மாமாயை மாயை வயிந்தவம் வைகரி ஓமாயை நாரணி ஓராறு கோடியில் தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள் ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே.
|
1
|
திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப் பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மனி என்ன வருபல வாய்நிற்கும் மாமாது தானே.
|
2
|
தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத் தானான மூவுரு ஓருருத் தன்மையள் தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி தானான போகமும் முத்தியும் நல்குமே.
|
3
|
நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள் பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை நல்கும் பரை அபிராமி அகோசரி புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே.
|
4
|
தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில் ஏரணி அங்குச பாசம் எழில்முடி காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.
|
5
|
Go to top |
குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள் கொண்ட அரத்த நிறம்மன்னு கோலத்தள் கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச் சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.
|
6
|
நின்ற திரிபுரை நீளும் புராதனி குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை நன்றறி கண்டிகை நாற்கால் கரீடிணி துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.
|
7
|
சுத்தஅம் பாரத் தனத்தி சுகோதையள் வத்துவ மாய்ஆளும் மாசத்தி மாபரை அத்தகை யாயும் அணோரணி தானுமாய் வைத்தஅக் கோலம் மதியவ ளாகுமே.
|
8
|
அவளை அறியா அமரரும் இல்லை அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.
|
9
|
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர் அறிவார் அருவுரு வாம்அவள் என்பர் அறிவார் கருமம் அவள்இச்சை என்பர் அறிவார் பரனும் அவளிடத் தானே.
|
10
|
Go to top |
தான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி ஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன் வான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம் கோன்எங்கும் நின்ற குறிபல பாரே.
|
11
|
பராசத்தி மாசத்தி பல்வகை யாலும் தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய் உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம் புராசத்தி புண்ணிய மாகிய போகமே.
|
12
|
போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும் பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும் ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும் பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.
|
13
|
கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச் செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை நம்பிஎன் னுள்ளே நயந்துவைத் தேனே.
|
14
|
வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பாரபரச் சித்தக் கரணச் செயல்களும் செய்திடும் சத்தியும் வித்தைத் தலைவிய ளாம.
|
15
|
Go to top |
தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம் நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.
|
16
|
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள.
|
17
|
ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.
|
18
|
உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும் புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக் கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே.
|
19
|
அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி புளியுறு புன்பழம் போல்உள்ளே நோக்கித் தெளியுறு வித்துச் சிவகதி காட்டி ஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளே.
|
20
|
Go to top |
உண்டில்லை என்ன உருச்செய்து நின்றது வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தன்னொடும் மண்டிலம் மூன்றுற மன்னிநின் றாளே.
|
21
|
நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச் சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.
|
22
|
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.
|
23
|
தோத்திரம் செய்து தொழுது துணையடி வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும் பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும் பார்த்திடும் பூப்பின்னை ஆகுமாம் ஆதிக்கே.
|
24
|
ஆதி விதம்மிகுத் தண்டந்த மால்தங்கை நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப் பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல் சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே.
|
25
|
Go to top |
மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல் வேதாதி நூலின் விளங்கும் பராபரை ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள் நாதாதி நாதத்து நல்லரு ளாளே.
|
26
|
அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர் பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார் மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.
|
27
|
ஆன வராக முகத்தி பதத்தினில் ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே.
|
28
|
ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.
|
29
|
தானே தலைவி எனநின்ற தற்பரை தானே உயர்வித்துத் தந்த பதினாலும் மானோர் தலமும் மனமும்நற் புத்தியும் தானே சிவகதித் தன்மையு மாமே. 6,
|
30
|
Go to top |