஒட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே.
|
82
|
நம்முதல் அவ்வொடு நாவின ராகியே அம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு உம்முத லாக உணர்பவர் உச்சிமேல் உம்முத லாயவன் உற்றுநின் றானே.
|
83
|
நின்ற அரசம் பலகைமேல் நேராக ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம் துன்ற மெழுகைஉள் பூசிச் சுடரிடைத் தன்றன் வெதுப்பிடத் தம்பனம் காணுமே.
|
84
|
கரண இறலிப் பலகை யமன்திசை மரணமிட் டேட்டில் மகார எழுத்திட்டு அரணமில் ஐங்காயம் பூசி அடுப்பில் முரணப் புதைத்திட மோகனம் ஆகுமே.
|
85
|
Go to top |
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில் பாங்கு படவே பலாசப் பலகையில் காண்கரு வேட்டில் கடுப்பூசி விந்துவிட் டோங்காரம் வைத்திடு உச்சா டனத்துக்கே.
|
86
|
உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில் பச்சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து முச்சது ரத்தில் முதுகாட்டில் வைத்திடு வைச்சபின் மேலுமோர் மாரணம் வேண்டிலே.
|
87
|
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசிஏய்ந்த அகார உகார எழுத்திட்டுவாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.
|
88
|
எண்ஆக் கருடணைக் கேட்டின் யகாரமிட்டெண்ணாப் பொன் நாளில் எழுவெள்ளி பூசிடாவெண்ணாவ லின்பல கையிட்டு மேற்குநோக்கெண்ணாஎழுத்தொடண்ணாயிரம்வேண்டியே. 3,
|
89
|